கான் அப்துல் ஜபார் கான்
அப்துல் ஜபார் கான் | |
---|---|
மேற்கு பாக்கித்தானின் முதலாவது முதலமைச்சர் | |
பதவியில் 14 அக்டோபர் 1955 – 27 ஆகத்து 1957 | |
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் |
குடியரசுத் தலைவர் | இஸ்கந்தர் மிஸ்ரா |
தலைமை ஆளுநர் | இஸ்கந்தர் மிஸ்ரா |
ஆளுநர் | முஷ்டாக் அகமது குர்மானி |
முன்னையவர் | பதவி நிறுவப்பட்டது |
பின்னவர் | சர்தார் அப்துர் ரசீத் கான் |
பதவியில் 7 செப்டம்பர் 1937 – 10 நவம்பர் 1939 | |
ஆளுநர் | ஜியார்ஜ் கன்னிங்காம் |
முன்னையவர் | சாஹிப்சாதா அப்துல் கயூம் |
பின்னவர் | ஆளுநர் ஆட்சி |
பதவியில் 16 மார்ச் 1945 – 22 ஆகத்து 1947 | |
ஆளுநர் | ஜார்ஜ் கன்னிங்ஹாம் ஓலாஃப் கரோ |
முன்னையவர் | சர்தார் ஒளரங்கசீப் கான் |
பின்னவர் | அப்துல் கையூம் கான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1883[1] உட்மன்சாஇ, சர்சதா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போதைய சர்சதா மாவட்டம், கைபர் பக்துன்வா மாகாணம், பாக்கித்தான்) |
இறப்பு | 9 மே 1958 (வயது 75)[1] லாகூர், பஞ்சாப், பாக்கித்தான் |
கான் அப்துல் ஜாபர் கான் ( Khan Abdul Jabbar Khan) (பிறப்பு 1883 - 9 மே 1958, லாகூர் ), பிரபலமாக டாக்டர் கான் சாஹிப் என அழைக்கப்படும் இவர் இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியாகவும், பாக்கித்தான் அரசியல்வாதியாகவும் இருந்தார். [1] இவர் பஷ்தூன் சுதந்திர ஆர்வலர் கான் அப்துல் கப்பார் கானின் மூத்த சகோதரர் ஆவார். இருவரும் இந்தியா பிரிக்கப்படுவதை எதிர்த்தனர், ஒன்றினைந்த நாட்டை ஆதரித்தனர். [2]
வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் முதலமைச்சரான இவரும், இவரது சகோதரரும், ஒரு முக்கிய பஷ்தூன் அகிம்சை எதிர்ப்பு இயக்கமான குடாய் கிட்மத்கார்களும் 1947 சூலையில் வடமேற்கு எல்லைப்புற மாகாண வாக்கெடுப்பை புறக்கணித்தனர். வாக்கெடுப்பில் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள் சுதந்திரமாக அல்லது ஆப்கானிஸ்தானில் சேருவதற்கான விருப்பங்கள் இல்லை என்று குறிப்பிடபட்டிருந்தது. [3]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர் பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் சர்சாதாவின் உட்மன்சாய் என்ற கிராமத்தில் பிறந்தார் (இப்போது பாக்கித்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணம் ). இவரது தந்தை பஹ்ராம் கான் உள்ளூர் நில உரிமையாளராவார். இவர் தனது சகோதரர் பச்சா கானைவிட (கான் அப்துல் கபார் கான்) எட்டு வயது மூத்தவர். [1]
பெசாவரில் உள்ள எட்வர்ட்ஸ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் தனது மெட்ரிகுலேசன் படிப்பிற்குப் பிறகு,இவர் மும்பையின் கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் படித்தார். பின்னர் லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் தனது பயிற்சியை முடித்தார். முதல் உலகப் போரின் போது, இவர் பிரான்சில் பணியாற்றினார். இவர் பிரான்சில் தங்கியிருந்தபோது, ஒரு இசுக்கொட்லாந்தைச் சேர்ந்த மேரியை சந்தித்தார். இருவரும் காதலித்து, பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும் இவரது தம்பி பச்சா கான் இந்த திருமணத்திற்கு எதிராக இருந்தார். போருக்குப் பிறகு, இவர் இந்திய மருத்துவ சேவையில் சேர்ந்தார். மேலும் வழிகாட்டிகள் படைப்பிரிவுடன் மர்தானில் நியமிக்கப்பட்டார். பிரித்தானிய இந்திய இராணுவம் தனது சக பஷ்தூன் பழங்குடியினருக்கு எதிராக (1919-20) நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்த வசீரிஸ்தானில் பதவி ஏற்க மறுத்து பின்னர், 1921 இல் இவர் தனது பதவியை விட்டு வெளியேறினார். [1]
இந்திய சுதந்திர இயக்கத்திற்கு பங்களிப்பு
[தொகு]1935 ஆம் ஆண்டில், இவர் ஜங்கிள் கெல் கோஹாட்டின் பீர் ஷாஹென்ஷாவுடன் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் பிரதிநிதிகளாக புதுதில்லியில் உள்ள மத்திய சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் .
இவரது சகோதரர் கான் அப்துல் கப்பார் கான், குடாய் கிட்மத்கார் ஆகியோருடன் சேர்ந்து, இவர் இந்தியாவைப் பிரிப்பதை கடுமையாக எதிர்த்தார். ஐக்கியப்பட்ட நாட்டிற்கு ஆதரவாக இருந்தார். [4]
மட்டுப்படுத்தப்பட்ட சுய-அரசு மற்றும் 1937 இந்திய மாகாணத் தேர்தல்களை அறிவித்ததன் மூலம், இவர் தனது கட்சியை ஒரு விரிவான வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இந்திய தேசிய காங்கிரசின் இணைப்பான எல்லைப்புற தேசிய காங்கிரசு, மாகாண சபையில் மிகப்பெரிய மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது.
1940 களில், காலனித்துவ இந்தியாவின் ஹசாரா மாவட்டத்தில் ஒரு சீக்கிய குடும்பம் கொல்லப்பட்டது. அவர்களது மகள் பசாந்தி ஒரு முஸ்லீம் ஆணுடன் திருமணம் செய்து கொண்டார். பசந்தி தனது சீக்கிய உறவினர்களுக்கு அனுப்பும்படி கேட்டார், கான் அப்துல் ஜபர்கான் இதற்கு ஒப்புக்கொண்டார். ஆயினும், அகில இந்திய முஸ்லீம் லீக், கான் அப்துல் ஜபார் கானின் முடிவுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தது, மேலும் அந்த பெண் இஸ்லாமியத்திற்கு திரும்புவதை எல்லைப்புற மாகாணத்தில் அதன் ஒத்துழையாமை இயக்கத்தின் பிரதான கோரிக்கையாக மாற்றியது. [5]
பாக்கித்தானில் அரசியல் 1947 - 1954
[தொகு]1947 இல் பாக்கித்தான் உருவாக்கப்பட்ட நேரத்தில், பிரித்தானிய இந்தியாவில் நியமிக்கப்பட்ட மாகாணத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தார். [6] பின்னர் இவர் அப்துல் கயூம் கான் காஷ்மீரியின் அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டார். அப்துல் கயூம் கான் காஷ்மீரி மத்திய அரசுக்கு நியமிக்கப்பட்டதும், அந்த நேரத்தில் வடமேற்கு எல்லைப்புற மாகாண முதலமைச்சர் சர்தார் பகதூர் கானின் தனிப்பட்ட முயற்சியின் பின்னர், இவர் தனது சகோதரர் மற்றும் பல ஆர்வலர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மீண்டும் அரசாங்கத்தில்
[தொகு]முகம்மது அலி போக்ராவின் மத்திய அமைச்சரவையில் 1954 இல் தகவல் தொடர்பு அமைச்சராக சேர்ந்தார். அரசாங்கத்தில் சேர இந்த முடிவு இவரது சகோதரருடன் பிளவுபடுவதற்கு வழிவகுத்தது. [7]
அக்டோபர் 1955 இல், ஓரலகுக் கொள்கைத் திட்டத்தின் கீழ் மாகாணங்களும், சுதேச மாநிலங்களும் ஒருங்கிணைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கு பாக்கித்தானின் முதல் முதல்வரானார் . [1] கூட்டு மற்றும் தனி வாக்காளர்கள் பிரச்சினை தொடர்பாக ஆளும் முசுலிம் லீக்குடனான கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, இவர் அப்போதைய பாக்கித்தான் தலைமை ஆளுநர் இஸ்கந்தர் மிர்சாவின் உதவியுடன் குடியரசுக் கட்சியை உருவாக்கினார். [8]
மாகாண வரவுசெலவுத் திட்டம் சட்டமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட பின்னர் இவர் மார்ச் 1957 இல் பதவியைத் துறந்தார். சூன் மாதம், பலூசிஸ்தானின் முன்னாள் தலைநகரான குவெட்டா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாக்கித்தான் தேசிய சட்டமன்றத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
படுகொலை
[தொகு]கக்சார்களின் தலைவரான அல்லாமா மஷ்ராகியின் உத்தரவின் பேரில் சில ஆதாரங்களின்படி, 1958 மே 9 அன்று காலை 8:30 மணியளவில் இவர் அட்டா முகமதுவால் படுகொலை செய்யப்பட்டார் . [9]
“அல்லாமா மஷ்ரிகி சுருக்கமாக தூக்கு மேடை: இந்திய துணைக் கண்டத்தின் சுதந்திரத்தை வழிநடத்திய மனிதனுக்கு எதிரான மன்னிக்க முடியாத குற்றத்தின் நீதிமன்ற நடவடிக்கைகள்” என்ற புத்தகத்தில், அறிஞரும் வரலாற்றாசிரியருமான நாசிம் யூசப், மஷ்ரிகியின் பேரன், நீதிமன்ற நடவடிக்கைகள். [10]
மரபு
[தொகு]இவரது பேத்தி, பிருந்தா துபே, இந்திய வெளியுறவுச் சேவையின் (1964 தொகுதி) உறுப்பினரை மணந்து இந்தியாவில் வசித்து வருகிறார். [11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Profile of Khan Abdul Jabbar Khan, Updated 4 January 2008, Retrieved 27 May 2017
- ↑ Hamdani, Yasser Latif (21 December 2013). "Mr Jinnah's Muslim opponents" (in English). Pakistan Today. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Was Jinnah democratic? — II". Daily Times. December 25, 2011. பார்க்கப்பட்ட நாள் February 24, 2019.
- ↑ Hamdani, Yasser Latif (21 December 2013). "Mr Jinnah's Muslim opponents" (in English). Pakistan Today. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Ashraf, Ajaz (20 January 2018). "On Frontier Gandhi's death anniversary, a reminder of how the Indian subcontinent has lost its way" (in English). Scroll.in.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Khan Abdul Jabbar Khan on Dawn newspaper website, Published 20 October 2002, Retrieved 27 May 2017
- ↑ Victoria Schofield Afghan (2004)Frontier: Feuding and Fighting in Central Asia. Tauris Parke Paperbacks,
- ↑ Dr Khan Sahib (Khan Abdul Jabbar Khan) on Encyclopedia Britannica website, Retrieved 27 May 2017
- ↑ Dr Ali Muhammad Khan, 'Allama Mashriqi, Khaksar Tehreek aur uss ki Qatilana Siyasat' (Urdu: Allama Mashriqi, the Khaksars and the Politics of Assassination') pub Lahore: Rang Mahal Publishers, 1978, pp 121-123
- ↑ https://www.amazon.com/Allama-Mashriqi-Narrowly-Escapes-Gallows-ebook/dp/B00P6OP0I2/ref=asap_bc?ie=UTF8
- ↑ Sharma, Vinod (1 June 2016). "Ministry goofs up on Ghaffar Khan's 'kin'" (in English). ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 11 June 2020.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
குறிப்புகள்
[தொகு]- Mahmud, Makhdumzada Syed Hassan (1958). A Nation is Born