வில்லியம் என்றி பிக்கெரிங்
வில்லியம் என்றி பிக்கெரிங் William Henry Pickering | |
---|---|
![]() பிக்கெரிங், 1909 | |
பிறப்பு | பிப்ரவரி 15, 1858 போசுடன் மசாசூச்ட் |
இறப்பு | சனவரி 16, 1938 மண்டேவில்லி, ஜமைக்கா | (அகவை 79)
துறை | வானியல் |
கல்வி | மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம் (1897) |
விருதுகள் | இலாலண்டே பரிசு (1905) பிரிக்சு யூல்சு ஜான்சென் பரிசு (1909) |
வில்லியம் என்றி பிக்கெரிங் (William Henry Pickering) (பிப்ரவரி 15, 1858 - ஜனவரி 16, 1938) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.[1] இவர் பல வான்காணகங்களைக் கட்டி நிறுவினார். அவற்றில் பெர்சிவால் உலோவெலும் பிளேகுசுடாபும் அடங்கும்.இவர் சூரிய ஒளிமறைப்புத் தேட்டங்களில் கலந்துகொண்டார் நிலாவின் மொத்தல் குழிப்பள்ளங்களின் ஆய்விலும் ஈடுபட்டுள்ளார். எராட்டோதெனெசு குழிப்பள்ளத் தோற்றத்தின் மாற்றங்கள் நிலாவில் உள்ள பூச்சிகளால் எற்படுகிறது எனக் கருதினார்.[2]இவர் தன் பிந்தைய வாழ்க்கையின் பெரும்பகுதியை ஜமைக்காவில் அமைந்த இவரது சொந்த வான்காணகத்தில் கழித்தார்.
விருதுகள்[தொகு]
இவர் 1905 இல் பிரிக்சு இலாலண்டே பரிசு பெற்றார்.1909 இல் பிரிக்சு ஜான்சென் பரிசு பெற்றார். 784 பிக்கெரிங்கியா குறுங்கோளும் நிலாவின் பிக்கெரிங் குழிப்பள்லமும் செவ்வாயின் பிக்கெரிங் குழிப்பள்ளமும் இவரது நினைவாகவும் இவரது அண்ணனாகிய எட்வார்டு சார்லசு பிக்கரிங் நினைவாகவும் இணைந்து பெயர் இடப்பட்டுள்ளன.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;bio
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Moore, Patrick (1999). The wandering astronomer. Bristol; Philadelphia: Institute of Physics Pub.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780750306935. https://archive.org/details/wanderingastrono0000moor.
வெளி இணைப்புகள்[தொகு]
- நினைவேந்தல்கள்
- JRASC 32 (1938) 157 (one paragraph)
- MNRAS 99 (1939) 328
- PASP 50 (1938) 122