முகமது சமான் கியானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகமது சமான் கியானி
பாக்கித்தானின் தகவல் அமைச்சர்
தலைவர்சியா-உல்-ஹக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 அக்டோபர் 1910
தையால் கிராமம், இராவல்பிண்டி, பிரித்தானிய இந்தியா (தற்போதைய இஸ்லாமாபாத், பாக்கித்தான்)
இறப்பு4 சூன் 1981(1981-06-04) (அகவை 70)
இஸ்லாமாபாத், பாக்கித்தான்
முன்னாள் கல்லூரிஇந்திய இராணுவ அகாதமி
Military service
பற்றிணைப்பு இந்தியா
சுதந்திர இந்தியா
 பாக்கித்தான்
தரம்தலைமைத் தளபதி
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர்
  • மலேயப் போர்
  • பர்மா முற்றுகை

மேஜர் ஜெனரல் முகமது சமான் கியானி (Mohammed Zaman Kiani) (1 அக்டோபர் 1910 - 4 சூன் 1981) இவர்பிரித்தானிய இந்திய இராணுவத்தின் அதிகாரியாக இருந்தார். பின்னர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தார். அதன் 1 வது பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர் இந்திய ராணுவக் கழகத்திலிருந்து "ஸ்வார்ட் ஆப் ஹானர்" என்ற விருதினைப் பெற்றார். மேலும் 14/1 பஞ்சாப் படைப்பிரிவில் (இப்போது 5 பஞ்சாப், பாக்கித்தான் ராணுவம்) சேர்ந்தார்.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, இவர் பாக்கித்தானுக்குச் சென்றார். இவர் கில்கிட் நிறுவனத்தில் அரசியல் முகவராக பணியாற்றினார். மேலும் முகம்மது சியா-உல்-ஹக்கின் அரசாங்கத்தில் தகவல் அமைச்சராகவும் இருந்தார். நாடு கடந்த இந்திய அரசுக்கு இவர் செய்த பங்களிப்புகள் பின்னர் ஒப்புக் கொள்ளப்பட்டன. இவருக்கு மரணத்திற்குப் பின் நேதாஜி பதக்கம் வழங்கப்பட்டது.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர், இப்போது பாக்கித்தானின் இஸ்லாமாபாத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ள ஷகார்பரியன் கிராமத்தில் பிறந்தார். [1]

தனது இளமை பருவத்தில் ஆர்வமுள்ள வளைதடி பந்தாட்டவீரரான இவர் 1931 இல் தேராதூனில் உள்ள இந்திய ராணுவ கழகத்தில் பிரித்தானிய இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.

இரண்டாம் உலகப் போர்[தொகு]

மார்ச் 1941 இல் இவர் இடம் பெற்ரிருந்த படைப்பிரிவு மமலாயாவுக்கு அனுப்பப்பட்டது. இவர் இரண்டாம் உலகப் போரின்போது மலாயா போரில் போர்க் கைதியாகப்பட்டார். பின்னர் இவர், 1942 இல் மோகன் சிங் தலைமையில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தார். யப்பானியர்களுடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த இராணுவம் கலைக்கப்பட்டப் பின்னர், இந்திய சுதந்திரக் கழகம் இவரை எஞ்சியுள்ள படைகளுக்கு இராணுவத் தளபதியாகவும், ஜெகநாத் ராவ் போன்ஸ்லே இராணுவ பணியகத்தின் இயக்குநராகவும் நியமித்தது . [2] 1943 இல் சுபாஷ் சந்திரபோஸின் வருகை மற்றும் இந்திய தேசிய இராணுவத்தின் மறுமலர்ச்சி மற்றும் நாடு கடந்த இந்திய அரசாங்கத்தின் பிரகடனத்திற்குப் பிறகு, இவர் முதல் பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் இந்தியப் படையெடுப்பின் போது தலைமை தாங்கினார் [3] [4] [5] யங்கோன் வீழ்ச்சியின் போது, இவர் இந்திய தேசிய இராணுவம் மற்றும் நாடு கடந்த இந்திய அரசாங்கத்தின் பணியாளர்களை வழிநடத்தினார். அவர்கள் போஸுடன் சேர்ந்து பேங்காக்கிற்கு அணிவகுத்துச் சென்றனர். ஆகத்து 1945 இல் போஸ் விமான விபத்தில் இறந்த பிறகு, இவர் 1945 ஆகஸ்ட் 25 அன்று சிங்கப்பூரில் உள்ள பிரித்தானிய அரசிடம் சரணடைந்தார். [6]

பூஞ்ச் கிளர்ச்சி[தொகு]

இந்தியப் பிரிவினையைத் தொடர்ந்து, 1947 இல் உருவான பாக்கித்தான் சுதந்திரத்திற்குப் பிறகு இவர் ராவல்பிண்டிக்குத் திரும்பினார்.

1947 செப்டம்பரில், ஜம்மு-காஷ்மீர் மகாராஜாவை அகற்றுவதற்கான பாக்கித்தானின் முயற்சியின் தெற்குப் பிரிவின் பொறுப்பில் பாக்கித்தான் பிரதமர் லியாகத் அலிகான் மற்றும் பஞ்சாபி மந்திரி சௌகத் ஹயாத் கான் ஆகியோர் பொறுப்பேற்றனர். இவர், குசராத் நகரத்தை மையமாகக் கொண்டு ஜிஹெச்கியூ ஆசாத் என்ற பொது தலைமையகத்தை நிறுவினார். இங்கிருந்து, இவரது படைகள் காஷ்மீர் எல்லையை ஊடுருவி பூஞ்சில் காஷ்மீர் கிளர்ச்சியாளர்களை வழிநடத்தியது, இறுதியில் ஆசாத் காஷ்மீர் உருவாவதற்கு வழிவகுத்தது. பிரிகேடியர் ஹபீபுர் ரஹ்மான் இவரது தலைமைப் பணியாளராக பணியாற்றினார்.

பிற்கால வாழ்வு[தொகு]

இவர், பின்னர் கில்கித்தில் பாக்கித்தான் அரசாங்கத்தின் அரசியல் முகவராக நியமிக்கப்பட்டார். [7] ராவல்பிண்டியில் ஓய்வு பெற்றபோது இவர் தனது நினைவுக் குறிப்புகளை எழுதினார். இவரது மரணத்திற்குப் பிறகு அவை வெளியிடப்பட்டன:

மேற்கோள்கள்[தொகு]

  1. Nawaz, Crossed Swords (2008).
  2. Shah Nawaz Khan (1946). My Memories of I.N.A. & Its Netaji. Rajkamal Publications. பக். 60–62. 
  3. Shah Nawaz Khan (1946). My Memories of I.N.A. & Its Netaji. Rajkamal Publications. பக். 247–248. 
  4. Bose 2006
  5. Mercado 2002
  6. Bose 2006.
  7. Bose 2006, ப. 144.

ஆதாரங்கள்[தொகு]

  • Bose, Sugata (2009), A Hundred Horizons: The Indian Ocean in the Age of Global Empire, Harvard University Press, ISBN 978-0-674-02857-9
  • Bose, Sugata (2011), His Majesty's Opponent, Harvard University Press, ISBN 978-0-674-04754-9
  • Mercado, Stephen C. (2002), The Shadow Warriors of Nakano: A History of the Imperial Japanese Army's elite intelligence school., Brassey's., ISBN 1-57488-538-3
  • Nawaz, Shuja (2008), Crossed Swords: Pakistan, Its Army, and the Wars Within, Oxford University Press, ISBN 978-0-19-547660-6
  • Saraf, Muhammad Yusuf (2015) [first published 1979 by Ferozsons], Kashmiris Fight for Freedom, Volume 2, Mirpur: National Institute Kashmir Studies

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_சமான்_கியானி&oldid=3046296" இலிருந்து மீள்விக்கப்பட்டது