திருக்கோயிலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருக்கோவலூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
திருக்கோவிலூர்
—  முதல் நிலை நகராட்சி  —
திருக்கோவிலூர்
இருப்பிடம்: திருக்கோவிலூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°57′N 79°12′E / 11.95°N 79.2°E / 11.95; 79.2ஆள்கூறுகள்: 11°57′N 79°12′E / 11.95°N 79.2°E / 11.95; 79.2
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கள்ளக்குறிச்சி
வட்டம் திருக்கோவிலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. என். ஸ்ரீதர், இ. ஆ. ப
நகராட்சி தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

53,252 (2011)

4,441/km2 (11,502/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

11.99 சதுர கிலோமீட்டர்கள் (4.63 sq mi)

73 மீட்டர்கள் (240 ft)

இணையதளம் https://www.townpanchayat.in/thirukoilur

திருக்கோவிலூர் (Tirukkovilure), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் வட்டத்தில் அமைந்த முதல் நிலை நகராட்சி ஆகும். இது திருக்கோவிலூர் வட்டம் மற்றும் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும். இங்கு வீரட்டேஸ்வர் கோயில் மற்றும் உலகளந்த பெருமாள் கோயில் உள்ளது.வாகன பதிவு எண்TN 35


வருவாய் கோட்டங்கள்[தொகு]

  1. திருக்கோவிலூர்
  2. கள்ளக்குறிச்சி

வருவாய் வட்டங்கள்தொகு[தொகு]

  1. திருக்கோவிலூர் வட்டம்
  2. கள்ளக்குறிச்சி வட்டம்
  3. உளுந்தூர்பேட்டை வட்டம்
  4. சங்கராபுரம் வட்டம்
  5. சின்னசேலம் வட்டம்
  6. கல்வராயன்மலை வட்டம்

நகராட்சிகள்தொகு[தொகு]

  1. கள்ளக்குறிச்சி
  2. திருக்கோவிலூர்
  3. உளுந்தூர்பேட்டை

பேரூராட்சிகள்தொகு[தொகு]

  1. சின்னசேலம்
  2. தியாக துருகம்
  3. சங்கராபுரம்
  4. வடக்கநந்தல்
  5. மணலூர்ப்பேட்டை

திருக்கோவிலூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்[தொகு]

12 செப்டம்பர் 2021 அன்று திருக்கோவிலூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[3] திருக்கோவிலூரானது தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. திருக்கோவிலூர் நகராட்சி தொடருந்து நிலையம் 3 கிமீ தொலைவில் உள்ள அரகண்டநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது. திருக்கோவிலூர் தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை விழுப்புரம் மாவட்டம் அறிவித்த 34ஆண்டுகளாக இருந்து வருகிறது விழுப்புரம் மாவட்டதை இரண்டாக பிரித்த போது திருக்கோவிலூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமாக இருந்தது ஆனால் கள்ளகுறிச்சியை தலைமை இடமாக கொண்டு மாவட்டம் அறிவிக்கபட்டது திருக்கோவிலூரை தலைமையாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கேட்டு வருகிறனர் , திருக்கோவிலூர் புதிய பெரிய பேருந்து நிலையம் அதிநவீன வசதியுடன் கூடிய பேருந்து நிலையமாக கட்டுவதற்கு 2014ஆம் ஆண்டு சட்ட மன்றத்தில் அறிவிக்கபட்டது. செவலை ரோடு பகுதி, ஏரி கரை பகுதி அகிய இரண்டு பகுதி தேர்வுசெய்யபட்டுள்ளது. இதில் ஒன்று இறுதி செய்யப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் துவங்கபடவுள்ளது. திருக்கோவிலூர் அருகில் மேற்கில் திருவண்ணாமலை 40 கிமீ; இதன் கிழக்கில் கடலூர் 70 கிமீ; வடக்கில் விழுப்புரம் 35 கிமீ; தெற்கில் கள்ளக்குறிச்சி 46 கிமீ தொலைவில் உள்ளது.

ஊர் அமைப்பு[தொகு]

வரலாற்றுப் பெருமைக்கு உரியதான இச்சிறு நகர் மேலூர், கீழுர் (கீழையூர்) என்னும் இரு பிரிவினதாயுள்ளது. திருக்கோவலூரில் மேற்குப்பகுதி மேலுாராகும். இதுதான் நகரத்தின் இன்றியமையாப் பகுதி. இங்கே தான் திருவிக்கிரமப் பெருமாள் கோயில், கடைத்தெரு, உயர் நிலைப்பள்ளி முதலியவை உள்ளன. இங்கே உள்ள திருவிக்கிரமப் பெருமாள் கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்கது; முதலாழ்வார் மூவரும் சேர்ந்து வழிபட்டது. திருமங்கையாழ்வாரின் பாடல் (மங்களா சாசனம்) பெற்றது.

திருக்கோவலுரரின் கிழக்குப்பகுதி கீழுர் ஆகும். இது கீழையூர், கீழவூர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கீழூர்ப் பகுதியில்தான் வீரட்டேஸ்வரர் கோயில் சிவன் கோயில் இருக்கிறது. சிவபெருமான் வீரச் செயல்கள் நிகழ்த்திய எட்டுத் திருப்பதிகளுள் (அட்ட வீரட்டங்களுள்) இந்த ஊரும் ஒன்று.[4]

முதல்நிலை நகராட்சி அமைப்பு[தொகு]

11.99 சகிமீ பரப்பும், 27 நகராட்சிமன்ற உறுப்பினர்களையும், 160 தெருக்களையும் கொண்ட முதல் நிலை நகராட்சி , கூடிய விரைவில் தேர்வுநிலை அல்லது சிறப்புநிலை நகராட்சியாக விரிவாக்கம் செய்யபடவுள்ளது திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகராட்சி 15,929 வீடுகளும், 53,252 மக்கள்தொகையும் கொண்டது. நகராட்சி எழுத்தறிவு 86.7% மற்றும் பாலின விகிதம் 10,000 ஆண்களுக்கு, 10,007 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 10000 ஆண் குழந்தைகளுக்கு, 916 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,125 மற்றும் 471 ஆகவுள்ளனர்.[6]

வரலாறு[தொகு]

கி.பி 300-ஆம் நூற்றாண்டில் இருந்து நடுநாட்டின் தலைநகராக கோவல் நகரம் இருந்துவந்தது சங்க நூல்களில் கோவல் என வழங்கப்படும் திருக்கோவலூர், அன்று மலையமான் மரபு மன்னர்கட்கும் மெய்ப்பொருள் வேந்தர் முதலியோர்க்கும் தலைநகராயிருந்ததது. ஔவையார் பாரிமகளிரைத் திருக்கோவலூர் மன்னர்க்கு மணமுடித்த வரலாறும், பாரியின் பிரிவாற்றாது கபிலர் வடக்கிருந்து தீப்பாய்ந்து உயிர் விட்ட ‘கபிலர்குன்று’ என்னும் பாறை திருக்கோவலூருக்கு அருகில் இருப்பதும், திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகளாரின் தலைமையகமும் அவர்களால் உருவாக்கப்பட்ட கோவல் தமிழ்ச்சங்கமும் திருக்கோவலூரில் இருப்பதும் இவ்வூரின் பெருமைக்குத் தக்க சான்றுகளாம்.

கடையெழு வள்ளல்களில் ஒருவனான காரி சங்ககாலத்தில் இவ்வூரை ஆண்ட மன்னர்களில் ஒருவன். கோவலூரில் பாயும் ஆறு பெண்ணை. இந்த ஆற்றுமணலின் அறல் படிவு போல் தலைவியின் கூந்தல் சுருள் படிந்திருந்ததாம்.[7]

கடையெழு வள்ளல்களில் மற்றொருவன் அதியமான் நெடுமான் அஞ்சி. இந்த அஞ்சி கோவலூரைப் போரிட்டு அழித்தான் என்றும், அந்த வெற்றியைப் புலவர் பரணன் சிறப்பித்துப் பாடினான் என்றும் ஔவையார் குறிப்பிடுகிறார்.[8]

திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் போன்றோர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இவ்வாலயம் அந்தகாசூரனை அழித்த தலம் ஆதலால் அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. சங்ககால மலையமான் நாட்டின் தலைநகரமாகவும் விளங்கியது. ஆதலால் காரி திருக்கோவலூர் மலையமான் காரி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறான்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°57′N 79°12′E / 11.95°N 79.2°E / 11.95; 79.2 ஆகும்.[9] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 73 மீட்டர் (239 அடி) உயரத்தில் இருக்கின்றது.

போக்குவரத்து[தொகு]

திருக்கோவிலூரில் தொடர்வண்டி நிலையம் உள்ளது.

கோவில்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. Govt upgrades 9 Town Panchayats as Municipalities
  4. புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல். மெய்யப்பன் தமிழாய்வகம். pp. 290–292. 11 சூன் 2020 அன்று பார்க்கப்பட்டது. line feed character in |publisher= at position 11 (உதவி)
  5. திருக்கோவிலூர் நகராட்சி இணையதளம்[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Town Tirukkoyilur Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011
  7. அம்மூவனார் பாடல் அகநானூறு 35-14
  8. புறநானூறு 99-13
  9. "Tirukkoyilur". Falling Rain Genomics, Inc. ஜனவரி 30 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |accessyear= ignored (உதவி); Check date values in: |accessdate= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கோயிலூர்&oldid=3429709" இருந்து மீள்விக்கப்பட்டது