நவம்பர் 2015
<< | நவம்பர் 2015 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMXXIV |
நவம்பர் 2015 (November 2015), 2015 ஆம் ஆண்டின் பதினோராம் மாதமாகும்.
சிறப்பு நாட்கள்
[தொகு]- நவம்பர் 3 - சக்தி நாயனார் குருபூசை
- நவம்பர் 10 - தீபாவளி
- நவம்பர் 12 - கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்
- நவம்பர் 13 - பூசலார் நாயனார் குருபூசை
நிகழ்வுகள்
[தொகு]- நவம்பர் 29:
- சிரியாவின் வடமேற்கே அரிகா நகரில் உருசியா போராளிகள் மீது வான் தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்டவர்கள் 18 பேர் பொது மக்கள் என சிரிய மனித உரிமைகள் அமைப்பு அறிவித்துள்ளது. (ராய்ட்டர்சு)
- திருத்தந்தை பிரான்சிசு மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கு பயணம் மேற்கொண்டார். (கார்டியன்)
- கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பிரயன்ட் தாம் ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார். (எஸ்பிஎன்)
- நவம்பர் 28:
- மாலியின் வடக்கே கிடால் நகரில் ஐநா அமைத்காக்கும் முகாம் ஒன்றில் ஜிகாடிய போராளிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். (யூரோநியூஸ்)
- பொதுநலவாய நாடுகளின் 2018 ஆம் ஆண்டு உச்சிமாநாடு ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.. (ஏஎஃப்பி)
- நவம்பர் 27:
- நைஜீரியா கடற்பகுதியில் போலந்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்றைத் தாக்கிய கடற்கொள்ளையர் கப்பலின் தலைவனையும், மேலும் நால்வரையும் கடத்தினர்.(ராய்ட்டர்சு)
- நைஜீரியா வடக்கே கானோ மாநிலத்தில் சியா முசுலிம் நிகழ்வு ஒன்றில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 21 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- பெரு தலைநகர் லிமாவில் வரலாற்றுக்கு முற்பட்ட நான்கு சமாதிகளை தொல்லியலாளர் கண்டுபிடித்தனர். (ஏபிசி)
- பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு மால்ட்டாவில் ஆரம்பமானது. (பிபிசி)
- நவம்பர் 26:
- நைஜரில் போகோ அராம் போராளிகளின் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர். (ஏஎஃப்பி)
- உருசியாவின் மில் எம்.ஐ.-8 உலங்குவானூர்தி ஒன்று கிழக்கு சைபீரியாவின் யெனிசி ஆற்றில் வீழ்ந்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். (ஏபி)
- ஆத்திரேலியாவின் வடக்கு ஸ்ட்ராட்புரோக் தீவில் உள்ள கடற்கரையில் உதைபந்தாட்ட அரங்கு ஒன்றின் அளவில் புதைகுழி ஒன்று தோன்றியது. (கார்டியன்)
- இலங்கையில் சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் தொடருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். (பிபிசி)
- நவம்பர் 25:
- இசுலாமிய அரசுப் போராளிகள் வசமுள்ள சிரிய-துருக்கி எல்லைப் பகுதி ஒன்றில் உருசியா நடத்திய வான் தாக்குதலில் பல பாரவூர்திகள் எரிந்தன. ஏழு பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- யெமனில் ஹூத்தி போராளிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்துவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் பல நூற்றுக்கணக்கான மத்திய, தென்னமெரிக்கக் கூலிப் படையினரை பணிக்கமர்த்தியது. (நியூயோர்க் டைம்சு)
- 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 மில்லியன் டாலர் பெறுமதியான இளஞ்சிவப்பு இந்திய வைரம் இமெல்டா மார்க்கோசிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. (கார்டியன்)
- காம்பியாவில் பெண் உறுப்பு சிதைப்பு தடை செய்யப்பட்டது. (பிபிசி)
- தெற்கு ஆஸ்திரேலியாவில் பெரும் காட்டுத்தீ பரவியதில் குறைந்தது இருவர் உயிரிழந்தனர். (ஏபிசி),(ஏபிசி)
- திருத்தந்தை பிரான்சிசு ஆப்பிரிக்காவுக்கான தனது முதலாவது அதிகாரபூர்வப் பயணத்தை ஆரம்பித்தார். (ராய்ட்டர்சு)
- நவம்பர் 24:
- துருக்கியின் F-16 போர் விமானங்கள் உருசிய சுகோய் சு-24 விமானம் ஒன்றை சிரியா எல்லையில் சுட்டு வீழ்த்தியது. பாரசூட் மூலம் இறங்கிய விமானி ஒருவர் சிரிய எதிர்ப்புப் ஓராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் சிரிய இராணுவத்தினரால் காப்பாற்றப்பட்டார். (பிபிசி) (டெலிகிராப்)
- உருசியாவின் இராணுவ உலங்குவானூர்தி ஒன்றை சிரியப் போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. (ராய்ட்டர்சு)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: லைபீரியாவில் 15 வயதுச் சிறுவன் எபோலா நோய் தாக்கி இறந்தான். (ராய்ட்டர்சு)
- நவம்பர் 22:
- வங்காளதேசத்தின் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அலி முகம்மது முஜாகீது, சலாகுதீன் காதர் சௌத்ரி ஆகியோர் 1971 விடுதலைப் போரின் போது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுக்காக தூக்கிலிடப்பட்டனர். (அல்ஜசீரா)
- நவம்பர் 21:
- நியூசிலாந்தில் உலங்குவானூர்தி ஒன்று வீழ்ந்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர். (ஸ்டஃப்)
- சீனாவில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். (ஏபி)
- கருத்தரிப்பின் போது காஃவீன் உட்கொள்வதால் குழந்தையின் பிற்கால நுண்ணறிவு அல்லது நடத்தையில் பாதிப்பு ஏற்படாது என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். (யூபிஐ)
- இசுலாமிய அரசு ஒரு பயங்கரவாத அமைப்பென மலேசியா அறிவித்தது. (ஏபி)
- நவம்பர் 20:
- பிரான்சு சிரியாவில் இசுலாமிய அரசுக்கு எதிராக குண்டுகள் வீசுவதற்கு தனது வான்பரப்பைப் பயன்படுத்த சைப்பிரசு அனுமதி அளித்தது. (கார்டியன்)
- 2015 பமாக்கோ தங்குவிடுதி தாக்குதல்: மாலி தலைநகர் பமாக்கோவில் 10 துப்பாக்கி நபர்கள் ஐந்து-நட்சத்திர உணவு விடுதியைத் தாக்கி 170 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். 19 பேர் கொல்லப்பட்டனர். மாலி படையினர் தாக்குதல் தொடுத்ததில் எஞ்சிய கைதிகளை விடுவித்தனர். (சீஎனென்) (பிரான்சு 24), (பிபிசி)
- சீனப் படையினர் சிஞ்சியாங் மாகாணத்தில் தாக்குதல் நடத்தியதில் உய்குர் போராளிகள் 28 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- உலகின் இரண்டாவது பெரிய இரத்தினக்கல் கரோவ் ஏகே6 (1,111 கரட்) போட்சுவானா தலைநகர் காபரோனி சுரங்கம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. 1905 இல் 3,106 கரட் குலினான் வைரம் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. (போர்ப்சு)
- நவம்பர் 14:
- இலங்கையில் நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுவிக்கக் கோரி ஏழாவது நாளாகத் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னேடுத்து வருகின்றனர். (தமிழ்வின்)
- நவம்பர் 2015 பாரிசுத் தாக்குதல்: பாரிசுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 129 என அறிவிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார். இசுலாமிய அரசு தாமே இதனை நடத்தியதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. (ராய்ட்டர்சு) (கார்டியன்) (யெருசலேம் போஸ்ட்)
- சப்பானின் தென்மேற்குக் கரையருகே 7.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (ராய்ட்டர்சு)
- நத்தூனா தீவுகள் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவிருப்பதாக இந்தோனேசியா அறிவித்தது. (போர்ப்சு)
- பிரான்சின் வடகிழக்கு நகரான ஸ்திராஸ்பூர்க்கில் அதிவேக தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 10 பேர் உயிரிழந்தனர். (பிபிசி)
- நவம்பர் 13:
- இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்யக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் சமூக அமைப்புகளின் ஆதரவுடன் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் முழுமையான ஒன்றியொதுக்கல் இடம்பெற்றது. (பிபிசி), (தமிழ்மிரர்)
- குருதியப் படையினர் வடக்கு ஈராக்கின் சிஞ்சார் நகரை இசுலாமிய அரசுப் போராளிகளிடம் இருந்து கைப்பற்றினர். (ராய்ட்டர்சு)
- பிரான்சின் தலைநகர் பாரீசில் பிரான்சு விளையாட்டரங்கம், மற்றும் ஓர் உணவகம் அருகே இடம்பெற்ற பல குண்டு, மற்றும் துப்பாக்கித் தாக்குதல்களில் குறைந்தது 26 பேர் உயிரிழந்தனர். பட்டக்கிளான் நாடக அரங்கில் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் அவசரகாலச் சட்டம் அமுலுக்கு வந்தது. (டெய்லி பீஸ்ட்) (ஏபி) (வாசிங்டன் போஸ்ட்) (கார்டியன்)
- செருமனியின் பவேரியா மாநிலத்தில் வாலென்ஃபெல்சு நகரில் தொடர் குடியிருப்பு மனை ஒன்றில் எட்டுக் குழந்தைகளின் உடல்கள் நெகிழிப் பைகளில் மூடப்பட்டிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டது. (சீஎனென்)
- மியான்மரில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூச்சியின் சனநாயகத்துக்கான தேசிய முன்னணி கட்சி நாடாளுமன்றத்தில் 348 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றது. (எக்கொனொமிஸ்டு) (கார்டியன்)
- புவியைச் சுற்றி வந்த செயற்கைக் கோள் டபிள்யூடி1190எஃப் இலங்கையின் தெற்கே வான்பரப்பில் வெடித்துச் சிதறியது. (சிபிசி)
- ஊக்கமருந்து பயன்பாட்டுக் குற்றச்சாட்டுகளை அடுத்து உருசிய வீரர்களை தமது போட்டிகளில் விளையாடுவதற்கு தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம் தடை விதித்தது. (ராய்ட்டர்சு)
- நவம்பர் 12:
- ஈராக்க்கின் சிஞ்சார் நகரில் இசுலாமிய அரசுப் போராளிகள் வசமிருந்த பல கிராமங்களை குர்தியப் படைகள் அமெரிக்க வான்தாக்குதல்களின் உதவியுடன் கைப்பற்றினர். (ராய்ட்டர்சு) (என்பிசி)
- உசுப்பெக்கித்தானில் 21 ஆண்டுகளாக சிறைப்பிடிக்கப்பட்டிருந்த முரோத் ஜுராயெவ் அரசியல் கைதி விடுவிக்கப்பட்டார். (நியூயோர்க் டைம்சு)
- நவம்பர் 11:
- இலங்கையில் நீண்டகாலமாக சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளில் 31 பேர் கொழும்பு நீதிமன்றம் ஒன்று பிணையில் விடுவித்தது. (பிபிசி)
- துருக்கியப் படையினர் பெரும்பாலும் குர்தியர்கள் வாழும் சில்வன் நகரில் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சிப் போராளிகளுக்கெதிராகப் பெரும் தாக்குதல் ஒன்றை ஆரம்பித்தனர். ஒன்பது நாட்களாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (ஏஎஃப்பி)
- மியான்மர் தேர்தலில் அறிவிக்கப்பட்ட 149 தொகுதிகளில் ஆங் சான் சூச்சியின் கட்சி 135 இடங்களைக் கைப்பற்றியது. (ராய்ட்டர்சு)
- நவம்பர் 10:
- சிரிய உள்நாட்டுப் போர்: லட்டாக்கியா நகரில் நடந்த குண்டுத் தாக்குதல் ஒன்றில் 23 பேர் கொல்லப்பட்டனர். (யூபிஐ)
- அமெரிக்காவின் ஏக்ரன் (ஒகைய்யோ) நகரில் தனியார் வானூர்தி ஒன்று குடியிருப்புத் தொகுதி ஒன்றின் மீது வீழ்ந்ததில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். (பொக்சு நியூசு)
- உலக கொடுக்கும் சுட்டெண்ணின் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் மியான்மர் முதலாமிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா, நியூசிலாந்து, கனடா, ஆத்திரேலியா, ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து, இலங்கை, அயர்லாந்து, மலேசியா ஆகிய நாடுகள் உள்ளன. (மார்க்கெட் வோட்ச்) (கார்டியன்)
- நவம்பர் 9:
- அம்மான் நகரில் யோர்தானியக் காவல்துறையினன் ஒருவர் பயிற்சியின் போது இரண்டு அமெரிக்கர்களையும் ஒரு தென்னாப்பிரிக்கரையும் சுட்டுக் கொன்றார். இவர் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். (பிபிசி)
- கிறித்துமசு தீவில் உள்ள ஆத்திரேலிய அகதி முகாமில் ஈரானிய அகதி ஒருவர் இறந்ததை அடுத்து அங்கு கலவரம் வெடித்தது. (தி ஆத்திரேலியன்)
- மியான்மர் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி தனது தோல்வியை ஒப்புக் கொண்டது. ஆங் சான் சூச்சியில் சனநாயகத்துக்கான தேசிய முன்னணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. (ராய்ட்டர்சு)
- ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை இசுக்கொட்லாந்துக்கு அதிக அதிகாரங்களைக் கொடுக்கும் சட்டமூலத்தை நிறைவேற்றியது. (பிபிசி)
- வளிமண்டலத்தில் பைங்குடில் வளிமம் 2014 ஆம் ஆன்டில் அதிகூடிய நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (சயன்டிபிக் அமெரிக்கன்)
- நவம்பர் 8:
- புருண்டியின் தலைநகர் புஜும்புராவில் மதுச்சாலை ஒன்றில் ஆயுததாரி ஒருவர் 7 பேரைச் சுட்டுக்கொன்றார். (பிபிசி)
- குரோவாசியா புதிய அரசைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.
- பர்மாவில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடைபெற்றன. ஆங் சான் சூச்சியின் சனநாயகத்துக்கான தேசிய முன்னணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. (எல்லே டைம்சு)
- அரிசோனா, கலிபோர்னியா, நெவாடா மாநிலங்களில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்களில் இருந்து வினோத ஒளிக்கற்றைகள் அவதானிக்கப்பட்டன. (பிபிசி)
- நவம்பர் 7:
- சிரிய உள்நாட்டுப் போர்: இசுலாமிய அரசுப் போராளிகள் பெப்ரவரியில் தாம் பிடித்து வைத்திருந்த 37 அசிரியக் கிறித்தவர்களை விடுவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (ஏபி)
- சைப்பிரசில் கிமு 300 ஆம் ஆண்டு கால நாடக அரங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (ஏஎஃப்பி)
- மெட்ரோஜெட் விமானம் 9268: விமான கருப்புப் பெட்டித் தகவலின் படி விமானம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (பிபிசி) (யூஏஸ்ஏ டுடே) (மிரர்)
- சியேரா லியோனி எபோலா தீநுண்ம நோய் அற்ற நாடாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. (பிரான்சு 24), (பிபிசி)
- சீன அரசுத்தலைவர் சீ சின்பிங், தாய்வான் தலைவர் மா சிங்-சூ in சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். 1949 இற்குப் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் தடவையாகும். (சீஎனென்)
- நவம்பர் 6:
- இந்தியா கிரீன்பீஸ் அமைப்பைத் தடை செய்து 30 நாட்களுக்குள் அவ்வமைப்பை மூடி விட வேண்டும் என உத்தரவிட்டது. (என்டிரிவி) (ராய்ட்டர்சு)
- மெட்ரோஜெட் விமானம் 9268 குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதை அடுத்து உருசியா எகிப்து வரையான விமான சேவைகளை இடைநிறுத்தியது. (பிபிசி)
- நவம்பர் 2:
- ஆத்திரேலியாவில் சர் பட்டங்கள் இனிமேல் தேசிய விருதுகளின் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டாது என பிரதமர் மால்கம் டேர்ன்புல் அறிவித்தார். (டைம்) (ராய்ட்டர்சு)
- நவம்பர் 1:
- பகாமாசு அருகே 33 பயணிகளுடன் அக்டோபர் 1 அன்று காணாமல் போன படகின் சிதைவுகள் எனக் கருதப்படும் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதனைத் தேடி ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை ஐக்கிய அமெரிக்கக் கடற்படை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. (சீஎனென்)
இறப்புகள்
[தொகு]- நவம்பர் 1 - ஆ. வேலுப்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1936)
- நவம்பர் 3 - டொம் கிரவெனி, இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் (பி. 1927)
- நவம்பர் 8 - மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த பிக்கு, மனித உரிமை செயற்பாட்டளர் (பி. 1942)
- நவம்பர் 9 - சிற்பி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1933)
- நவம்பர் 14 - கே. எஸ். கோபாலகிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1929)
- நவம்பர் 17 - பித்துக்குளி முருகதாஸ், பக்திப் பாடகர் (பி. 1920)
- நவம்பர் 18 - கா. மீனாட்சிசுந்தரம், தமிழறிஞர் (பி. 1925)
- நவம்பர் 22 - சலாகுதீன் காதர் சௌத்ரி, வங்காளதேச அரசியல்வாதி, போர்க்குற்றவாளி (பி. 1949)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்