உள்ளடக்கத்துக்குச் செல்

நவம்பர் 2015 பாரிசுத் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவம்பர் 2015 பாரிசுத் தாக்குதல்
November 2015 Paris attacks
[[File:
நவம்பர் 2015 பாரிசுத் தாக்குதல் is located in Paris
லெ பெட்டி காம்போட்ச்
லெ பெட்டி காம்போட்ச்
பிரான்சு விளையாட்டரங்கு
பிரான்சு விளையாட்டரங்கு
பட்டக்கிளான்
பட்டக்கிளான்
லெ கெரிலோன்
லெ கெரிலோன்
|250px|alt=|பாரிசு, சென்-டெனிசு பகுதியில் தாக்குதல் இடங்கள்]]
பாரிசு, சென்-டெனிசு பகுதியில் தாக்குதல் இடங்கள்
இடம்பாரிஸ் மற்றும் சென் டெனிசு, பிரான்சு
நாள்நவம்பர் 13, 2015 (2015-11-13)
நவம்பர் 14, 2015 (2015-11-14)
21:16 – 00:58 (மஐநே)
தாக்குதல்
வகை
பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்புகள், பணயக்கைதிகள் பிடிப்பு
ஆயுதம்
இறப்பு(கள்)குறைந்தது 127[2] (தாக்குதல் நடத்திய 7 பேர் உட்பட)[2][3]
காயமடைந்தோர்200+[2]
தாக்கியோர்தெரியவில்லை
தாக்கியோரின் எண்ணிக்கைகுறைந்தது 5

நவம்பர் 2015 பாரிசுத் தாக்குதல் 2015 நவம்பர் 13 அன்று பிரான்சின் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற ஒற்றை ஓநாய் தாக்குதல் முறையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் ஆகும். நவம்பர் 13 இரவு பாரிசின் பல இடங்களில் துப்பாக்கி, குண்டு, தற்கொலைத் தாக்குதல்கள், மற்றும் பணயக்கைதிகளைப் பிடித்தல் போன்றவை இடம்பெற்றன. தாக்குதல்கள் மஐநே இரவு 09:16 மணிக்கு,[4] பிரான்சு விளையாட்டரங்கம், மற்றும் செயின்ட் டெனிசு என்ற வடக்குப் புறநகர்ப் பகுதியிலும், 1வது, 10வது, 11வது மாவட்டங்களிலும் ஆரம்பமாயின.[4][5] மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளும், ஆறு இடங்களில் துப்பாக்கிச் சூட்டு நிகவுகளும் இடம்பெற்றன.[5]

குறைந்தது 127 பேர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது,[2] இவர்களில் 89 பேர் பட்டக்கிளான் நாடக அரங்கில் கொல்லப்பட்டனர்.[6][2][7][8] 342 பேர் காயமடைந்தனர்.[2] இவர்களில் 99 பேர் படுகாயமடைந்தனர்.[3] தாக்குதல் நடத்தியவர்கள் அனைத்து எட்டு பேரும் கொல்லப்பட்டார்கள்.[2][3] இத்தாக்குதல்களை அடுத்து, பிரெஞ்சு அரசுத்தலைவர் பிரான்சுவா ஆலந்து நாடு முழுவதும் அவசரகால நிலையைப் பிறப்பித்தார். பிரான்சுடனான எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டது.[6] 1944 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக பாரிசு நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.[9]

நவம்பர் 14 அன்று இசுலாமிய அரசு இத்தாக்குதல்களுக்கு உரிமை கோரியது.[10][11] சிரிய உள்நாட்டுப் போர் மற்றும் ஈராக்கிய உள்நாடுப் போர்களில் பிரான்சின் பங்களிப்பே இத்தாக்குதல்களுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.[12] இத்தாக்குதல்கள் "உள்நாட்டு உதவியுடன்" வெளிநாடு ஒன்றிலேயே திட்டமிடப்பட்டதாக பிரான்சுவா ஆலந்து தெரிவித்தார்.[13][14] இத்தாக்குதல்கள் "போர்த் தன்மையானது" என அவர் கூறினார்.[15]

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பாரிசில் நடந்த மிகக் கொடூரமான தாக்குதலாகவும்,[16][17] 2004 மாட்ரிட் தாக்குதலுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்ற கொடூரமான தாக்குதலாகவும் இது பார்க்கப்படுகிறது.[18]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Paris attacks: More than 100 killed in gunfire and blasts, French media say". CNN. 14 November 2015. பார்க்கப்பட்ட நாள் 14 November 2015.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Paris attacks". BBC News. http://www.bbc.co.uk/news/live/world-europe-34815972. 
 3. 3.0 3.1 3.2 Claire Phipps; Kevin Rawlinson (2015-11-13). "All attackers dead, police say, after shootings and explosions kill at least 150 in Paris – live updates". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 2015-11-14.
 4. 4.0 4.1 "Soudain, l'une des bombes explose en plein match". 20 minutes (Switzerland) (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 14 நவம்பர் 2015. On entend clairement, sur cette vidéo, la détonation de 21h16
 5. 5.0 5.1 Nossiter, Adam (13 November 2015). "Multiple Attacks Roil Paris; President Hollande Is Evacuated From Stadium". http://www.nytimes.com/2015/11/14/world/europe/multiple-attacks-roil-paris-president-hollande-is-evacuated-from-stadium.html. பார்த்த நாள்: 13 November 2015. 
 6. 6.0 6.1 Rawlinson, Kevin (13 November 2015). "Fatal shootings and explosion reported in Paris – live". The Guardian. http://www.theguardian.com/world/live/2015/nov/13/shootings-reported-in-eastern-paris-live. பார்த்த நாள்: 13 November 2015. 
 7. "Paris shootings: Casualties in city centre and explosion at the Stade de France". BBC News. 13 November 2015. http://www.bbc.co.uk/news/world-europe-34814203. பார்த்த நாள்: 13 November 2015. 
 8. "Paris shootings and explosions near the Stade de France kill 18". BBC News. 13 November 2015. பார்க்கப்பட்ட நாள் 13 November 2015.
 9. "France's Hollande Orders Borders Closed, Paris Under First Mandatory Curfew Since 1944". The Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 14 November 2015.
 10. "L'organisation État islamique revendique les attentats de Paris" (in French). France 24. 14 November 2015. பார்க்கப்பட்ட நாள் 14 November 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 11. "ISLAMIC STATE RELEASES OFFICIAL STATEMENT: 'WE DID IT AND PARIS IS JUST THE START OF A STORM'". DiscloseTv. 14 November 2015. Archived from the original on 16 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 November 2015.
 12. Dalton, Matthew; Varela, Thomas; Landauro, Inti (14 November 2015). "Paris Attacks Were an 'Act of War' by Islamic State, French President François Hollande Says". The Wall Street Journal. பார்க்கப்பட்ட நாள் 14 November 2015. Islamic State claimed responsibility for the attacks on a social media account, but didn't provide specific information that would allow the claim to be verified. It said the attacks were retaliation for French airstrikes against the group in Syria and Iraq.
 13. Nossiter, Adam; Breeden, Aurelien; Bennhold, Katrin (14 November 2015). "Three Teams of Coordinated Attackers Carried Out Assault on Paris, Officials Say; Hollande Blames ISIS". The New York Times. http://www.nytimes.com/2015/11/15/world/europe/paris-terrorist-attacks.html. பார்த்த நாள்: 14 November 2015. 
 14. "Hollande says Paris attacks 'an act of war' by Islamic State". Thomson Reuters Foundation. 14 November 2015. Archived from the original on 14 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 November 2015.
 15. "Paris attacks: Hollande blames Islamic State for 'act of war'". BBC News. 14 November 2014. பார்க்கப்பட்ட நாள் 14 November 2015.
 16. Fraser, Isabelle; Henderson, Barney. "Paris shooting: terrorists attack French capital – as it happened on Friday Nov 13". The Telegraph. பார்க்கப்பட்ட நாள் 14 November 2015.
 17. Slaughter, Graham. "Paris on edge: Recent terror attacks in France". CTV News. CTV news. பார்க்கப்பட்ட நாள் 14 November 2015.
 18. Nossiter, Adam; Breeden, Aurelien; Clark, Nicola (14 November 2015). "Paris Attacks Were an 'Act of War' by ISIS, Hollande Says". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 14 November 2015.

வெளி இணைப்புகள்[தொகு]