உள்ளடக்கத்துக்குச் செல்

எசு மோங்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசு மோங்கே
சகதாயி கானரசின் கான்
ஆட்சிக்காலம்1246–1252
முன்னையவர்காரா குலாகு
பின்னையவர்காரா குலாகு
உயரதிகாரிபகால்தீன் மர்கினானி
பிறப்புதெரியவில்லை
இறப்பு1252
துணைவர்நைஷி கதுன்
மரபுபோர்சிசின்
தந்தைசகதாயி கான்
தாய்எசுலுன் கதுன்

எசு மோங்கே என்பவர் சகதாயி கானரசின் கானாக 1246 அல்லது 1247 முதல் 1252 வரைப் பதவி வகித்தவர் ஆவார்.

வாழ்க்கை

[தொகு]

இவர் சகதாயி கான் மற்றும் எசுலுன் கதுனின் ஐந்தாவது மகன் ஆவார். ககான் குயுக் கானுடன் நல்ல நட்பில் இருந்த காரணத்தால் காரா குலாகுவைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, 1246ஆம் ஆண்டு அல்லது 1246ஆம் ஆண்டு வாக்கில், இவர் சகதாயி கானரசின் கானாக நியமிக்கப்பட்டார். எனினும், அடுத்த ககானாகிய மோங்கே கான் ஒக்தாயி கானின் குடும்ப ஆதரவாளர்களை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளைத் தொடங்கினார். அதில் சில சகதாயி இன உறவினர்களும் அடங்குவர். எசு மோங்கே பதவியில் இருந்து நீக்கப்பட்டார். காரா குலாகுவின் மனைவி ஒர்கானாவால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். பிறகு காரா குலாகு தனது முந்தைய பதவியான கான் பதவியில் அமர்த்தப்பட்டார்.

இவருக்கு நைஷி என்ற ஒரு மனைவி இருந்தார். இவருக்குக் குழந்தைகள் இல்லை. அடிக்கடிக் குடிபோதையிலேயே இவர் இருந்ததாக இவரைப் பற்றிக் குறிப்புகள் உள்ளன. எனவே இவரது மனைவி மற்றும் இவரது உயர் அதிகாரி பகால்தீன் மர்கினானி ஆகியோர் இவரது பெயரில் ஆட்சி செய்தனர்.[1]

உசாத்துணை

[தொகு]
  1. Boyle, John Andrew (1971). The Successors of Genghis Khan. Columbia University Press. p. 143.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு_மோங்கே&oldid=3463103" இலிருந்து மீள்விக்கப்பட்டது