இமெல்டா மார்க்கோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமெல்டா மார்க்கோசு
பிலிப்பீன்சின் முதல் சீமாட்டி
பதவியில்
திசம்பர் 30, 1965 – பெப்ரவரி 25, 1986
குடியரசுத் தலைவர்பேர்டினண்ட் மார்க்கோஸ்
முன்னையவர்இவா மாகபகால்
பின்னவர்அமெலிதா இராமோசு
பிலிப்பீன்சு நாடாளுமன்ற உறுப்பினர் (இரண்டாம் மாவட்டம்)
பதவியில் உள்ளார்
பதவியில்
சூன் 30, 2010
குடியரசுத் தலைவர்பெனிக்னோ அக்கீனோ III
முன்னையவர்பெர்டினான்டு மார்க்கோசு, இளையவர்
பிலிப்பீன்சு நாடாளுமன்ற உறுப்பினர் (முதல் மாவட்டம்)
பதவியில்
சூன் 30, 1995 – சூன் 30, 1998
குடியரசுத் தலைவர்பிடெல் வி. இராமோசு
முன்னையவர்சிறிலோ ராய் மோன்டெயோ
பின்னவர்ஆல்பிரெடு இரோமுல்டேசு
இடைக்கால தேசிய சட்டமன்றம் (வலயம் IV-A
பதவியில்
சூன் 12, 1978 – சூன் 5, 1984
குடியரசுத் தலைவர்பேர்டினண்ட் மார்க்கோஸ்
மணிலாப் பெருநகர ஆளுநர்
பதவியில்
பெப்ரவரி 27, 1975 – பெப்ரவரி 25, 1986
குடியரசுத் தலைவர்பேர்டினண்ட் மார்க்கோஸ்
பின்னவர்ஜெயோமார் பினய்
மாந்தக் குடியிருப்பு அமைச்சர்
பதவியில்
1978–1986
குடியரசுத் தலைவர்பேர்டினண்ட் மார்க்கோஸ்
முன்னையவர்அண்டோனியோ வில்லாரமா
பின்னவர்மிடா பர்தோ டெ தவேரா
முழு அதிகாரமுள்ள, சிறப்பு தூதர்
பதவியில்
1978–1986
குடியரசுத் தலைவர்பேர்டினண்ட் மார்க்கோஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இமெல்டா ரெமெடியோசு விசிடாசியோன் டிரினிடாட் ரோமுலாடேசு

சூலை 2, 1929 (1929-07-02) (அகவை 94)
மணிலா, பிலிப்பீன்சு
தேசியம்பிலிப்பினோ
அரசியல் கட்சிகிலுசங் பகோங் லிபுனன் (1978–நடப்பு)
பிற அரசியல்
தொடர்புகள்
தேசியக் கட்சி (1965-1978; 2009–நடப்பு)
துணைவர்பேர்டினண்ட் மார்க்கோஸ் (1954–1989; அவரது இறப்பு)
பிள்ளைகள்இமீ
பெர்டினான்டு மார்க்கோசு இளையவர்
இரீன்
ஐமீ
வாழிடம்மகட்டி
வேலைதூதர்
தொழில்அரசியல்வாதி

இமெல்டா மார்க்கோசு, (Imelda Marcos, சூலை 2, 1929) மறைந்த பிலிப்பீனிய குடியரசுத் தலைவர் பெர்டினான்டு மார்க்கோசின் மனைவியாவார். ஆயிரத்திற்கும் கூடுதலான காலணி சோடிகளைச் சேகரித்ததற்காக பரவலாக அறியப்படுகின்றார்.

இமெல்டா எஃகு பட்டாம்பூச்சி என்றும் இரும்பு பட்டாம்பூச்சி என்றும் அறியப்படுகின்றார்.[1][2] பெனிக்னோ அக்கினோவின் கொலையில் குடியரசுத் தலைவர் மார்கோசின் அரசு பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து மணிலா மக்கள் நடத்திய புரட்சியில் மார்க்கோசு அரசு 1986இல் வீழ்த்தப்பட்டது. அடுத்து குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கொரசோன் அக்கினோ, மார்க்கோசு குடும்பத்தை அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு நாடுகடத்த கிளார்க்கு வான்படைத் தளத்திலிருந்த அமெரிக்கப்படைகளுக்கு கோரிக்கை விடுத்தார். இதன்படி மார்க்கோசு குடும்பத்தினர் ஹவாய் தீவுகளுக்கு அனுப்பப்பட்டனர். பெர்டினான்டு இறந்த பிறகு இமெல்டாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் பிலிப்பீன்சு திரும்ப அக்கினோ அனுமதியளித்தார். அவரது மீள்வருகைக்குப் பிறகு அவரது அரசியல் மரபு திரும்பியது. 1995இல் லெய்டியிலிருந்தும் 2010இல் இல்லோகோசு நோர்த்தெயிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

காட்சியகம்[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Reid, Robert H. (November 3, 1991). "A "Roller-Coaster" Life For One Of The World's Most Famous Women". அசோசியேட்டட் பிரெசு. 
  2. Soloski, Alex (October 6, 2009). "Imelda Marcus Gets the Ol' Song and Dance at Julia Miles Theater". The Village Voice இம் மூலத்தில் இருந்து நவம்பர் 5, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091105131355/http://www.villagevoice.com/2009-10-06/theater/imelda-marcus-gets-the-ol-song-and-dance-at-julia-miles-theater/. பார்த்த நாள்: June 8, 2009. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமெல்டா_மார்க்கோஸ்&oldid=3538002" இலிருந்து மீள்விக்கப்பட்டது