உள்ளடக்கத்துக்குச் செல்

பாலிக் புலாவ் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலிக் புலாவ் (P053)
மலேசிய மக்களவைத் தொகுதி
பினாங்கு
Balik Pulau (P053)
Federal Constituency in Penang
பினாங்கு மாநிலத்தில்
பாலிக் புலாவ் மக்களவைத் தொகுதி

(மஞ்சள் வண்ணத்தில்)
மாவட்டம்தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்
பினாங்கு
வாக்காளர்களின் எண்ணிக்கை81,519 (2023)[1]
வாக்காளர் தொகுதிஜெலுத்தோங் தொகுதி[2]
முக்கிய நகரங்கள்ஜார்ஜ் டவுன், பினாங்கு, பாலிக் புலாவ், புக்கிட் பாலிக் புலாவ், பத்து ஈத்தாம், புலாவ் பெத்தோங்
பரப்பளவு147 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி பாக்காத்தான்
மக்களவை உறுப்பினர்முகமது பக்தியார் வான் சிக்
(Muhammad Bakhtiar Wan Chik)
மக்கள் தொகை132,344 (2020) [4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1974
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் பாலிக் புலாவ் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (65.3%)
  சீனர் (29.0%)
  இதர இனத்தவர் (0.9%)

பாலிக் புலாவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Balik Pulau; ஆங்கிலம்: Balik Pulau Federal Constituency; சீனம்: 峇央峇鲁国会议席) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் (Southwest Penang Island District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P053) ஆகும்.[6]

பாலிக் புலாவ் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

1974-ஆம் ஆண்டில் இருந்து பாலிக் புலாவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

பாலிக் புலாவ்

[தொகு]

பாலிக் புலாவ் புறநகர்ப்பகுதி பினாங்கு, தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தில்; பினாங்குத் தீவின் தென்மேற்கு முனையில் அமைந்துள்ள நகரம். மற்றும் இது தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தின் நிர்வாக மையமாகவும் உள்ளது.

1794 இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் (British East India Company); பாலிக் புலாவ் வேளாண் நகரம் நிறுவப்பட்டது. இன்றுவரை, பாலிக் புலாவின் பொருளாதாரம் வேளாண்மைத் துறையைப் பெரிதும் நம்பி உள்ளது. பினாங்கின் மிகவும் பிரபலமான விளைபொருட்களான ஜாதிக்காய், கிராம்பு மற்றும் டுரியான் பழங்கள் போன்றவை இங்கு இன்றைய வரையிலும் அதிகமாய் அறுவடை செய்யப் படுகின்றன.

பாலிக் புலாவ் புறநகர்ப் பகுதிகள்

[தொகு]

பாலிக் புலாவ் நகர்ப் பகுதி பினாங்கு தீவின் மேற்குப் பகுதியில் அமைந்து இருந்தாலும், பரபரப்பான நகர மையத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் பொதுவாக அமைதியான நகர்ப்பகுதி என்று சொல்லலாம். இருப்பினும் அண்மைய கால நகரமயமாக்கல் பாலிக் புலாவ் நகரத்தையும் விட்டு வைக்கவில்லை. குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் துரிதமாகி வருகின்றன.[7]

பாலிக் புலாவ் அதன் பல்வேறு வகையான டுரியான்களுக்குப் பெயர் பெற்றது. ஒவ்வோர் ஆண்டும், மே மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரையிலான காலக் கட்டத்தில், பெரிய அளவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை ஈர்க்கின்றது.[8][9][10]

பாலிக் புலாவ் மக்களவைத் தொகுதி

[தொகு]
பாலிக் புலாவ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1974-ஆம் ஆண்டில் பினாங்கு செலாத்தான் மக்களவைத் தொகுதியில் இருந்து
பாலிக் புலாவ் தொகுதி உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை P040 1974–1978 சம்சுரி சாலே
(Shamsuri Md. Salleh)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
5-ஆவது மக்களவை 1978–1982
6-ஆவது மக்களவை 1982–1986
7-ஆவது மக்களவை P048 1986–1990 முகமது சுப்கி டவுப்
(Mohamad Subky Raof)
8-ஆவது மக்களவை 1990–1995 முகமது பாரிட் அரிபின்
(Mohamed Farid Ariffin)
9-ஆவது மக்களவை P051 1995–1999 நுங்சாரி அகமது ராடி
(Nungsari Ahmad Radhi)
10-ஆவது மக்களவை 1999–2004 முகமது சைன் ஒமார்
(Mohd. Zain Omar)
11-ஆவது மக்களவை P053 2004–2008 இல்மி யகயா
(Hilmi Yahaya)
12-ஆவது மக்களவை 2008–2013 முகமது யுசுமாடி
(Mohd Yusmadi Yusoff)
பாக்காத்தான் ராக்யாட்
(பி.கே.ஆர்)
13-ஆவது மக்களவை 2013–2018 இல்மி யகயா
(Hilmi Yahaya)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
14-ஆவது மக்களவை 2018–2022 முகமது பக்தியார் சிக்
(Muhammad Bakhtiar Chik)
பாக்காத்தான் அரப்பான்
(பி.கே.ஆர்)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

பாலிக் புலாவ் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
80,264
வாக்களித்தவர்கள்
(Turnout)
64,937 75.98% - 9.60%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
63,911 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
163
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
863
பெரும்பான்மை
(Majority)
1,582 2.47% - 10.52
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
மலேசிய அரசாங்க அதிகாரப்பூர்வ அரசிதழ் (P.U. (B) 613);
[11]சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[12]

பாலிக் புலாவ் மக்களவை வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
முகமது பக்தியார் வான் சிக்
(Muhammad Bakhtiar Wan Chik)
பாக்காத்தான் 63,911 24,564 38.43% - 12.74%
முகமது அரிசு இடாம்
(Muhammad Harris Idaham)
பெரிக்காத்தான் - 22,982 35.96% + 35.96% Increase
சா எடான் உசேன் சா
(Shah Headan Ayoob Hussain Shah)
பாரிசான் - 15,478 24.22% - 13.96 %
சபாருடின் அகமது
(Sabaruddin Ahmad)
சுயேச்சை - 366 0.57% + 0.57% Increase
பசிலி முகமது
(Fazli Mohammad)
பெஜுவாங் - 341 0.53% + 0.53% Increase
ஜானி சொங் ஈவ் கீ
(Johny Ch'ng Ewe Gee)
சுயேச்சை - 180 0.28% + 0.28% Increase

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 1 ஜூன் 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  7. "RM20bil projects in Penang S-W district - Business News - The Star Online". www.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2017-03-15.
  8. jalmsab@st (2015-07-13). "Forget D24 and Maoshan, try kampong durians in Penang" (in en). The Straits Times. http://www.straitstimes.com/lifestyle/travel/forget-d24-and-maoshan-try-kampong-durians-in-penang. 
  9. Marco Ferrarese. "9 reasons Penang will rock your socks off". CNN. பார்க்கப்பட்ட நாள் 2017-03-15.
  10. "From jungle durians to a tour, our pick of farms to visit in Balik Pulau". 2015-06-28. http://www.themalaymailonline.com/eat-drink/article/from-jungle-durians-to-a-tour-our-pick-of-farms-to-visit-in-balik-pulau. 
  11. {https://lom.agc.gov.my/ilims/upload/portal/akta/outputp/1753273/PUB609%20(2022).pdf}}
  12. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]