நெல்லை சிவா
நெல்லை சிவா | |
---|---|
பிறப்பு | சிவநாதன் சண்முகவேலன் ராமமூர்த்தி 16 சனவரி 1952 தமிழ்நாடு, திருநெல்வேலி இராதாபுரம், பணகுடி, வேப்பிலாங்குளம், |
பணி | திரைப்பட நடிகர், தொலைக்காட்சி நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1985 – தற்போது வரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | வெற்றிக் கொடி கட்டு, கண்ணும் கண்ணும் |
தொலைக்காட்சி | பாண்டியன் ஸ்டோர்ஸ் (தொலைக்காட்சித் தொடர்), மாமா மாப்பிள்ளை. |
நெல்லை சிவா (Nellai Siva) என்ற திரைப்பெயரால் நன்கு அறியப்பட்ட சிவநாதன் சண்முகவேலன் ராமமூர்த்தி (பிறப்பு 16 சனவரி 1952), என்பவர் ஒரு நகைச்சுவை நடிகர் மற்றும் துணை நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார்.[1] இவர் பெரும்பாலும் நகைச்சுவை காட்சிகளில் நடிக்கிறார். நகைச்சுவை நடிகர் வடிவேலு உடனான நகைச்சுவை காட்சிகளில் ஒன்றாக கண்ணும் கண்ணும் படத்தில் உள்ளது. மகாபிரபு, வெற்றிக் கொடி கட்டு, கண்ணும் கண்ணும் போன்ற பிரபல திரைப்படங்களில் இவர் பணியாற்றியுள்ளார். திரைப்படங்களில் இவர் முற்றிலும் நெல்லை வட்டார வழக்கில் பேசும் வழக்கம் உள்ளவர். இது இவரை மற்ற துணை நடிகர்களிடமிருந்து தனித்துவமாகக் காட்டுகிறது. இவர் தனது வாழ்க்கையில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் படம் 1985 இல் வெளியான ஆண்பாவம் ஆகும்.[2][3]
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
நெல்லை சிவா 16 சனவரி 1952 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வேப்பிலையன்குளம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். சிவாஜி கணேசனின் தீவிர ரசிகராக இருந்த இவர், திரைப்படங்களில் நடிப்பதற்காக சென்னை வந்தார். அந்த நேரத்தில் நடிப்பு வாய்ப்புகளைத் தேடியபடி இருந்த நடிகர்களான மன்சூர் அலி கான் மற்றும் போண்டா மணி ஆகியோரை சந்தித்து நல்ல நட்பைப் பெற்றார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக போராடிய பின்னர், பாக்யராஜினை சந்தித்தார். சென்னை தொலைக்காட்சியின் தொடர்களில் நடித்துப் புகழ் பெற்றார், மேலும் "அவரை தான் சினிமாவில் வெற்றிபெறச் செய்ததற்காக" இவர் பாராட்டுகிறார்.[4] அப்போதைய பிரபல நடிகர் நாகேசுடன் இணைந்து நடித்து தனது திரைப்பட வாழ்க்கையையும் தொடங்கினார். நாகேசு இவரது திருநெல்வேலி வட்டாரமொழியை படப்பிடிப்புத் தளத்தில் பாராட்டி, அதை நகைச்சுவைக்கு பயன்படுதிக் கொள்ள ஊக்குவித்தார்.[5]
திரைப்பட வாழ்க்கை[தொகு]
1985ஆம் ஆண்டில் பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். பின்னர், இவர் சிறிய வேடங்களில் நடித்துவந்தார். 1990களின் பிற்பகுதியில் இவர் ஒரு நகைச்சுவை துணைநடிகராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். வெற்றிக் கொடி கட்டு என்ற படத்தில் தேநீர் கடை உரிமையாளராக நடித்தார். இத்திரைப்படத்திற்குப் பின்னர், இவர் மெல்லமெல்ல சாமி, அன்பே சிவம், திருப்பாச்சி, கிரீடம் போன்ற பெரிய திரைப்படங்களில் நடிக்குமளவு முன்னேற்றம் பெற்றார். மேலும் இவர் 2000களில் வடிவேலு மற்றும் விவேக் ஆகியோருடன் படங்களில் நடித்தார். நடிகர் வடிவேலு உடன் நடித்த திரைப்படங்களில் இவரது நகைச்சுவை வேடங்களுக்காக இவர் மிகவும் பிரபலமானார்.[6][7][8][9]
தொலைக்காட்சி வாழ்க்கை[தொகு]
2020 ஆம் ஆண்டில், விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் மாமா மாப்பிள்ளையிலும் கலந்து கொண்டார்.
திரைப்படவியல்[தொகு]
இது ஒரு பகுதி திரைப்படவியல் ஆகும். நீங்கள் இதை விரிவாக்கலாம்.
குறிப்புகள்[தொகு]
- ↑ https://cinema.vikatan.com/humoursatire/8393--2
- ↑ "Kollywood Movie Actor Nellai Siva Biography, News, Photos, Videos" (en).
- ↑ "Nellai Siva: Movies, Photos, Videos, News, Biography & Birthday | eTimes".
- ↑ https://www.youtube.com/watch?v=1KRNwM066oc
- ↑ https://www.youtube.com/watch?v=3_FiV9sURVI
- ↑ "Exclusive biography of #NellaiSiva and on his life." (en).
- ↑ "Nellai Siva [Comedy & Character Actor]" (en) (2019-09-04).
- ↑ "Nellai Siva" (en).
- ↑ https://web.archive.org/web/20041208032649/http://www.behindwoods.com/News/26-11-04/nellaisiva.htm