உறந்தைராயன் குடிக்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உறந்தைராயன் குடிக்காடு
—  கிராமம்  —
உறந்தைராயன் குடிக்காடு
இருப்பிடம்: உறந்தைராயன் குடிக்காடு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°21′N 79°23′E / 10.350°N 79.383°E / 10.350; 79.383ஆள்கூறுகள்: 10°21′N 79°23′E / 10.350°N 79.383°E / 10.350; 79.383
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எம். கோவிந்த ராவ், இ. ஆ . ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


உறந்தைராயன் குடிக்காடு, (ஆங்கில மொழி: uranthairayan kudikadu) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட ஒரத்தநாடு வட்டத்தைச் சேர்ந்த கிராமம். ஒரத்தநாட்டிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. உழவுத் தொழிலே முதன்மைத் தொழில். தென்னை, நெல் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலும் காளியம்மன் கோவிலும், பெரியாச்சி கோயிலும் உள்ளன. உறந்தைராயர் என்ற குலத்தினர் வாழ்ந்ததால் இவ்வூருக்கு இப்பெயர் வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. [4] இதை மெய்ப்பிக்கும் வகையில் இவ்வூரின் குறிப்பிட்ட அளவினர் உறந்தைராயர் ஆவர். 62 ஆண்டுகள் நிறைவுற்ற மேனிலைப் பள்ளி ஒன்றும் உள்ளது. கிராம நூலகம் ஒன்றும் உள்ளது. இவ்வூரில் மக்கள் தொகையின் இந்து சமயத்தின் கள்ளர் பிரிவினரே பெரும்பான்மையினர். எல்லைகளாக புலவன்காடு, தெலுங்கன் குடிக்காடு ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன.

போக்குவரத்து[தொகு]

இது தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது. ஒரத்தநாட்டிற்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையில் அமைந்துள்ளதால் போக்குவரத்து வசதி சீராகவுள்ளது. தஞ்சாவூருக்கும், பட்டுக்கோட்டைக்கும் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் நின்று செல்கின்றன. அரசுப் பேருந்துகளைக் காட்டிலும், தனியார் பேருந்துகளே அதிகம். பத்து நிமிட இடைவெளியில் தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டைக்கும், பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கும், இந்த வழியாக பேருந்துகள் செல்கின்றன. தஞ்சாவூருக்குள் உள்ள மற்ற ஊர்களுக்கும், சில வெளியூர்களுக்கும் செல்ல ஒரத்தநாட்டுக்கு செல்லலாம். தஞ்சாவூர் சென்று பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு/தனியார் பேருந்துகளின் மூலம் வெளியூர்களுக்குச் செல்லலாம். தஞ்சாவூரில் ரயில் நிலையம் உள்ளது.

பண்பாடு[தொகு]

இங்கு திருவிழா நடைபெறும். சிவராத்திரி கொண்டாடுவார். முளைப்பாரித் திருவிழா ஆவணியில் நடைபெறும்.

மேலும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://sekalpana.blogspot.in/2010/06/blog-post.html