கார உலோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கார மாழைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நெடுங்குழு 1
கிடைக்குழு
1 1
H
2 3
Li
3 11
Na
4 19
K
5 37
Rb
6 55
Cs
7 87
Fr

கார உலோகங்கள் அல்லது கார மாழைகள் அல்லது ஆல்க்கலி மாழைகள் (ஆல்க்கலி உலோகங்கள்) என்பன தனிம அட்டவணையில் முதல் நெடுங்குழுவில் உள்ள லித்தியம் (Li), சோடியம் (Na), பொட்டாசியம் (K), ருபீடியம் (Rb), சீசியம் (Cs), பிரான்சியம் (Fr) ஆகிய தனிமங்களைக் குறிக்கும். (ஹைட்ரஜன் பொதுவாக நெடுங்குழு 1ல் இருந்தாலும், அது கார மாழைகளின் பண்புகளை ஒத்து இருக்காது). ஆல்க்கலி மாழை அல்லது கார மாழைகளாகிய இத் தனிமங்கள் ஒரு (நெடுங்) குழுவுக்கான ஒத்த இனமான பண்புகளைக் காட்டுவதில் சிறந்த குழுக்களில் ஒன்றாகும். மேலும் நெடுங்குழுவில் மேலிருந்து கீழ் நோக்கி தனிமங்களின் பண்புகளைப் பார்த்தால் அவை ஒரு சீராக மாறுவதும் சிறப்பாகும்.

கார மாழைகள்

இந்த கார மாழைகள் மிகவும் விறுவிறுப்பாக வேதியியல் இயைபு கொள்வன, எனவே இவை கலப்பில்லாத தனிமங்களாக இயற்கையில் காண்பது அரிது. இதனால் வேதியியல் செய்முறைச் சாலையில் இவை உருகிய மெழுகுபோன்ற சில வகையான ஹைடிரோகார்பன் (கரிம-நீரதை) எண்ணெய்ப்பொருட்களின் அடியே வைத்திருப்பர். கார மாழைகள் தணிவான (குறைந்த) உருகுநிலையும், குறைந்த பொருள் அட்டர்த்தியும் கொண்ட திண்மங்கள். பொட்டாசியமும் ருபீடியமும் மிகச் சிறிதளவு கதிரியக்கத் தன்மை கொண்டவை (உடலுக்கு கேடு எதுவும் தரும் அலவு இல்லை). ஏனெனில் அவற்றில் அதிக அரை-வாழ்காலம் கொண்ட ஓரிடத்தான்கள் உள்ளன.

கார உலோகங்கள்
நீரியம் (diatomic nonmetal)
ஈலியம் (அருமன் வாயு)
இலித்தியம் (alkali metal)
பெரிலியம் (காரக்கனிம மாழைகள்)
போரான் (உலோகப்போலி)
கரிமம் (polyatomic nonmetal)
நைட்ரசன் (diatomic nonmetal)
ஆக்சிசன் (diatomic nonmetal)
புளோரின் (diatomic nonmetal)
நியான் (அருமன் வாயு)
சோடியம் (alkali metal)
மக்னீசியம் (காரக்கனிம மாழைகள்)
அலுமினியம் (குறை மாழை)
சிலிக்கான் (உலோகப்போலி)
பாசுபரசு (polyatomic nonmetal)
கந்தகம் (polyatomic nonmetal)
குளோரின் (diatomic nonmetal)
ஆர்கான் (அருமன் வாயு)
பொட்டாசியம் (alkali metal)
கல்சியம் (காரக்கனிம மாழைகள்)
இசுக்காண்டியம் (தாண்டல் உலோகங்கள்)
தைட்டானியம் (தாண்டல் உலோகங்கள்)
வனேடியம் (தாண்டல் உலோகங்கள்)
குரோமியம் (தாண்டல் உலோகங்கள்)
மாங்கனீசு (தாண்டல் உலோகங்கள்)
இரும்பு (தாண்டல் உலோகங்கள்)
கோபால்ட் (தாண்டல் உலோகங்கள்)
நிக்கல் (தாண்டல் உலோகங்கள்)
செப்பு (தாண்டல் உலோகங்கள்)
துத்தநாகம் (தாண்டல் உலோகங்கள்)
காலியம் (குறை மாழை)
ஜேர்மானியம் (உலோகப்போலி)
ஆர்சனிக் (உலோகப்போலி)
செலீனியம் (polyatomic nonmetal)
புரோமின் (diatomic nonmetal)
கிருப்டான் (அருமன் வாயு)
ருபீடியம் (alkali metal)
இசுட்ரோன்சியம் (காரக்கனிம மாழைகள்)
யிற்றியம் (தாண்டல் உலோகங்கள்)
சிர்க்கோனியம் (தாண்டல் உலோகங்கள்)
நையோபியம் (தாண்டல் உலோகங்கள்)
மாலிப்டினம் (தாண்டல் உலோகங்கள்)
டெக்னீசியம் (தாண்டல் உலோகங்கள்)
ருத்தேனியம் (தாண்டல் உலோகங்கள்)
ரோடியம் (தாண்டல் உலோகங்கள்)
பலேடியம் (தாண்டல் உலோகங்கள்)
வெள்ளி (மாழை) (தாண்டல் உலோகங்கள்)
காட்மியம் (தாண்டல் உலோகங்கள்)
இண்டியம் (குறை மாழை)
Tin (குறை மாழை)
அந்திமனி (உலோகப்போலி)
தெலூரியம் (உலோகப்போலி)
அயோடின் (diatomic nonmetal)
செனான் (அருமன் வாயு)
சீசியம் (alkali metal)
பேரியம் (காரக்கனிம மாழைகள்)
இலந்தனம் (lanthanoid)
சீரியம் (lanthanoid)
பிரசியோடைமியம் (lanthanoid)
நியோடைமியம் (lanthanoid)
புரோமித்தியம் (lanthanoid)
சமாரியம் (lanthanoid)
யூரோப்பியம் (lanthanoid)
கடோலினியம் (lanthanoid)
டெர்பியம் (lanthanoid)
டிசிப்ரோசியம் (lanthanoid)
ஓல்மியம் (lanthanoid)
எர்பியம் (lanthanoid)
தூலியம் (lanthanoid)
Ytடெர்பியம் (lanthanoid)
லியுதேத்தியம் (lanthanoid)
ஆஃபினியம் (தாண்டல் உலோகங்கள்)
டாண்ட்டலம் (தாண்டல் உலோகங்கள்)
தங்குதன் (தாண்டல் உலோகங்கள்)
இரேனியம் (தாண்டல் உலோகங்கள்)
ஓசுமியம் (தாண்டல் உலோகங்கள்)
இரிடியம் (தாண்டல் உலோகங்கள்)
பிளாட்டினம் (தாண்டல் உலோகங்கள்)
தங்கம் (தாண்டல் உலோகங்கள்)
பாதரசம் (தாண்டல் உலோகங்கள்)
தாலியம் (குறை மாழை)
ஈயம் (குறை மாழை)
பிசுமத் (குறை மாழை)
பொலோனியம் (குறை மாழை)
அசுட்டட்டைன் (உலோகப்போலி)
ரேடான் (அருமன் வாயு)
பிரான்சீயம் (கார மாழைகள்)
ரேடியம் (காரக்கனிம மாழைகள்)
அக்டினியம் (actinoid)
தோரியம் (actinoid)
Protஅக்டினியம் (actinoid)
யுரேனியம் (actinoid)
நெப்டியூனியம் (actinoid)
புளுட்டோனியம் (actinoid)
அமெரிசியம் (actinoid)
கியூரியம் (actinoid)
பெர்க்கிலியம் (actinoid)
கலிபோர்னியம் (actinoid)
ஐன்ஸ்டைனியம் (actinoid)
பெர்மியம் (actinoid)
மெண்டலீவியம் (actinoid)
நொபிலியம் (actinoid)
இலாரென்சியம் (actinoid)
இரதர்ஃபோர்டியம் (தாண்டல் உலோகங்கள்)
தூப்னியம் (தாண்டல் உலோகங்கள்)
சீபோர்கியம் (தாண்டல் உலோகங்கள்)
போரியம் (தாண்டல் உலோகங்கள்)
ஆசியம் (தாண்டல் உலோகங்கள்)
மெய்ட்னீரியம் (unknown chemical properties)
டார்ம்சிட்டாட்டியம் (unknown chemical properties)
இரோயன்ட்கெனியம் (unknown chemical properties)
கோப்பர்நீசியம் (தாண்டல் உலோகங்கள்)
உன்னுன்டிரியம் (unknown chemical properties)
பிளெரோவியம் (unknown chemical properties)
உன்னுன்பென்டியம் (unknown chemical properties)
லிவர்மோரியம் (unknown chemical properties)
உனுன்செப்டியம் (unknown chemical properties)
அனனாக்டியம் (unknown chemical properties)
IUPAC குழு எண் 1
தனிமம் வாரியாகப் பெயர் இலித்தியம் குழு
Trivial name கார உலோகங்கள்
CAS குழு எண் (அமெரிக்க) IA
பழைய IUPAC எண் (ஐரோப்பிய) IA

↓ ஆவர்த்தனம்
2
Image: Lithium metal stored under paraffin
இலித்தியம் (Li)
3
3
Image: Sodium metal
சோடியம் (Na)
11
4
Image: Potassium metal
பொட்டாசியம் (K)
19
5
Image: Rubidium metal in a glass ampoule
ருபீடியம் (Rb)
37
6
Image: Caesium metal in a glass ampoule
சீசியம் (Cs)
55
7 பிரான்சியம் (Fr)
87

விளக்கம்
ஆதி கால மூலகம்
கதிரியக்க மூலகம்
Atomic number color:
black=solid

கார மாழைகள் பொதுவாக வெள்ளி-நிறத்தில் இருப்பவை. சீசியம் சற்று பொன் நிறச் சாயல் தரும். கார மாழைகள் மென்மையானவை. இவை ஹாலஜனுடன் எளிதாக சேர்ந்து (இயைந்து) உப்புகள் உருவாக்குக்கின்றன (மின்மப் பிணைப்புண்ட உப்புகள் (ionic salts)). இவ் உப்புகள் நீருடன் சேரும் பொழுது வலுவான கார ஹைட்ராக்சைடுகள் (ஆல்க்கலைன்) உருவாகுகின்றன. இந்த நெடுங்குழு 1ல் உள்ள தனிமங்கள் யாவற்றிலும் ஒரே ஓர் எதிர்மின்னி மட்டுமே கடைசி எதிர்மின்னிக் கூட்டில் (கருவில் இருந்து விலகி, வெளிப்புறத்தில்) உள்ளது. எனவே இந்த ஒற்றை எதிர்மின்னையை எளிதாக இவை இழந்து நேர்மின்மம் கொண்ட அணுவாக வேதியியல் வினைகளில் பங்கு கொள்கின்றன (இவ்வமைப்பின் ஆற்றல் குறைந்த நிலையில் இருப்பதால், இவை அதிக வாய்ப்புடன் நிகழும்). எடுத்துக்காட்டாக நாம் உண்ணும் சமையல் உப்பு, சோடியம் குளோரைடு ஆகும். சோடியம் அணு ஓர் எதிர்மின்னையை இழந்து Na+ என்று நேர்மின்மம் கொண்ட அணுவாகும்; அது இழந்த எதிர்மின்னியை ஹாலஜனாகிய குளோரின் பெற்றுக்கொண்டு Cl- எதிர்மின்மம் கொண்ட அணுவாக மாறி NaCl என்னும் உப்பாகின்றது.

பண்புகள்[தொகு]

இயல்பியல் பண்புகள்[தொகு]

கார உலோகங்கள் புன்சன் சுடரில் குறிப்பிட்ட நிறத்தை அளிக்கின்றன. லித்தியம் அடர்சிவப்பு நிறத்தையும், சோடியம் மஞ்சள் நிறத்தையும். ரூபிடியம், சீசியம் ஆகியவை ஊதா நிறத்தையும் தருகின்றன.எல்லா கார உலோகங்களும் திண்ம நிலையில் வலுக்குறைந்த பிணைப்பைப் பெற்றிருப்பதால் குறைவான உருகுநிலையும், கொதிநிலையும் பெற்றுள்ளன.கார மாழைகள் நெடுங்குழுவில் மேலிருந்து கீழே நகரும் பொழுது அத் தனிமங்களின் பண்புகள் ஒரு சீராக மாறுவதைப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக உருகுநிலை லித்தியத்திற்கு 453.69 K வில் இருந்து சீசியத்திற்கு 301.59 K ஆக குறைவதைப் பார்க்கலாம். அதே போல பிற பண்புகளும் ஒரே சீராக மாறுவதை பார்க்கலாம்.இவற்றை கத்தியால் வெட்ட இயலும். இவை வீரியம் மிகுந்தவை ஆதலால் இயற்கையில் சேர்மங்களாக மட்டுமே காணப்படுகின்றன.கார உலோகத் தொகுதியில் லித்தியத்திலிருந்து சீசியத்திற்கு கீழ்நோக்கிச் செல்லும்போது அணுப்பருமன் அதிகரிக்கிறது. இதே காரணத்தால் அணு ஆரமும், அயனி ஆரமும் படிப்படியாக உயருகின்றன.கார உலோகங்களின் அயனியாக்கும் ஆற்றல் மற்றவைகளை விடக் குறைவு. [1]

வேதியப் பண்புகள்[தொகு]

கார உலோகங்கள் ஒரு இணைத்திறன் எலக்ட்ரான்களை இழந்து ஒடுக்க வினைகளைத் தருகின்றன. எனவே இவை சிறந்த ஒடுக்கிகளாகச் செயல்படுகின்ரன.[1]

கார மாழைகள் அணுத் திணிவு (u) உருகுநிலை (K) கொதிநிலை (K) எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு
(electronegativity))
லித்தியம் 6.941 453.69 1615 0.98
சோடியம் 22.990 370.87 1156 0.93
பொட்டாசியம் 39.098 336.53 1032 0.82
ருபீடியம் 85.468 312.46 961 0.82
சீசியம் 132.905 301.59 944 0.79
பிரான்சியம் (223) ? 295 ? 950 0.7

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "அரசு தேர்விற்கான அரங்கம்: வேதியியல் - கார உலோகங்கள்". தினமணி (24 October 2013). பார்த்த நாள் 15 நவம்பர் 2013.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கார_உலோகம்&oldid=1549343" இருந்து மீள்விக்கப்பட்டது