அப்துல்லா ஓசுலான்
அப்துல்லா ஓசுலான் | |
---|---|
பிறப்பு | 4 ஏப்ரல் 1948 ஓமர்லி,[1] துருக்கி |
இனம் | குர்தி |
குடியுரிமை | துருக்கி |
பணி | குர்திசுத்தான் தொழிலாளர் கட்சியின் நிறுவனத் தலைவர்,[2] அரசியல்வாதி, கருத்தியல்வாதி, எழுத்தாளர் |
அமைப்பு(கள்) | குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி (PKK) அனைத்து குர்திய சமுதாயங்களின் கூட்டமைப்பு (KCK) |
சமயம் | ஏதுமில்லை இறைமறுப்பு[3][4][5][6] |
அப்துல்லா ஓசுலான் (அப்துல்லா ஓஸ்லான், குர்தி: Abdullah Ocala; துருக்கி: Abdullah Öcalan) குர்திசுத்தான் தொழிலாளர் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், குர்திசுத்தான் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய நபரும் ஆவார்[7]. 1978ல் இவரால் ஆரம்பிக்கப்பட்ட குர்திசுத்தான் தொழிலாளர்கள் கட்சி, துருக்கிய அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை 1984ல் முன்னெடுத்தது. இதனைத் தொடர்ந்த துருக்கிய அரசின் நெருக்கடிகளின் காரணமாக சிரியா, இரசியா, இத்தாலி, கிரீசு போன்ற பல நாடுகளில் அரசியல் அகதியாகத் தஞ்சமடைந்திருந்த ஓசுலான், 1999ல் கென்யா தலைநகர் நைரோபி நகர விமான தளத்தில் வைத்து துருக்கியப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இம்ராலி தீவில் உள்ள தனிமைச் சிறையில் இன்று வரை அடைக்கப்பட்டுள்ளார்[8].
வாழ்க்கை வரலாறு
[தொகு]இளமை
[தொகு]அப்துல்லா ஓசுலான், 1949 ஏப்ரல் 4ல் தென்கிழக்கு துருக்கியில் உள்ள ஓமர்லி நகரில் பிறந்தவர்[9]. குர்திய இனத்தை சேர்ந்த தந்தைக்கும், துருக்கிய தாய்க்கும் பிறந்தவர்[10][11]. இவரின் உடன்பிறந்தோர் மொத்தம் ஏழு பேர். தொடக்கக் கல்வியைத் தனது சொந்த ஊரிலேயே முடித்த ஓசுலான், உயர் கல்வி மற்றும் ஆட்சி இயல் படிப்பை அங்காரா நகரில் முடித்தார்[12].தொடர்ந்த நாட்களில், குர்திய கலாச்சாரம் மற்றும் மொழியைப் புறக்கணிக்கும்[13][14] துருக்கிய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட ஆரம்பித்தார்.
கட்சி ஆரம்பித்தல்
[தொகு]1970களில் அமெரிக்க மற்றும் சோவியத் ஒன்றியத்தின் பனிப்போர் தாக்கம் துருக்கியிலும் எதிரொலித்தது. தொடர்ந்த இடது மற்றும் வலது சாரிகளின் மோதலின் ஊடே 1980ல் அன்றைய துருக்கியின் இடதுசாரி அரசு ஒரு அரசியல் புரட்சியின் மூலம் கவிழ்க்கப்பட்டு, தளபதி கேனென் எவ்ரான் தலைமையில் வலதுசாரி அரசு அமைக்கப்பட்டது. இதற்கிடையில், 1978ல் பொதுவுடைமை, மார்க்சிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி தொடங்கப்பட்டது. ஓசுலான் இந்தக் கட்சியை ஆரம்பிப்பதில் முக்கியப் பங்காற்றினார். துருக்கி, சிரியா, இராக் மற்றும் இரான் ஆகிய நாடுகளில் உள்ள பூர்வீக குர்திய நிலங்களை ஒன்று சேர்த்து சுதந்திர குர்திசுத்தானை உருவாக்குவது இதன் முக்கியக் கொள்கையாகக் கொள்ளப்பட்டது[7]. ஓசுலான் இதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
துருக்கிய அரசுடனான மோதல்
[தொகு]1980ல் அமைந்த தளபதி கேனென் எவ்ரான் தலைமையிலான துருக்கிய அரசு, சுதந்திர குர்திசுத்தான் கோரிக்கைகளை முற்றாக நிராகரித்தது. மேலும் இந்த கோரிக்கைகளைக் கொண்ட இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மீதும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. இதைத் தொடர்ந்து, 1984ல் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி, துருக்கி அரசுக்கு எதிரான போரை ஆரம்பித்தது. நேரடியாகவும், தற்கொலைப் படைத் தாக்குதல்களாகவும் நடைபெற்ற இந்தப் போரினால் 40000க்கும் அதிகமான அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது[15].
தலைமறைவு வாழ்க்கை மற்றும் கைது
[தொகு]போரின் ஆரம்பம் தொட்டு 1998 வரை, சுமார் 15 வருடங்கள் ஓசுலான் சிரியாவில் தங்கி இருந்தார். இறுதியில், துருக்கிய அரசின் நெருக்குதல் காரனமாக நாட்டை விட்டு வெளியேறுமாறு ஓசுலானை சிரிய அரசு கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, ஒரு மாதம் மாசுகோவில் தலைமறைவாகத் தங்கி இருந்தார்[16]. அங்கிருந்து உருசிய அரசினால் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ஓசுலான் இத்தாலியில் தஞ்சமடைந்தார். தொடர்ந்த துருக்கிய அரசின் நெருக்கடி காரணமாக பெப்ரவரி 1999ல் அங்கிருந்து வெளியேறியவர், கென்ய தலைநகர் நைரோபியில் வைத்து கைது செய்யப்பட்டார். ஓசுலானின் இந்தக் கைதில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் இசுரேலின் மொசார்ட் ஆகியவற்றுக்கு முக்கிய பங்கு இருந்தன[17][18].
முன்னதாக இத்தாலியில் இருந்து வெளியேறிய ஓசுலான்., நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, கிரீசு, செர்பியா மற்றும் ஆலந்து ஆகிய நாடுகளிடம் வேண்டிய அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டது[16]. இதைத் தவிர, பெலாரசு நாட்டிலும் இவர் சிறிது காலம் உருசிய ஆதரவுடன் தங்கி இருந்ததாக துருக்கி குற்றம் சாட்டுகின்றது.
விசாரனை மற்றும் சிறைவாழ்க்கை
[தொகு]நைரோபில் துருக்கியப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட ஓசுலான், இம்ராலி தீவில் உள்ள தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்காக அந்த சிறையில் இருந்த கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டதுடன் சிறையும் பலப்படுத்தப்பட்டது. நான்கு மாதங்கள் நடைபெற்ற நீதிமன்ற விசாரணைகளின் முடிவில் ஓசுலானுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது[19]. இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்பும் துருக்கியின் ஆவல் காரனமாக, 2002ல் அந்நாட்டில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டதை அடுத்து, ஓசுலானின் தண்டனை பிணையில் வெளிவரமுடியாத ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது[20][21].அன்று முதல் இன்று வரை இம்ராலி தனிமைச் சிறையிலேயே ஓசுலான் அடைக்கப் பட்டுள்ளார்.
அரசியல் பார்வை
[தொகு]ஓசுலான் மார்க்சிய வழியில் ஒரு மக்கள் புரட்சியின் மூலம் சுதந்திர குர்திசுத்தானை உருவாக்க முனைந்தவர்[22]. தமக்கென ஒரு தாயகம் இல்லா நிலையில் குர்துக்களும், கிரேக்கர்கள் அர்மீனியர்கள் மற்றும் அசிரியர்கள் வரிசையில் தமது பாரம்பரியத்தை இழந்த மக்களாகிவிடுவர் என்பது இவரின் கருத்து[23]. ஆயினும் இவரது குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி, துருக்கிய மக்களின் மீது மேற்கொண்ட தாக்குதல்களின் காரனமாக இவரின் மீது தீவிரவாத முத்திரை விழுந்தது. தங்கள் மக்கள் தொடர்ந்து தாக்கப்படும் போதும், குர்துக்களின் அரசியல் தீர்வுகள் எதையும் துருக்கிய அரசு ஏற்காத போதும், போர் என்பது அவசியமாகின்றது என்பது இவர் இதற்குக் கொடுக்கும் விளக்கம் ஆகும்.
ஓசுலானின் கைதுக்குப் பிறகு, குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி துருக்கியுடன் போர் நிறுத்தத்தை அறிவித்ததுடன், துருக்கியப் பகுதிகளில் இருந்து தமது படைகளைத் திரும்பப் பெற்றது[7][24]. ஓசுலானும் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்ததுடன், குர்துக்களின் பிரட்சனைக்கு அரசியல் தீர்வு காண ஐரோப்பிய நாடுகள் தமக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு தாம் தமது தனிநாடு கோரிக்கையையும் கைவிட்டு, துருக்கிய அரசின் கீழ் தன்னாட்சி மாகாணமாக, குர்திசுத்தானை உருவாக்குவதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்[25][26].
இதையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.nndb.com/people/488/000162002/
- ↑ Paul J. White, Primitive rebels or revolutionary modernizers?: the Kurdish national movement in Turkey, Zed Books, 2000, "Professor Robert Olson, University of Kentucky"
- ↑ Özgür Yaşamla Diyaloglar, October 2002, page 257
- ↑ Sümer Rahip Devletinden Demokratik Uygarlığa, Volume 1, December 2001, page 204
- ↑ Sümer Rahip Devletinden Demokratik Uygarlığa, Volume 1, December 2001, page 313
- ↑ Sümer Rahip Devletinden Demokratik Uygarlığa, Volume 1, December 2001, page 354
- ↑ 7.0 7.1 7.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-04-25.
- ↑ http://news.bbc.co.uk/2/hi/europe/303045.stm
- ↑ https://web.archive.org/web/20000816095333/http://www.cnn.com/SPECIALS/1999/ocalan/stories/ocalan.profile/ CNN Archives
- ↑ Blood and Belief: The Pkk and the Kurdish Fight for Independence, by Aliza Marcus, p.15, 2007
- ↑ Perceptions: journal of international affairs - Volume 4, no.1, SAM (Center), 1999, p.142
- ↑ Hurriet - a turkish daily
- ↑ To begin with, one has to acknowledge that Turkey has a shameful history with regards to its Kurdish citizens. The republic, which was founded in 1923 from the remains of the more pluralist Ottoman Empire, decided to forcefully assimilate its Kurds, which make up some 15 per cent of its population. Hence, from the mid-1920s, the Kurdish language was banned and Kurds were declared “of the Turkish stock”, or, in a later version, “mountain Turks” who forgot who they were. - aljazeera.com
- ↑ http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6219:2009-09-09-12-08-19&catid=105:kalaiarasan&Itemid=50
- ↑ http://www.pkkonline.com/en/index.php?sys=article&artID=22 பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம் In response to the continuing persecution, the Kurdistan Workers Party, PKK, launched an armed struggle against the Turkish central government in 1984. Their aim was to exercise the right to self-determination of the Kurdish people. During this war approximately 40,000 people lost their lives.
- ↑ 16.0 16.1 http://news.bbc.co.uk/2/hi/europe/280473.stm
- ↑ Thomas, Gordon: Gideon's Spies: The Secret History of the Mossad (1999)
- ↑ http://www.nytimes.com/1999/02/20/world/us-helped-turkey-find-and-capture-kurd-rebel.html New york times
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2002-07-02. பார்க்கப்பட்ட நாள் 2013-04-25.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-05-26. பார்க்கப்பட்ட நாள் 2006-05-26.
- ↑ http://news.bbc.co.uk/2/hi/world/monitoring/380845.stm
- ↑ Daily Report. West Europe, United States. Foreign Broadcast Information Service, 1994, p.45-58
- ↑ http://www.chris-kutschera.com/A/Ocalan%20Last%20Interview.htm பரணிடப்பட்டது 2013-10-17 at the வந்தவழி இயந்திரம் is not a matter of terrorism. Europe is responsible for the Treaty of Lausanne (1923), it owes the Kurds a revision of this treaty. With this treaty four peoples were eliminated from the map: the Greeks, the Armenians, the Assyrians, and now they want to eliminate the Kurds.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-17. பார்க்கப்பட்ட நாள் 2013-04-25.
- ↑ http://edition.presstv.ir/detail/142279.html 'PKK ready to swap arms for autonomy'
- ↑ http://www.ekurd.net/mismas/articles/misc2011/1/turkey3107.htm பரணிடப்பட்டது 2012-07-31 at Archive.today Kurdish PKK leader: We will not withdraw our autonomy demand 12.1.2011