ராஜா ஹபிபுர்ரஹ்மான் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராஜா ஹபிபுர்ரஹ்மான் கான் (Raja Habib ur Rahman Khan, 1913-1978) இந்தியாவின் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது இந்திய தேசியவாதியாக இருந்தார். மேலும் இந்திய தேசிய இராணுவத்தில் ஒரு அதிகாரியாகவும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸூக்கு முதன்மை செயலாளராகவும் இருந்தார். இரண்டாம் உலகப்போரின் முடிவில் பிரித்தானியரால் தில்லி செங்கோட்டையில் 1945 நவம்பர் 5 இல் துவங்கிய ஐ.என்.ஏ வின் மீதான விசாரணையில் ஜெனரல் ஷா நவாஸ் கான், கலோனல் பிரேம் குமார் சாகல், கலோனல் குர்பக்‌ஷ் சிங் தில்லான் ஆகியோருடன் இவரும் விசாரிக்கப்பட்டார்.

பிறப்பு[தொகு]

ராஜா ஹபிபுர்ரஹ்மான் கான், ராஜா மன்சூர் அஹ்மத் கான் என்பவரின் மகனாக ஜம்மு காஷ்மீரில் பீம்பர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாரி கிராமத்தில் டிசம்பர் 22, 1913 அன்று பிறந்தார். அவர் பஞ்சாரியில் உள்ள பள்ளியில் தொடக்க கல்வியும், ஜம்முவில் உள்ள கல்லூரியில் பட்டமும் பெற்றார். பின்னர், வேல்ஸ் இளவரசர் ராயல் இந்திய ராணுவ கல்லூரியிலும் தொடர்ந்து, டேராடூனில் உள்ள இந்திய இராணுவ அகாடமியிலும் கல்வி பயின்றார்.

இராணுவ வாழ்க்கை[தொகு]

கான் 15 ஜூலை 1936 இல் சிறப்புப் பட்டியலில், இந்திய தரைப்படையில் இரண்டாவது லெப்டினன்ட் ஆக நியமிக்கப்பட்டார் மற்றும் வெலிங்டன் மேலும் டியூக் 2 வது பட்டாலியன் படைப்பிரிவில் 10 ஆகஸ்ட் 1936 இல் இணைக்கப்பட்டார். இந்திய இராணுவத்தின் 14 வது பஞ்சாப் படைப்பிரிவின் முதல் படைப்பிரிவுக்கு நியமிக்கப்பட்டார். டிசம்பர் 1937ல் முதல் நிலை லெப்டினென்ட்டாக பதவி உயர்வு பெற்றார். அவரது படைப்பிரிவு செப்டம்பர் 1940 ல் லாகூரிலிருந்து செகந்திராபாத்திற்கு மாற்றப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]