பத்து மலை முருகன் சிலை
Appearance
முருகன் சிலை | |
ஆள்கூறுகள் | 3°14′15″N 101°41′02″E / 3.2374°N 101.6839°E |
---|---|
இடம் | பத்து மலை முருகப் பெருமாள் கோவில், பத்து மலை, சிலாங்கூர் மலேசியா |
வகை | சிலை |
கட்டுமானப் பொருள் | 350 டன் எஃகு கம்பிகள், 1,550 கன மீட்டர் கான்கிரீட் மற்றும் 300 லிட்டர் தங்க வண்ணப்பூச்சு |
உயரம் | 42.7 மீட்டர்கள் (140 அடி) |
துவங்கிய நாள் | 2004 |
முடிவுற்ற நாள் | 2006 |
திறக்கப்பட்ட நாள் | 29 சனவரி 2006தைப்பூசம் அன்று |
அர்ப்பணிப்பு | மலேசியத் தமிழர்கள் மற்றும் மலேசிய இந்துக்கள் |
முருகன் சிலை ( மலேசிய மொழி :Tugu Dewa Murugga),[1] மலேசியாவில் உள்ள ஓர் இந்து தெய்வத்தின் மிக உயரமான சிலை ஆகும்.[2][3] 42.7 மீட்டர்கள் (140 அடி) உயரம் கொண்ட இச்சிலை மலேசியாவின் மிக உயரமான சிலை ஆகும்.
அந்தச் சிலை மலேசியத் தமிழர்களால் கட்டப்பட்டது. இது கட்டுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆனது. சனவரி 2006-இல் தைப்பூச திருவிழாவின் போது திறக்கப்பட்டது. கோயிலின் நிர்வாக அதிகாரம் தமிழ் வம்சாவளியினரிடம் உள்ளது.
பொது
[தொகு]ஒவ்வோர் ஆண்டும், தமிழ் நாட்காட்டியின்படி தைப்பூசத்தின் புனித நாளில், தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு சென்று ஆசி பெறுவார்கள். இது பத்து குகைகளின் அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ முருகன் பெருமாள் கோவிலில் அமைந்துள்ளது. [4]
கட்டுமானம்
[தொகு]- இந்த சிலையை உருவாக்க 2.5 மலேசிய ரிங்கிட் செலவிடப்பட்டது
- 350 டன் ஸ்டீல் இரும்புத் தூண்கள், 1,550 கன மீட்டர் கான்கிரீட் மற்றும் 300 லிட்டர் தங்க வண்ணக்கலவை பயன்படுத்தப்பட்டது
- இந்தியாவிலிருந்து 15 சிற்பிகள் சிற்ப வேலைகளில் ஈடுபட்டனர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Batu Caves Sri Subramaniar Swamy Devasthanam". Murugan.org. பார்க்கப்பட்ட நாள் 15 February 2012.
- ↑ "Lord Murugan statue in Malaysia". Etawau.com. Archived from the original on 30 December 2011. பார்க்கப்பட்ட நாள் 15 February 2012.
- ↑ "Thanneermalai Murugan: Second Tallest Lord Murugan statue in the world". Murugar.com. 1 February 2009. Archived from the original on 24 February 2012. பார்க்கப்பட்ட நாள் 15 February 2012.
- ↑ "BATU CAVES Kuala Lumpur". Etawau.com. Archived from the original on 24 February 2012. பார்க்கப்பட்ட நாள் 15 February 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Murugan statue, Batu Caves தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.