உள்ளடக்கத்துக்குச் செல்

உருசியாவின் நான்காம் இவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொடூரமான இவான்
Ivan the Terrible
அரசு வரலாற்று அருங்காட்சியகத்தில் 18வது நூற்றாண்டு ஓவியம்
அனைத்து உருசியாக்களுக்கும் சார்
ஆட்சிக்காலம்16 சனவரி 1547 – 28 மார்ச் [யூ.நா. 18 மார்ச்] 1584
முடிசூடல்16 சனவரி 1547
பின்னையவர்முதலாம் பியோதர்
மாசுக்கோவின் மகா இளவரசர்
ஆட்சிக்காலம்3 திசம்பர் 1533 – 16 சனவரி 1547
முன்னையவர்மூன்றாம் வாசிலி
பிறப்பு25 ஆகத்து 1530
கோலோமென்சுகோயெ, மாசுக்கோ பெருங் குறுநாடு
இறப்பு28 மார்ச் [யூ.நா. 18 மார்ச்] 1584
(அகவை 53)
மாஸ்கோ, உருசியா
புதைத்த இடம்
ஆர்செஞ்சல் பேராலயம், மாசுக்கோ
துணைவர்அனசுட்டாசியா ரோமனோவா
மாரியா டெம்ருக்கோவ்னா
மார்ஃபா சோபகினா
அன்னா கோல்டொவ்சுகயா
அன்னா வாசில்சிகோவா
வாசிலிசா மெலென்டைவா
மாரியா டோல்கோருகாயா
மாரியா நகாயா
குழந்தைகளின்
#குழந்தைகள்
திமிட்ரி இவானோவிச் (1552-53)
இவான் இவானோவிச்
முதலாம் பியொடோர்
திமிட்ரி இவானோவிச் (பி.1582)
பெயர்கள்
இவான் வாசில்யெவிச்
அரச மரபுரூரிக்
தந்தைஉருசியாவின் மூன்றாம் வாசிலி
தாய்எலெனா கிளின்சுக்கயா
மதம்உருசிய மரபுவழித் திருச்சபை

இவான் நான்காமவன் வசீலியெவிச் (Ivan IV Vasilyevich, உருசியம்: Ива́н Васи́льевич, ஒ.பெ Ivan Vasilevich; 25 ஆகத்து 1530 – 28 மார்ச் [யூ.நா. 18 மார்ச்] 1584),[1] பரவலாக கொடூரமான இவான் (Ivan the Terrible) அல்லது அச்சமூட்டும் இவான் (Ivan Grozny), மாஸ்கோ பெரிய குறுமன்னராட்சியில் இளவரசராக 1533 முதல் 1547 வரை இருந்தவரும் 1547 முதல் இறக்கும்வரை சாராகவும் இருந்தவரும் ஆவார். இவரது நீண்ட ஆட்சியில் கசன், அசுட்டிரகன், சைபீரிய ஆட்சிகளை வெற்றி கண்டு உருசியாவின் பரப்பளவை ஏறத்தாழ ஒரு பில்லியன் ஏக்கர்கள், 4,046,856 km2 (1,562,500 sq mi)[2] அளவிற்கு விரிவுபடுத்தினார். இவற்றால் உருசியாவை பன்முகப் பண்பாடுடைய நாடாக மாற்றினார். பழங்கால அரசாக இருந்த மாசுக்கோ குறுநாட்டை ஓர் பேரரசாக மாற்றி அதன் சாராக முடிசூடிக் கொண்டார்.

வரலாற்றுச் சான்றுகள் இவானை முற்றிலும் வெவ்வேறானவனாகக் காட்டுகின்றன: அறிவாளியாகவும் கடவுள் நம்பிக்கை மிகுந்தவராகவும் விவரிக்கப்படும் இவானுக்கு கடுங்கோபமும் உளப் பிறழ்ச்சி வெளிப்பாடுகளும் உண்டாகுமென பதியப்பட்டிருக்கின்றன.[3] அகவை கூடும்போது இவையும் கூடின; இவற்றால் ஆட்சியும் பாதிக்கப்பட்டது.[4][5] இத்தகைய மனநோய் வெளிப்பாட்டின்போது தனக்கு அடுத்து பதவியேற்க தயார் செய்திருந்த மகன் இவான் இவனோவிச்சைக் கொன்றார். இதனால் இவருக்கு அடுத்து மனவளர்ச்சிக் குறையால் பாதிக்கப்பட்டிருந்த இவானின் மற்றொரு மகன்[6] முதலாம் பியோதர் முடிசூடினார். இவானின் பங்காற்றல் சிக்கலாக இருந்தது: சிறந்த பேராளராக விளங்கினார், கலை மற்றும் வணிகத்தை ஊக்குவித்தார், முதல் அச்சுக்கூடத்தை நிறுவினார், பொதுமக்களிடையே மிகவும் புகழ் பெற்றிருந்தார். இவரது மனச்சிதைவும் உருசிய மேட்டுக்குடியினரை கொடூரமாக நடத்தியதும் புகழ் பெற்றது. இவரது கொடுமைக்கும் மனநோய்க்கும் நோவோகார்டு படுகொலை காட்டாக விளங்குகின்றது.[7]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 28 March: This Date in History. Webcitation.org. Retrieved 2011-12-07
  2. Russia: Land of the Czars, History Channel
  3. Russian Architecture and the West by Dmitriĭ Olegovich Shvidkovskiĭ, 2007. p.147
  4. The Origins of Autocracy: Ivan the Terrible in Russian History By Alexander Yanov, p.208
  5. Government Leaders, Military Rulers and Political Activists edited by David W. Del Testa p.91
  6. History International Channel coverage, 14:00–15:00 EDST on 10 June 2008
  7. History's Worst Dictators: A Short Guide to the Most Brutal Rulers By Michael Rank

வெளி இணைப்புகள்[தொகு]