லோபம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோபம்பா
lwbmbh
நகரம்
நாடு சுவாசிலாந்து
மாவட்டம்ஓகோ மாவட்டம்
ஏற்றம்694 m (2,277 ft)
மக்கள்தொகை
 (2006)
 • மொத்தம்11,000
நேர வலயம்ஒசநே+2 (தென்னாப்பிரிக்க சீர்தர நேரம்[2])
Area code416 (நாட்டுக் குறியீடு +268)[3]
ஐஎசுஓ 3166 குறியீடுSZ/SWZ[4]
இணையதளம்www.thekingdomofswaziland.com
மூன்றாம் சுவாதி, சுவாசிலாந்தின் மன்னர்
ஏப்ரல் 1986–இன்றுவரை

லோபம்பா (Lobamba) சுவாசிலாந்தின் மரபார்ந்த, ஆன்மீக, சட்டவாக்கத் தலைநகரம் ஆகும்; இங்குதான் சுவாசிலாந்தின் நாடாளுமன்றமும்,[6] டோம்பி என்ற அரசரன்னையின் (மன்னரின் அன்னை) மாளிகையும் உள்ளன.[7][8] அரசர் மூன்றாம் சுவாதி இங்கிருந்து 10 கிலோமீட்டர்கள் (6.2 mi) தொலைவில் லோசித்தா அரண்மனையில் வசிக்கின்றார். அரசரும் அரசரன்னையும் ஒவ்வொரு ஆண்டும் திசம்பர்/சனவரியில் நடைபெறும் இங்வாலா அரசசடங்கு விழாவிலும் ஆகத்து/செப்டம்பரில் நடைபெறும் உம்லாங்கா கலாச்சார விழாவிலும் கலந்துகொள்கின்றனர்.

இங்குள்ள முதன்மை சுற்றுலா ஈர்ப்பு மையங்களாக நாடாளுமன்றம், சுவாசிலாந்து தேசிய அருங்காட்சியகம், லீல்வேன் வனவிலங்கு சரணாலயம், அரசர் இரண்டாம் சோபூசாவின் நினைவகப் பூங்கா போன்றவை உள்ளன. இங்குள்ள எம்போ அரச மாளிகையை பிரித்தானிய அரசு பலதுணை மணம் புரிந்த இரண்டாம் சோபூசாவிற்காக கட்டிக் கொடுத்துள்ளது; இவரது குடும்பத்தில் 600 குழந்தைகள் இருந்தனர். இது பார்வையாளர்களுக்காக திறக்கப்படுவதில்லை. ஐக்கிய இராச்சியத்திடமிருந்து சுவாசிலாந்திற்கு விடுதலை பெறப் போராடிய இவரே நாட்டின் முதல் பிரதமராகவும் பொறுப்பாற்றினார்.

கண்ணோட்டம்[தொகு]

தலைநகரம் லோபம்பா, நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள கானகப்பகுதியான எசுல்வினி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. பள்ளத்தாக்குகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் இப்பகுதி இகொகோ மாவட்டத்திலுள்ள இம்பபான் நகரத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்கு மிதவெப்பமண்டல காலநிலையும் கோடையில் மழைக்காலமாகவும் உள்ள வானிலை நிலவுகிறது.

1997 ஆம் ஆண்டில் 3625 ஆக இருந்த இந்நகரின் மக்கள்தொகை 2006 ஆம் ஆண்டில் 11000 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் தொகையில் 84.3% மக்கள் சுவாசியின மக்கள் ஆவர். 9.9% சூலு இனத்தவர்களும் 2.5% மக்கள் திசோங்கா இனத்தவரும் 1.6% மக்கள் இந்தியர்களும் பிறர் 1.7% எண்ணிக்கையிலும் இங்கு வாழ்கின்றனர்.சுவாசி மற்றும் ஆங்கில மொழிகள் இங்கு அலுவலக மொழிகளாக உள்ளன,

மேற்சான்றுகள்[தொகு]

  1. Elevation of Lobamba,Swaziland Elevation Map, Topo, Contour. Floodmap.net. Retrieved April 20, 2014.
  2. Lobamba. Time Zone Genius. Retrieved April 20, 2014.
  3. Lobamba. Phone Area Code Dialing. Retrieved April 20, 2014.
  4. Lobamba. PostCodesDB. Retrieved April 20, 2014.
  5. Lobamba. GeoPostCodes. Retrieved April 20, 2014.
  6. "The Parliament of Swaziland" பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம். Commonwealth Parliamentary Association. Accessed April 7, 2014.
  7. "Lobamba". Encyclopædia Britannica. Accessed April 8, 2014.
  8. Ruth Cyr. Twentieth Century Africa. iUniverse; 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-595-18982-3. p. 485.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோபம்பா&oldid=3227630" இலிருந்து மீள்விக்கப்பட்டது