டி. என். கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
FTII, புனேயில் சனவரி 19, 2010 அன்று கிருஷ்ணன் வயலின் வாசிக்கிறார்

டி. என். கிருஷ்ணன் என்பவர் (பி: அக்டோபர் 6, 1928 - இ: அக்டோபர் 2, 2020) தென்னிந்தியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

பெற்றோர்: ஏ. நாராயண ஐயர், அம்மிணி அம்மாள். கேரள மாநிலம் திருப்புனித்துறையில் பிறந்த இவர், தனது தந்தையிடம் இசையைக் கற்கத் தொடங்கினார். பின்னர் ஆலப்புழா கே. பார்த்தசாரதியிடம் (அரியக்குடி இராமானுஜ ஐயங்காரின் மாணவர்) கற்றார். தொடர்ந்து அரியக்குடி இராமானுஜ ஐயங்காரின் நேரடி மாணவராக இசை பயின்றார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

எட்டாவது வயதில் தனது முதல் மேடைக் கச்சேரியை செய்தார். இளம் வயதிலேயே புகழ்வாய்ந்த பாடகர்களான அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், முசிரி சுப்பிரமணிய ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள், செம்பை வைத்தியநாத பாகவதர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார்.

சென்னை இசைக் கல்லூரியில் இசைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் ‘இசை மற்றும் கலைகளுக்கான’ பள்ளியின் முதல்வராக பணியாற்றினார்.

2006ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமியின் உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.[1]

உலகின் பல நாடுகளுக்கும் இசைப் பயணம் செய்துள்ளார்.

இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்:

  • விஜி கிருஷ்ணன் (மகள்)
  • ஸ்ரீராம் கிருஷ்ணன் (மகன்)
  • சாருமதி ரகுராமன்

விருதுகள்[தொகு]

இறப்பு[தொகு]

டி. என். கிருஷ்ணன் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் திகதி திங்கட்கிழமை உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு இந்தியப் பிரதமர் மோதி இரங்கல் தெரிவித்திருந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "SNA: List of Akademi Fellows". Sangeet Natak Akademi. 2009-09-24 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018. Archived from the original on 2018-03-16. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018. 
  3. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. 2012-02-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 டிசம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. "இசைக்கலைஞர் டி. என். கிருஷ்ணன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்". தினமணி. 3 நவம்பர் 2020. 2020-11-03 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 3 நவம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._என்._கிருஷ்ணன்&oldid=3659184" இருந்து மீள்விக்கப்பட்டது