நாய் சேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாய் சேகர்
இயக்கம்கிஷோர் ராஜ்குமார்
தயாரிப்புகல்பாத்தி எஸ். அகோரம்
கல்பாத்தி எஸ். கணேஷ்
கல்பாத்தி எஸ். சுரேஷ்
கதைகிஷோர் ராஜ்குமார் பிரவீன் பாலு
இசைபாடல்கள்:
அஜீஸ்
அனிருத் ரவிச்சந்திரன்
ஒலிப்பதிவு:
எம்.எஸ். யோன்ஸ் ருபெர்ட்
நடிப்புசதீஸ்
பவித்ரா லட்சுமி
ஒளிப்பதிவுபிரவீன் பாலு
படத்தொகுப்புஇராம் பாண்டியன்
கலையகம்ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்
வெளியீடுசனவரி 13, 2022 (2022-01-13)
ஓட்டம்131 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய் 1.3 கோடி

நாய் சேகர் ( Naai Sekar ) என்பது 2021ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான அறிவியல் புனைகதை நகைச்சுவைத் திரைப்படமாகும். இதை அறிமுக இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார்.[1] ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பதாகையின் கீழ் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்துள்ளார். இப்படத்தில் சதீஸ், பவித்ரா லட்சுமி (அறிமுகம்)[2][3], ஜார்ஜ் மரியன், சங்கர் கணேஷ், லிவிங்ஸ்டன், இளவரசு, சிறீமன் உள்ளிட்ட துணை நடிகர்களுடன் நடித்துள்ளனர். ஒரு லாப்ரடர் ரெட்ரீவர் நாயும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது.[4] படம் நாயுடன் தனது ஆன்மாவை மாற்றிக்கொள்ளும் ஒரு மனிதனின் கதையைச் சுற்றி வருகிறது. ஒலிப்பதிவில் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்த ஒரு பாடலுடன் மூன்று பாடல்கள் இடம்பெற்றன.[5] இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.[6][7]

தலைப்பு சர்ச்சை[தொகு]

லைக்கா தயாரிப்பகம் தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்கும் படத் தலைப்பை 'நாய் சேகர்' என்று திட்டமிட்டனர். 2006இல் வெளியான தலைநகரம் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரமான 'நாய் சேகர்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.[8] ஆனால் தலைப்பு ஏற்கனவே ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது. பல விவாதங்களுக்குப் பிறகு, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் படத்திற்கு 'நாய் சேகர்' என்றே தலைப்பிட்டு வெளியிட்டது.[9] எனவே வடிவேலுவின் படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தலைப்பை நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என மாற்றம் செய்தனர்.[10][11]

வெளியீடு[தொகு]

படத்தின் முன்னோட்டம் 1 சனவரி 2022 அன்று வெளியானது.[12] படத்தை தைப்பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சனவரி 13, 2022 அன்று வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டனர்.[13] [14]

திரையரங்குகளுக்குப் பிந்தைய தொலைக்காட்சி செயற்கைக்கோள் மற்றும் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை முறையே சன் தொலைக்காட்சி மற்றும் நெற்ஃபிளிக்சு வாங்கியுள்ளது.

நடிகர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. "Sathish's debut film as hero titled Naai Sekar". சினிமா எக்ஸ்பிரஸ். பார்க்கப்பட்ட நாள் 16 September 2021.
 2. "Pavithra Lakshmi wraps up shooting for Naai Sekar". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
 3. "Sathish & Pavitra Lakshmi's film titled Naai Sekar". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 16 September 2021.
 4. "Naai Sekar Teaser: Sathish swaps souls with a dog!". சினிமா எக்ஸ்பிரஸ். பார்க்கப்பட்ட நாள் 1 January 2022.
 5. "Sivakarthikeyan pens song for actor Sathish's 'Naai Sekar'". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 1 December 2021.
 6. "Fresh trouble for Vadivelu's 'Naai Sekar'!". சிஃபி. பார்க்கப்பட்ட நாள் 7 September 2021.
 7. "Sathish's next titled Naai Sekar, a big loss for Vadivelu!". சிஃபி. பார்க்கப்பட்ட நாள் 17 September 2021.
 8. "Vagaipuyal to make his comeback with his iconic charecter 'Naai Sekar' in the film 'Thalai Nagaram'". Fanatic Buff.
 9. "Shiva dubs for a dog in Sathish's Naai Sekar". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 2 January 2022.
 10. "The title of Vadivelu and Suraj's 'Naai Sekar' goes for an alteration". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 16 September 2021.
 11. "Vadivelu's Naai Sekar Returns begins; cast revealed". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 13 December 2021.
 12. "Sathish & Pavithra Lakshmi's Naai Sekar teaser revealed". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 1 January 2022.
 13. "பொங்கல் ரேஸில் 'வலிமை'க்கு போட்டியாக களமிறங்கும் 'பிகில்' பட தயாரிப்பாளரின் படம்". Asianet News. பார்க்கப்பட்ட நாள் 2 January 2022.
 14. "Sathish's 'Naai Sekar' in plans to join the Pongal race". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 2 January 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாய்_சேகர்&oldid=3949498" இலிருந்து மீள்விக்கப்பட்டது