2015 பமாக்கோ தங்குவிடுதி தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நவம்பர் 2015 பமாக்கோ தங்குவிடுதி தாக்குதல்
பமாக்கோவின் அமைவிடம்
இடம்பமாக்கோ, மாலி
ஆள்கூறுகள்12°38′07″N 8°01′51″W / 12.6352°N 8.0308°W / 12.6352; -8.0308ஆள்கூறுகள்: 12°38′07″N 8°01′51″W / 12.6352°N 8.0308°W / 12.6352; -8.0308
நாள்20 நவம்பர் 2015 (UTC)
தாக்குதல்
வகை
திரள் துப்பாக்கிச் சூடு, பிணையாளர் சிக்கல்
ஆயுதம்தானியக்கத் துப்பாக்கிகள்
இறப்பு(கள்)19 - 27 (2 மாலிகள், 1 பிரான்சியர்)[1][2][3]
காயமடைந்தோர்குறைந்தது 2 மாலி சிறப்புக் காவல் படையினர்[4]

நவம்பர் 20, 2015, அன்று மாலியின் தலைநகரும் பெரிய நகரமுமான பமாக்கோவிலுள்ள இராடிசன் புளு தங்குவிடுதியில் திரள் துப்பாக்கிச் சூடும் பிணையாளர் கைப்பற்றுகையும் நடைபெற்றது. ஐக்கிய அமெரிக்காவிற்கு உரிமையான இந்த தங்குவிடுதி வெளிநாட்டு வணிக மக்களுக்கும் வானூர்தி பணியாளர்களுக்கும் மிகுந்த விருப்பமுடைய தங்கு விடுதியாகும்.[5]

குறைந்தது 19 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.[1] சிறப்புக் காவல்படையினர் இந்த விடுதியை அடைந்து எதிர்வினையாற்றி உயிர்தப்பிய பிணையாளர்களை விடுவித்தனர்.[6][7]

அல் காயிதாவுடன் இணைந்துள்ள ஆபிரிக்க ஜிகாதியக் குழுவான அல்-மூரபித்தூன் இதற்கு பொறுப்பேற்று துவிட்டரில் செய்தி அனுப்பியது. இருப்பினும் இச்செய்தி சரிபார்க்கப்படவில்லை.[1][8]

மேற்சான்றுகள்[தொகு]