குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குர்திசுதான் தொழிலாளர் கட்சி (குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி, குர்தி: Partiya Karkerên Kurdistan or PKK, Kurdistan Workers Part) சுதந்திரமான குர்திஸ்தானை ஏற்படுத்த கட்டமைக்கப்பட்ட ஒரு போராட்டக் கட்சி. துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் பரந்து இருக்கும் தொடரான நிலப்பரப்பான குர்திஸ்தானை, சுதந்திர சோசலிசக் குடியராசாக பிரிக்க இவ்வமைப்பு முயற்சி செய்கிறது. மார்க்சிய-லெனிய சமவுடமை, காலனித்துவ எதிர்ப்பு, பெண்ணுரிமை ஆகிய கொள்கைகளைக் கொண்ட இவ்வமைப்பு குர்து தேசியத்தால் உந்தப்பட்டது.

இந்தக் கட்சி 1970களில் அப்துல்லா ஓசுலான் என்பவரால் தொடங்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]