ராவல்பிண்டி மாவட்டம்
ராவல்பிண்டி மாவட்டம் راولپِنڈى | |
---|---|
மாவட்டம் | |
![]() பஞ்சாப் மாகாணத்தில் வடக்கில் ராவல்பிண்டி மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | பாகிஸ்தான் |
மாநிலம் | பஞ்சாப், பாகிஸ்தான் |
தலைமையிடம் | ராவல்பிண்டி |
தாலுக்காக்கள் | 8 |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,286 km2 (2,041 sq mi) |
உயர் புள்ளி | 2,790 m (9,160 ft) |
தாழ் புள்ளி | 300 m (1,100 ft) |
மக்கள்தொகை (1998) | |
• மொத்தம் | 3,363,911 |
• அடர்த்தி | 851.3/km2 (2,205/sq mi) |
நேர வலயம் | பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5) |
மொழிகள் (1981) | 85% பஞ்சாபி மொழி 7.5% உருது[1] |
இணையதளம் | www |
ராவல்பிண்டி மாவட்டம் (Rawalpindi District) (உருது: ضِلع راولپِنڈى), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் ராவல்பிண்டி நகரம் ஆகும்.
இம்மாவட்டம் வடமேற்கு இமயமலைத் தொடரின் சமவெளியில் அமைந்துள்ளது. சிந்து ஆறு மற்றும் ஜீலம் ஆறு இம்மாவட்டத்தில் பாய்கிறது.[2]
மாவட்ட நிர்வாகம்[தொகு]
இம்மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக குஜ்ஜர் கான், காகுத்தா, கல்லர் செய்தன், கோட்லி சட்டியான், முர்ரி, ராவல்பிண்டி, போட்டாகர் மற்றும் தக்சசீலா என எட்டு தாலுக்காக்களாகப் பிரித்துள்ளனர். இம்மாவட்டம் 170 கிராம ஒன்றியக் குழுக்கள், 1164 வருவாய் கிராமங்கள், ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சி மன்றங்கள், இரண்டு நகரப் பஞ்சாயத்துகள், நான்கு இராணுவப் பாசறை நகரங்களைக் கொண்டுள்ளது.
மக்கள் தொகையில்[தொகு]
5285 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ராவல்பிண்டி மாவட்டத்தின் 1998-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 33,63,911 ஆகும். மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.75% (1981 - 98) ஆக உள்ளது. மக்கள் தொகையில் ஆண்கள் 1722477 (51.20 %), பெண்கள் 1641434 (48.80 %) ஆக உள்ளனர். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 104.9 வீதம் ஆண்கள் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 636.5 மக்கள் வீதம் வாழ்கின்றனர். நகர்ப் புற மக்கள் தொகை 1788273 (53.16 %) ஆகவும், கிராமப் புற மக்கள் தொகை 1575638 (46.84 %) ஆகவும் உள்ளது. சராசரி எழுத்தறிவு 70.4% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 81.9% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 59.18% ஆகவும் உள்ளது. இம்மாவட்டத்தில் பஞ்சாபி மொழி பேசுபவர்கள் 85% ஆகவும், உருது மொழி பேசுபவர்கள் 7.5% ஆகவும், பஷ்தூன் மொழி போன்ற பிற மொழி பேசுபவர்கள் 7.5% ஆகவும் உள்ளனர். [3]
கல்வி[தொகு]
ராவல்பிண்டி மாவட்டம் 1,230 தொடக்கப் பள்ளிகளும், 316 நடுநிலைப் பள்ளி பள்ளிகளும், 365 உயர்நிலைப் பள்ளிகளும், 40 மேனிலைப் பள்ளிகளையும் கொண்டுள்ளது.[4]
பொருளாதாரம்[தொகு]
இம்மாவட்டத்தில் வேளாண்மைப் பொருளாதாரத்தைச் சார்ந்து உள்ளது. இங்கு வற்றாத சிந்து ஆறு மற்றும் ஜீலம் ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளதால் கோதுமை, பார்லி, பயறு வகைகள், சோளம், சிறு தானியங்கள் விளைகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Stephen P. Cohen (2004). The Idea of Pakistan. Brookings Institution Press. பக். 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0815797613. https://archive.org/details/ideaofpakistan0000cohe.
- ↑ Rawalpindi - Encyclopædia Britannica Eleventh Edition
- ↑ RAWALPINDI DISTRICT AT A GLANCE
- ↑ "Rawalpindi School Census Data". School Education Department. 16 ஆகஸ்ட் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 August 2016 அன்று பார்க்கப்பட்டது.