உள்ளடக்கத்துக்குச் செல்

களஹண்டி சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
களஹண்டி சமஸ்தானம்
Karond State
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா

1005–1948
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of களஹண்டி
Location of களஹண்டி
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் பாட்னா சமஸ்தானத்தின் தெற்கில் களஹண்டி சமஸ்தானம்
தலைநகரம் பவானிபாட்னா
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1005
 •  சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1948
Population
 •  1892 224,548 
தற்காலத்தில் அங்கம் களஹாண்டி மாவட்டம், ஒடிசா, இந்தியா

களஹண்டி சமஸ்தானம் (Kalahandi State, also known as Karond State)[1] இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் பவானிபாட்னா நகரம் ஆகும். இது தற்கால ஒடிசா மாநிலத்தின் களஹண்டி மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1892-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, களஹண்டி சமஸ்தானம் 9,700 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 2,24,548 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். இதன் வடக்கில் பாட்னா சமஸ்தானம் இருந்தது.

வரலாறு

[தொகு]

கிபி 1005-ஆம் ஆண்டு முதல் நாக வம்சத்தினர் களஹண்டிப் பகுதிகளை ஆண்டனர்.[2] of Eastern India, beginning to rule the Kalahandi area in 1005 CE.[3][4][5]பின்னர் கீழைக் கங்கர் (1078–1434) ஆட்சியில் சென்றது. அதன் பின்னர் களஹண்டி சமஸ்தானம் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்தது.

1803-ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது ஆங்கில-மராட்டிய போரின் முடிவில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றனர். இதனால் மராட்டியர் வசமிருந்த களஹண்டி உள்ளிட்ட ஒடிசா பகுதிகள் ஆங்கிலேயரின் கீழ்வந்தது.1807-ஆம் ஆண்டு முதல் களஹண்டி சமஸ்தான மன்னர்கள் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் கிழக்கிந்திய முகமையின் கீழ் செயல்பட்டது. பாட்னா சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

களஹண்டி சமஸ்தானம் 1912-ஆம் ஆண்டு முதல் 1936=வது ஆண்டு வரை பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்துடன் இணக்கப்பட்டது. பின்னர் 1936-ஆம் ஆண்டில் ஒரிசா மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி களஹண்டி சமஸ்தானம் 1948-ஆம் ஆண்டில் ஒரிசா மாகாணத்தில் சேர்க்கப்பட்டது. மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ஒரியா மொழி பேசும் பகுதிகளைக் கொண்டு 1 நவம்பர் 1956 அன்று ஒடிசா மாநிலம் நிறுவப்பட்ட போது பாட்னா சமஸ்தானப் பகுதிகள் களஹாண்டி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

படக்காட்சியகம்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1.   "Kalahandi". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 15. (1911). Cambridge University Press. 
  2. ODISHA DISTRICT GAZETTEERS KALAHANDI (PDF), GAD, Govt of Odisha, 1988, p. 53
  3. ODISHA DISTRICT GAZETTEERS KALAHANDI (PDF), GAD, Govt of Odisha, 1988, pp. 53–71
  4. J. P Singh Deo, History and Culture of Kalahandi: Political Scenario of Kalahandi, Feb 2010, page: 41-43
  5. "Archived copy". Archived from the original on 23 September 2010. பார்க்கப்பட்ட நாள் 11 November 2010.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=களஹண்டி_சமஸ்தானம்&oldid=3759204" இலிருந்து மீள்விக்கப்பட்டது