மெட்ரோஜெட் விமானம் 9268

ஆள்கூறுகள்: 30°09′02″N 34°10′41″E / 30.1506°N 34.178°E / 30.1506; 34.178
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெட்ரோஜெட் விமானம் 9268
பேங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 சம்பந்தப்பட்ட மெட்ரோஜெட் ஏர்பஸ் ரக பயணிகள் விமானம் அ-321 பறந்து கொண்டிருந்த போதுஎடுக்கப்பட்ட ஒளிப்படம்.
விபத்து சுருக்கம்
நாள்அக்டோபர் 31, 2015 (2015-10-31)
இடம்தெற்கு சினாய் தீபகற்ப பகுதி;எகிப்து
30°09′02″N 34°10′41″E / 30.1506°N 34.178°E / 30.1506; 34.178
பயணிகள்217[1]
ஊழியர்7
உயிரிழப்புகள்(மொத்தம்)224
தப்பியவர்கள்0 [2]
வானூர்தி வகைஏர்பஸ் A321 -231
இயக்கம்மெட்ரோஜெட் (கொகலிமாவியா) வான்வழி
வானூர்தி பதிவுEI-ETJ
பறப்பு புறப்பாடுசரம் அல்-சேக் வானூர்தி நிலையம் , சினாய், எகிப்து
சேருமிடம்புல்கோவோவானூர்தி நிலையம் , சென் பீட்டர்ஸ்பேர்க்,ரஷ்யா

மெட்ரோஜெட் விமானம் 9268 (Metrojet Flight 9268) என்பது எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்க் நோக்கி சென்றுகொண்டிருக்கையில், அக்டோபர் 31, 2015 அன்று விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொறுங்கிய ரஷ்யா நாட்டு வானூர்தி ஆகும். விமானத்தில் பயணம் செய்த 24 குழந்தைகள் உள்ளிட்ட 217 பயணிகளும், 7 பணியாளர்களும் உயிரிழந்தனர்.

விமானம் வீழ்ந்து நொறுங்கிய விவரம்[தொகு]

வானூர்தி பறந்துசென்ற பாதை

சார்ம் எல்-சேக் வானூர்தி நிலையத்திலிருந்து உருசியாவின் புல்கொவொ வானூர்தி நிலையத்திற்கு, 06:51 மணியளவில் 9268 எனும் எண்ணைக் கொண்ட வானூர்தி கிளம்பியது. கிளம்பிய 23 நிமிடங்கள் கழித்து, சைப்ரசு விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பினை வானூர்தி இழந்தது.[3]

பயணிகள் மற்றும் பணிக்குழுவினர்[தொகு]

வானூர்தி விவரங்கள்[தொகு]

ஏர்பஸ் A321 - 231 வகையைச் சேர்ந்த இந்த வானூர்தி, 18 ஆண்டுகள் வயதுடையது[4]. IAE V2533 எனும் பெயருடைய எஞ்சின்கள் இரண்டின் மூலமாக இயங்கிய இந்த வானூர்தி, 220 பயணிகளை ஏற்றிச் செல்லத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். 56,000 பறப்பு மணித்தியாலங்களைக் கொண்டிருந்த இந்த வானூர்தி, மொத்தமாக 21,000 முறை பறந்திருந்தது[5][6].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Russian passenger plane crashes in Egypt's Sinai, country's Prime Minister says". cnn. 31 October 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "No survivor on Russian passenger plane crashes in Egypt's Sinai, said country's Prime Minister says". 31 October 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Russian airliner crashes in central Sinai – Egyptian PM". BBC News. 31 October 2015. 31 October 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Aircraft and Fleet Lists – ch-aviation.com". ch-aviation. 31 October 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. "EI-ETJ Metrojet Airbus A321-231 – cn 663". planespotters.net. 2 ஏப்ரல் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 31 October 2015 அன்று பார்க்கப்பட்டது.
  6. Lin Noueihed (31 October 2015). "Flight 7K9268 plane crash: Russian passenger jet with 224 people on board 'has crashed over Egypt'". Mirror.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்ரோஜெட்_விமானம்_9268&oldid=3568441" இருந்து மீள்விக்கப்பட்டது