உள்ளடக்கத்துக்குச் செல்

வவுனியா தேர்தல் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வவுனியா தேர்தல் தொகுதி (Vavuniya Electorate) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகரையும் அதன் சுற்றவுள்ள பகுதிகளையும் உள்ளடக்கியதாகும்.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் வவுனியா தேர்தல் தொகுதி வன்னித் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல்உறுப்பினர்கட்சிகாலம்
1947 செ. சுந்தரலிங்கம் சுயேட்சை 1947-1952
1952 1952-1956
1956 1956-1960
1960 (மார்ச்) 1960-1960
1960 (சூலை) தா. சிவசிதம்பரம் 1960-1965
1965 அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 1965-1970
1970 எக்ஸ். எம். செல்லத்தம்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி 1970-1977
1977 தா. சிவசிதம்பரம் தமிழர் விடுதலைக் கூட்டணி 1977-1989

1947 தேர்தல்கள்

[தொகு]

1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[2]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
செ. சுந்தரலிங்கம்சுயேட்சைமரம்4,02666.61%
 த. மு. சபாரத்தினம்அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்கரண்டி2,01833.39%
தகுதியான வாக்குகள்6,044100.00%
நிராகரிக்கப்பட்டவை132
மொத்த வாக்குகள்6,176
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்11,099
வாக்கு வீதம்55.64%

1952 தேர்தல்கள்

[தொகு]

24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
செ. சுந்தரலிங்கம்சுயேட்சைவிண்மீன்6,01966.83%
யு. பி. தசநாயக்காசுயேட்சைசாவி1,49716.62%
 த. மு. சபாரத்தினம்அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்குடை1,39815.52%
கே. வேலுப்பிள்ளைசுயேட்சைகதிரை931.03%
தகுதியான வாக்குகள்9,007100.00%
நிராகரிக்கப்பட்டவை104
மொத்த வாக்குகள்9,111
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்13,093
வாக்கு வீதம்69.59%

1956 தேர்தல்கள்

[தொகு]

5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[4]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
செ. சுந்தரலிங்கம்சுயேட்சை (தமிழ் எதிர்ப்பு முன்னணி)மரம்6,85378.69%
பி. தர்மலிங்கம்சுயேட்சைசக்கரம்1,85621.31%
தகுதியான வாக்குகள்8,709100.00%
நிராகரிக்கப்பட்டவை69
மொத்த வாக்குகள்8,778
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்15,946
வாக்கு வீதம்55.05%

1960 (மார்ச்) தேர்தல்கள்

[தொகு]

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[5]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
தா. சிவசிதம்பரம்சுயேட்சைசூரியன்5,37043.28%
செ. சுந்தரலிங்கம்சுயேட்சைகப்பல்4,23134.10%
பி. முத்தையாதோடம்பழம்1,46911.84%
 எஸ். சுப்பிரமணியம்இலங்கைத் தமிழரசுக் கட்சி[6]வீடு1,33810.78%
தகுதியான வாக்குகள்12,408100.00%
நிராகரிக்கப்பட்டவை107
மொத்த வாக்குகள்12,515
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்18,469
வாக்கு வீதம்67.76%

1960 (சூலை) தேர்தல்கள்

[தொகு]

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
தா. சிவசிதம்பரம்சுயேட்சைஈருருளி7,39357.71%
 ஜி. பி. வின்சன்ட்இலங்கைத் தமிழரசுக் கட்சி[6]வீடு5,41842.29%
தகுதியான வாக்குகள்12,811100.00%
நிராகரிக்கப்பட்டவை56
மொத்த வாக்குகள்12,867
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்18,469
வாக்கு வீதம்69.67%

1965 தேர்தல்கள்

[தொகு]

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[8]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 தா. சிவசிதம்பரம்அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்ஈருருளி7,26540.33%
 ஜி. பி. வின்சன்ட்இலங்கைத் தமிழரசுக் கட்சி[6]வீடு4,51225.05%
செ. சுந்தரலிங்கம்மரம்3,95221.94%
வி. சிறிவர்தனகதிரை8724.84%
ஆரியவன்ச குணசேகராகுடை7444.13%
 டபிள்யூ. எஸ். பெரேராமகாஜன எக்சத் பெரமுனசக்கரம்4362.42%
எஸ், சிறினிவாசன்சுயேட்சைதராசு2311.28%
தகுதியான வாக்குகள்18,012100.00%
நிராகரிக்கப்பட்டவை130
மொத்த வாக்குகள்18,142
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்24,701
வாக்கு வீதம்73.45%

1970 தேர்தல்கள்

[தொகு]

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[9]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 எக்ஸ். எம். செல்லத்தம்புஇலங்கைத் தமிழரசுக் கட்சி[6]வீடு10,94742.99%
 தா. சிவசிதம்பரம்அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்ஈருருளி10,67441.92%
 எஸ். பத்மநாதன்இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிவிண்மீன்3,12012.25%
எஸ். எம். கே. சுபசிங்கதராசு5842.29%
ஏ. டி. ஏ. செனிவிரத்தினமரம்1370.54%
தகுதியான வாக்குகள்25,462100.00%
நிராகரிக்கப்பட்டவை116
மொத்த வாக்குகள்25,578
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்31,650
வாக்கு வீதம்80.82%

1977 தேர்தல்கள்

[தொகு]

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[10]:

வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 தா. சிவசிதம்பரம்தமிழர் விடுதலைக் கூட்டணிசூரியன்13,82159.02%
 கே. ரி. புலேந்திரன்ஐக்கிய தேசியக் கட்சியானை9,44440.33%
யு. சுபசிங்ககண்1510.64%
தகுதியான வாக்குகள்23,416100.00%
நிராகரிக்கப்பட்டவை80
மொத்த வாக்குகள்23,496
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்28,450
வாக்கு வீதம்82.59%

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தா. சிவசிதம்பரம் உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள்[11].

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம். Archived from the original on 2010-11-27. Retrieved 2012-12-07.
  2. "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2012-12-07.
  3. "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2012-12-07.
  4. "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2012-12-07.
  5. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. Retrieved 2012-12-07.
  6. 1 2 3 4 சமஷ்டிக் கட்சி எனவும் அழைக்கப்பட்டது
  7. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2012-12-07.
  8. "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. Retrieved 2012-12-07.
  9. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. Retrieved 2012-12-07.
  10. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. Retrieved 2012-12-07.
  11. Wickramasinghe, Wimal (18 சனவரி 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2011-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வவுனியா_தேர்தல்_தொகுதி&oldid=3570986" இலிருந்து மீள்விக்கப்பட்டது