கு. ஞானசம்பந்தன்
கு. ஞானசம்பந்தன் | |
---|---|
பிறப்பு | குருநாதன் ஞானசம்பந்தன் 19 அக்டோபர் 1956 சோழவந்தான், மதுரை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. |
இருப்பிடம் | மதுரை |
தேசியம் | இந்தியர் |
கல்வி | தமிழில் முனைவர் பட்டம் |
பணி | தமிழ்ப் பேராசிரியர் |
அறியப்படுவது | 1. பட்டிமன்ற நடுவர், 2. நகைச்சுவைப் பேச்சாளர் 3. எழுத்தாளர் |
சமயம் | இந்து |
பிள்ளைகள் | 2 |
கு. ஞானசம்பந்தன் (G. Gnanasambandam) என்பவர் தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர் ஆவார்.[1] இருப்பினும் இவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டிமன்ற நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார். மதுரை மாவட்டம் சோழவந்தான்[2][3] எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது மதுரை மாநகரில் வசித்து வருகிறார்.[4] மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி தற்போது இக்கல்லூரியின் தகைசால் பேராசிரியாக உள்ளார். நகைச்சுவையில் ஈடுபாடுடைய இவர், 25 ஆண்டுகாலமாக இயங்கிவருகின்ற மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவராகவும் உள்ளார். மேலும் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகர்கோவில், திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை உட்பட 15 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களை நிறுவி இதன் நிறுவனராக இருந்து வருகிறார்.
தமிழ்த்துறை வழிகாட்டுநர்
[தொகு]- தமிழ்த்துறைப் பேராசிரியராக இருக்கும் இவரது வழிகாட்டலில் இதுவரை 35 மாணவர்கள் “இளநிலை ஆய்வாளர்” பட்டங்களையும், 12 மாணவர்கள் "முனைவர்" பட்டங்களையும் பெற்றுள்ளனர்.
எழுதியுள்ள நூல்கள்
[தொகு]பல்வேறு அச்சிதழ்களில் பல முக்கியக் கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் கீழ்க்காணும் நூல்களையும் எழுதியிருக்கிறார்.
- வாங்க சிரிக்கலாம்.
- பரபரப்பு - சிரிப்பு.
- பேசும் கலை (பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் இந்நூல் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது).
- உலகம் உங்கள் கையில்.
- இன்றைய சிந்தனை.
- வாழ்வியல் நகைச்சுவை.
- சினிமாவுக்குப் போகலாம் வாங்க!
- கல்லூரி அதிசயங்கள்.
- இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும்.
- இலக்கியச் சாரல்
- சந்தித்ததும் சிந்தித்ததும்
- மேடைப் பயணங்கள்
- ஜெயிக்கப்போவது நீதான்
- சிரித்துக்கொண்டே ஜெயிப்போம்
இவற்றோடு, இவர் எழுதிய "கலகல கடைசிப் பக்கம்", "கேள்வி - பதில்" எனும் இரண்டு புத்தகங்களும் விரைவில் வெளிவரவிருக்கிறது.
ஒலிநாடாக்கள் மற்றும் குறுந்தகடுகள்
[தொகு]இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கள் ஒலிநாடாக்களாகவும் குறுந்தகடுகளாகவும் கீழ்காணும் தலைப்புகளில் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
- வாங்க சிரிக்கலாம்
- சிரிக்கலாம் வாங்க
- இலக்கியமும் நகைச்சுவையும்
- சிரிப்பும் சிந்தனையும்
- வெற்றி நம் பக்கம்
தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்வுகள்
[தொகு]- பல்வேறு தமிழ்த் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் பல பங்களிப்புகளைச் செய்துவருகிறார். குறிப்பாக தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பட்டிமன்ற நடுவராகப் பங்கேற்று சிறப்பித்துவருபவர்.
- ஜெயா தொலைக்காட்சியில் தினமும் காலை மலர் நிகழ்வில் “இன்றைய சிந்தனை” எனும் தலைப்பில் ஜூன் 12, 2006 முதல் தொடர்ந்து சிறப்புத் தகவல்களை வழங்கி வருகிறார்.
தமிழ்ச் சொற்பொழிவுகள்
[தொகு]தமிழ்நாடு தவிர தில்லி, மும்பை, கல்கத்தா, திருவனந்தபுரம், ஹைதராபாத், அந்தமான் என இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் உள்ள தமிழ்ச்சங்கங்களில் சிறப்புச்சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.
மேலும் சிறப்புச் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதற்காக சிங்கப்பூர், மலேசியாத் தலைநகர் கோலாலம்பூர், அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் அரபு நாடுகளில் சவூதி அரேபியா, குவைத், ஜெத்தா என அயல்நாட்டுத் தமிழ்ச் சங்கங்களுக்குச் சென்று வந்துள்ளார்.
நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் |
---|---|---|
2004 | விருமாண்டி | ஜல்லிக்கட்டு அறிவிப்பாளர் |
2006 | இதயத் திருடன் | மகேசின் அப்பா |
2006 | கை வந்த கலை | |
2008 | ஆயுதம் செய்வோம் | நீதிபதி |
2009 | சிவா மனசுல சக்தி | சக்தியின் அப்பா |
2010 | புகைப்படம் | கல்லூரி முதல்வர் |
2011 | போராளி | வீட்டு முதலாளி |
2013 | குட்டிப் புலி | தையல்காரர் |
2013 | மதில் மேல் பூனை | திவ்யாவின் அப்பா |
2014 | பிரம்மன் | சிவாவின் அப்பா |
2014 | நிமிர்ந்து நில் | அமைச்சர் |
2014 | கேரள நாட்டிளம் பெண்களுடனே | தமிழ் மணி |
2015 | கொம்பன் | நீதிபதி |
2015 | உத்தம வில்லன் | காக்காப்பு சுந்தர்r |
2015 | பசங்க 2 | தலைமையாசிரியர் |
2016 | ரஜினி முருகன் | மல்லிகார்ஜன் |
2016 | மருது | வட்டாச்சியர் |
2016 | தொடரி | சதாசிவம் |
2016 | பறந்து செல்ல வா | சம்பத்தின் அப்பா |
2017 | கனவு வாரியம் | ஞானசம்பந்தன் |
2017 | ஆரம்பமே அட்டகாசம் | |
2017 | தொண்டன் | பாண்டியனார் |
2017 | கடைசி பெஞ்சு கார்த்தி | நீதிபதி, நித்தியாவின் அப்பா |
2017 | கொடிவீரன் | கல்யாண தரகர் |
2018 | விதி மதி உல்டா | ஆதித்தியாவின் அப்பா |
2018 | ஆருத்ரா | சிவாவின் மாமா |
2018 | சண்டக்கோழி 2 | செம்பருத்தியின் அப்பா |
2019 | பிகில் | ஆசிரிவாதம் |
2020 | நாடோடிகள் 2 | மாரியாடும் பெருமால் |
2020 | நுங்கம்பாக்கம் | வழக்கறிஞர் |
2020 | சூரரைப் போற்று | சின்னசாமி |
2022 | நாய் சேகர் | சேகர் அப்பா |
2022 | விருமன் | மருத்துவர் |
TBA | செம்பி | TBA[5] |
விருது மற்றும் சிறப்புகள்
[தொகு]- தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வழங்கிய 2005 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது.
- 1995ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி வழங்கிய “தமிழ் இயக்கத்தின் சிற்றரசு” பட்டம்.
- 2014 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வழங்கிய மகாகவி பாரதியார் விருது.[6]
- பல்வேறு தமிழ்ச்சங்கங்கள் வழங்கிய “உவகைப்புலவர்”, “தமிழறிஞர்”, “நகைச்சுவை அரசர்”, “நகைச்சுவைத்தென்றல்”, “இளைய கலைவாணர்”, “சித்த பத்மஸ்ரீ” போன்ற பட்டங்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kamal never gives into mediocre stuff" The Hindu: National — Tamilnadu (31 August 2009). Retrieved 13 December 2013
- ↑ விஐபி பூஜையறை : பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் பரணிடப்பட்டது 2022-09-29 at the வந்தவழி இயந்திரம் தினகரன் – ஆன்மிகம்: விஐபி பூஜையறை (11 December 2013). Retrieved 13 December 2013
- ↑ தமிழின் ஆங்கில மயம் தேசம் (30 September 2010). Retrieved 13 December 2013
- ↑ (AQAR) 2010–11 – Thiagarajar College பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் Annual Quality Assurance Report (December 2011). Retrieved 13 December 2013
- ↑ SEMBI – OFFICIAL TRAILER | PRABUSOLOMON | ASHWIN KUMAR | KOVAI SARALA | THAMBI RAMAIAH | (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2022-07-09
- ↑ Jaya Distributes Tamil Nadu Government Awards பரணிடப்பட்டது 3 பெப்பிரவரி 2014 at the வந்தவழி இயந்திரம் Outlook India — National (26 January 2014). Retrieved 1 February 2014