முசாப்பர்கர் மாவட்டம்
ضِلع مُظفّرگڑھ | |
---|---|
மாவட்டம் | |
முசாப்பர்கர் மாவட்டம் | |
![]() பஞ்சாப் மாகாணத்தில் முசாப்ப்பர்கர் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | பாகிஸ்தான் |
மாகாணம் | பஞ்சாப் மாகாணம் |
Established | 1861 |
தலைமையிடம் | முசாப்பர்கர் நகரம் |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 3,826,000 |
நேர வலயம் | பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5) |
வட்டங்கள் | 4 |
முசாப்பர்கர் மாவட்டம் (Muzaffargarh District) (உருது: ضِلع مُظفّرگڑھ) தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் முப்பத்தி ஆறு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் முசாப்பர்கர் நகரம் ஆகும்.
பெயர்க் காரணம்[தொகு]
முகலாயப் பேரரசின் காலத்தில் 1794-இல் நவாப் முசாப்பர் கான் எனும் முகலாய ஆளுநர் இப்பகுதியில் கோட்டை (கர்) கட்டியதால் இந்நகரத்திற்கு முசாப்பர்கர் என பெயராயிற்று. 1861-இல் இந்நகரம் முசாப்பர்கர் மாவட்டத்தின் தலைமையிடமாக மாறியது.
நகரம்[தொகு]
முசாப்பர்கர் நகரம் செனாப் ஆற்றின் கரையில் உள்ளது. முசாப்பர்கர் நகரம் முல்தான் நகரத்தின் அருகில் அமைந்துள்ளது. முசாப்பூர் நகரம் பஞ்சாப் மாகாணத்தின் தெற்கில், பாகிஸ்தான் நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
அமைவிடம்[தொகு]
8,249 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் செனாப் ஆற்றிற்கும், சிந்து ஆற்றிற்கும் நடுவில் அமைந்துள்ளது இம்மாவட்டத்தின் வடக்கில் லய்யா மாவட்டமும், தெற்கில் பகவல்பூர் மாவட்டம், ரகீம்யார் மாவட்டமும், கிழக்கில் கானேவால் மாவட்டம் மற்று மூல்தன் மாவட்டங்களும், வடகிழக்கில் ஜாங் மாவட்டமும், மேற்கில் தேரா காஜி கான் மாவட்டம் மற்றும் ராஜன்பூர் மாவட்டங்களும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
நிர்வாகம்[தொகு]
முசாப்பர்கர் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக முசாப்பர்கர், அலிப்பூர், ஜாடொய், கோட் அட்டு என நான்கு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நான்கு வருவாய் வட்டங்களில் 93 கிராம ஒன்றியக் குழுக்கள் உள்ளது. [1]
மக்கள் தொகையியல்[தொகு]
1998 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்ட மக்கள் தொகை 26,35,903 ஆகும். மக்கள் தொகையில் 12.75% நகர்புறங்களில் வாழ்கின்றனர். [2] இம்மாவட்டத்தின் முக்கிய மொழியாக சராய்கி மொழி விளங்குகிறது. மாவட்ட மக்களில் 86.3% சராய்கி மொழியைத் தாய் மொழியாக கொண்டுள்ளனர். பஞ்சாபி மொழியைப் பேசுவோர் 7.4% ஆகவும், உருது மொழியைப் பேசுவோர் 4.9% ஆக இருந்தனர்.[3]
வரலாறு[தொகு]
கஜினி முகமது கி பி 1005-இல் சாகி குல மன்னர்களை வென்று காபூலைப் கைப்பற்றி பஞ்சாபின் முசாப்பர்கர் நகரத்தையும் கைப்பற்றினார்.
1185-இல் கோரி முகமது காலத்தில் முசாப்பர்கர் மாவட்ட மக்களை சிறிது சிறிதாக இசுலாம் சமயத்திற்கு மாற்றினார். பின்னர் முகலாயர் காலத்தில் இப்பகுதி மக்களில் பெரும்பான்மையோர் இசுலாம் சமயத்திற்கு மாற்றப்பட்டனர். முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் 1765 - 1846 கால கட்டத்தில் சீக்கியப் பேரரசின் கீழ் இம்மாவட்டம் அமைந்தது. ஆங்கிலேய-சீக்கியப் போர்களின் முடிவில் 1849-இல் இப்பகுதி அடங்கிய பஞ்சாப் முழுமையும் கம்பெனி ஆட்சியின் கீழ் சென்றது.
1947-இல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் முசாப்பர்கர் மாவட்டம், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்தது.
தட்ப வெப்பம்[தொகு]
கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 54 பாகை செல்சியஸ் வெப்பமும்; குளிர்காலத்தில் அதிகபட்ச பூஜ்ஜியம் 1 பாகை செல்சியஸ் வெப்பமும் காணப்படுகிறது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 127 செண்டி மீட்டராக உள்ளது.
தட்பவெப்பநிலை வரைபடம் முசாப்பர்கர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
7.2
21
5
|
9.5
23
8
|
19.5
29
14
|
12.9
36
20
|
9.8
40
24
|
12.3
42
29
|
61.3
39
29
|
32.6
38
28
|
10.8
37
25
|
1.7
35
18
|
2.3
29
11
|
6.9
23
6
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: World Meteorological Organization | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
பொருளாதாரம்[தொகு]
வேளாண்மை[தொகு]
வேளாண்மைப் பொருளாதாரத்தை முக்கியமாகக் கொண்ட இம்மாவட்டத்த்தில் செனாப் மற்று சிந்து ஆற்றின் நீர் பாசானம் வேளாண்மைத் தொழில் வளர்ச்சி உகந்ததாக உள்ளது. இங்கு கோதுமை, நெல், பருத்தி, பருப்பு வகைகள், பயறு வகைகள், நிலக்கடலை, சோளம், எண்ணெய்வித்துக்கள், ஆமணக்கு, சூரியகாந்தி பூக்கள், வாழை, பேரீச்சம் பழம், வெங்காயம், காய்கறிகள், கரும்பு, எலுமிச்சம் பழம், மா பயிரிடப்படுகிறது. இம்மாவட்டம் 100,864 ஏக்கர் பரப்பில் காடுகளைக் கொண்டுள்ளது. காடுகளில் மல்பெரி, யூகலிப்டஸ், கிக்கர், மூங்கில் முதலிய மரங்கள் வளர்கிறது.
தொழில்கள்[தொகு]
இங்கு பருத்தி ஆலைகள், மாவு ஆலைகள், சணல் நெசவு ஆலைகள், எண்ணெய்வித்துக்கள் பிழியும் ஆலைகள், காகிதம்/அட்டை தயாரிக்கும் ஆலைகள், பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி ஆலைகள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனங்கள், கரும்பாலைகள், துணி நெசவாலைகள், அனல் மின் நிலையங்கள் உள்ளது.
சமயங்கள்[தொகு]
இம்மாவட்டத்தில் சுன்னி முஸ்லீம் பெரும்பான்மையாகவும், சியா முஸ்லீம்கள் சிறுபான்மையாகவும் உள்ளனர். முசாப்பர்கர் நகரத்தில் இந்துக்களும், கிறித்தவர்களும் சிறிதளவில் உள்ளனர்.
கல்வி[தொகு]
முசாப்பர்கர் மாவட்டத்தில் அரசின் 1072 ஆண்கள் பள்ளியும்; 1009 பெண்கள் பள்ளியும் உள்ளது. [4] இப்பள்ளிகளில் 5023 ஆண் ஆசியர்களும், 4130 பெண் ஆசிரியர்களும் பணியில் உள்ளனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Tehsils & Unions in the District of Muzaffargarh – Government of Pakistan" இம் மூலத்தில் இருந்து 2012-02-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120209043319/http://www.nrb.gov.pk/lg_election/union.asp?district=22&dn=Muzaffargarh.
- ↑ "Urban Resource Centre". urckarachi.org இம் மூலத்தில் இருந்து 2006-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060513113007/http://www.urckarachi.org/Population%20Table-5.htm.
- ↑ 1998 District Census report of Muzaffargarh. Census publication. 120. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 2000. பக். 21–22.
- ↑ "Punjab Annual Schools Census Data 2014-15" இம் மூலத்தில் இருந்து 16 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160816225210/http://schoolportal.punjab.gov.pk/schoolInfoNew.asp?distId=323--Muzaffargarh. பார்த்த நாள்: 16 August 2016.