எசுப்பானிய தன்னாட்சி சமூகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தன்னாட்சி சமூகம்
Blank Spain Map (Autonomous Communities).svg
வகைதன்னாட்சி அமைப்பு
அமைவிடம்எசுப்பானியா
உருவாக்கம்1978 எசுப்பானிய அரசியலமைப்புச் சட்டம்
உருவாக்கப்பட்டது1979–1983
எண்ணிக்கை17 (+2 தன்னாட்சி நகரங்கள்)
மக்கள்தொகை78,476–8,415,490
பரப்புகள்4,992–94,222 கிமீ²
அரசுதன்னாட்சி அரசு
உட்பிரிவுகள்மாநிலம்
கோமார்கா
நகராட்சி

தன்னாட்சி சமூகங்கள் (ஆங்கில மொழி: autonomous community, எசுப்பானியம்: comunidad autónoma) 1978ஆம் ஆண்டு இயற்றப்பட்ட எசுப்பானிய அரசியலமைப்பின்படி நிறுவப்பட்ட முதல்நிலை அரசியல் மற்றும் நிர்வாக பிரிவுகளாகும். எசுப்பானிய நாட்டில் உள்ள பல்வேறு நாட்டினரையும் மண்டலங்களையும் ஒன்றிணைக்க அவர்களுக்கு தன்னாட்சியை உறுதிசெய்யும் நோக்கோடு இந்தப் பிரிவுகள் உண்டாக்கப்பட்டன.[1][2][3]

முழுமையான நாட்டிற்கு மட்டுமே இறையாண்மை இருப்பதால் (தேசிய அல்லது நடுவண் அரசு இயந்திரங்களால் செயற்படுத்தப்படுவதால்) இந்தச் சமூகங்களுக்கு இறையாண்மை இல்லை. அதாவது எசுப்பானியா ஓர் கூட்டாட்சி அல்ல; ஆட்சி மிகவும் பரவலாக்கப்பட்ட[4][5] ஒருமுக அரசு[1] ஆகும். சமூகங்களுக்கு அதிகாரப் பகிர்வு கொடுக்கப்பட்டுள்ளது; அரசியலமைப்பில் விதிக்கப்பட்ட எல்லைகளுக்குள் தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டுள்ளன.[1]

எசுப்பானியாவில் மொத்தம் 17 தன்னாட்சி சமூகங்களும் 2 தன்னாட்சி நகரங்களும் உள்ளன; இவை கூட்டாக "தன்னாட்சிகள்" என அறியப்படுகின்றன.

தன்னாட்சி சமூகங்கள் (அமைவிடம்)[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Organización territorial. El Estado de las Autonomías" (PDF). Recursos Educativos. Instituto Nacional de Tecnologías Educativas y de Formación del Profesorado. Ministerio de Eduación, Cultura y Deporte. 19 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. Article 2. Cortes Generales (Spanish Parliament) (1978). "Título Preliminar". Spanish Constitution of 1978. 29 September 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. Article 143. Cortes Generales (Spanish Parliament) (1978). "Título VIII. De la Organización Territorial del Estado". Spanish Constitution of 1978. 29 September 2012 அன்று பார்க்கப்பட்டது.
  4. Bacigalupo Sagesse, Mariano (June 2005). "Sinópsis artículo 145". Constitución española (con sinópsis). Congress of the Deputies. 28 January 2012 அன்று பார்க்கப்பட்டது.
  5. Ruíz-Huerta Carbonell, Jesús; Herrero Alcalde, Ana (2008). Bosch, Núria; Durán, José María. eds. Fiscal Equalization in Spain. Edward Elgar Publisher Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781847204677. http://books.google.com/books/about/Fiscal_Federalism_and_Political_Decentra.html?id=ngoAEwlqMIsC. பார்த்த நாள்: 15 October 2012.