உள்ளடக்கத்துக்குச் செல்

பிஜப்பூர், சத்தீஸ்கர்

ஆள்கூறுகள்: 18°47′30″N 80°49′0″E / 18.79167°N 80.81667°E / 18.79167; 80.81667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிஜப்பூர்
[[[பேரூராட்சி]]
பிஜப்பூர் is located in சத்தீசுகர்
பிஜப்பூர்
பிஜப்பூர்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தித் தென்மேற்கில் பிஜப்பூர் நகரத்தின் அமைவிடம்
பிஜப்பூர் is located in இந்தியா
பிஜப்பூர்
பிஜப்பூர்
பிஜப்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 18°47′30″N 80°49′0″E / 18.79167°N 80.81667°E / 18.79167; 80.81667
நாடு இந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
மாவட்டம்பிஜப்பூர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்16,129
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி, சத்திசுகரி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
494444
வாகனப் பதிவுCG

பிஜப்பூர் (Bijapur), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த பிஜப்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான ராய்ப்பூருக்கு தெற்கே 430 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரத்தின் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 16, பிஜப்பூர் நகரத்துடன், ஜெகதல்பூர் மற்றும் நிஜாமாபாத் நகரங்களுடன் இணைக்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 15 வார்டுகளும், 3,521 வீடுகளும் கொண்ட பிஜப்பூர் பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 16,129 ஆகும். அதில் ஆண்கள் 8,786 மற்றும் 7,343 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 836 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 79.8% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,198 மற்றும் 7,810 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 87.13%, இசுலாமியர் 3.16%, பௌத்தர்கள் 1.73%, கிறித்தவர்கள் 4.67%, மற்றும் பிறர் 3.31% ஆகவுள்ளனர்.[1]இந்தி மொழி, சத்திசுகரி மொழிகள் இந்நகரத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஜப்பூர்,_சத்தீஸ்கர்&oldid=3514624" இலிருந்து மீள்விக்கப்பட்டது