ஆசியக் கிண்ணம் 2023

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசியக் கிண்ணம் 2023
Asia Cup 2023
நாட்கள்30 ஆகத்து – 17 செப்டம்பர் 2023
நிர்வாகி(கள்)ஆசியத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்தொடர்-சுழல், வெளியேற்றம்
நடத்துனர்(கள்)பாகித்தான், இலங்கை
வாகையாளர் இந்தியா (8-ஆம் தடவை)
இரண்டாமவர் இலங்கை
மொத்த பங்கேற்பாளர்கள்6
மொத்த போட்டிகள்13
தொடர் நாயகன் குல்தீப் யாதவ்
அதிக ஓட்டங்கள் சுப்மன் கில் (302)
அதிக வீழ்த்தல்கள் மதீச பத்திரன (11)
2022

2023 ஆசியக் கிண்ணம் (2023 Asia Cup) அல்லது சூப்பர் 11 ஆசியக் கோப்பை (Super 11 Asia Cup)[1] என்பது ஆசியக் கிண்ணத்தின் 16-ஆவது பதிப்பாகும். இந்தப் போட்டிகள் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளாக விளையாடப்பட்டன. இந்தத் தொடரை பாக்கித்தான் அதிகாரபூர்வமாக நடத்தியது.[2] 6 நாட்டு அணிகள் மோதிய இத்தொடர்,[3] 2023 ஆகத்து 30 முதல் செப்டம்பர் 17 வரை பாக்கித்தானிலும், இலங்கையிலும் நடைபெற்றன.[4] நடப்பு வாகையாளராக இலங்கை விளையாடியது.[5] ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் நடைபெறும் முதல் ஆசியக் கோப்பை இதுவாகும். இதில் நான்கு போட்டிகள் பாக்கித்தானிலும், மீதமுள்ள ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நடைபெற்றன.[6][7][8]

ஆசியத் துடுப்பாட்ட அவையின் ஐந்து முழு உறுப்பினர்களான ஆப்கானித்தான், வங்காளதேசம், இந்தியா, பாக்கித்தான், இலங்கை அணிகள் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற்றன. 2023 ஆசியத் துடுப்பாட்ட அவை ஆண்கள் பிரீமியர் கோப்பையை வென்றதன் மூலம் தகுதி பெற்ற நேபாளமும் இவர்களுடன் இணைந்தது. இந்திய அரசாங்கத்தின் மறுப்பு காரணமாக பாக்கித்தானுக்குப் பயணம் செய்ய மறுத்த இந்தியாவைத் தவிர, அனைத்து அணிகளும் பாக்கித்தானில் குறைந்தபட்சம் ஒரு சில ஆட்டங்களில் விளையாடின.[9][10][11] 2023 சனவரியில், ஆசியத் துடுப்பாட்ட அவை 2023 மற்றும் 2024க்கான போட்டிகளுக்கான் திகதிகளையும் வடிவமைப்பையும் அறிவித்தது.[12][13][14] முதலில், போட்டி 2021 இல் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட் 19 பெருந்தொற்றுக் காரணமாக 2023 க்கு ஒத்திவைக்கப்பட்டது. போட்டிக்கான அட்டவணை 2023 சூலை 19 அன்று அறிவிக்கப்பட்டது.[15] இறுதிப் போட்டியில் இலங்கையை 10 இலக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தனது எட்டாவது ஆசியக் கோப்பையை வென்றது.

வடிவம்[தொகு]

போட்டியின் குழுக்கள் மற்றும் வடிவம் 9 ஜனவரி 2023 அன்று அறிவிக்கப்பட்டது. ஆறு அணிகள் மூன்று வீதம் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன.[16] ஆறு முதல் சுற்றுப் போட்டிகள், ஆறு சூப்பர் 4 போட்டிகள் மற்றும் ஒரு இறுதிப் போட்டி என மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.[17] இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் குழு அ வில் இடம் பெற்றன. அதே சமயம் நடப்பு வாகையாளரான இலங்கை வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் குழு ஆ வில் இடம்பெற்றது [18] ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் சூப்பர் 4 க்கு முன்னேறின. அங்கிருந்து முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.[19]

நிகழிடங்கள்[தொகு]

பாக்கித்தான் பாகித்தான்

இலங்கை இலங்கை

லாகூர் முல்தான் கொழும்பு கண்டி
கடாபி அரங்கம் முல்தான் துடுப்பாட்ட அரங்கம் ஆர். பிரேமதாச அரங்கம் முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு: 27,000[20] கொள்ளளவு: 30,000[21] கொள்ளளவு: 35,000 கொள்ளளவு: 35,000
போட்டிகள்: 3 போட்டிகள்: 1 போட்டிகள்: 6 போட்டிகள்: 3

அணிகளும் தகுதியும்[தொகு]

  ஆசிய கோப்பைக்கு முழு உறுப்பினர்களாக தகுதி பெற்றனர்
  2023 ஏசிசி ஆண்கள் பிரீமிய கோப்பை மூலம் தகுதி பெற்றது
  தகுதி பெறவில்லை

ஆசியத் துடுப்பாட்ட அவையின் முழு உறுப்புரிமை கொண்ட அணிகள் இச்சுற்றில் விளையாட நேரடியாகத் தகுதி பெற்றன. நேபாள அணி 2023 ஏசிசி ஆண்கள் பிரீமியர் கோப்பை இறுதிப் போட்டியில் அமீரக அணியை வென்றதை அடுத்து இச்சுற்றில் முதல் தடவையாக விளையாடத் தகுதி பெற்றது.[22]

தகுதிக்கான வழிமுறைகள் நாள் நடத்தும் நாடு அணிகள் தகுதி
ஐசிசி முழு உறுப்பினர் பொருத்தமில்லை எவையுமில்லை 5

 ஆப்கானித்தான்
 வங்காளதேசம்
 இந்தியா
 பாக்கித்தான்
 இலங்கை

2023 ஏசிசி ஆண்கள் பிரீமியர் கோப்பை 18 ஏப்ரல் — 2 மே 2023 நேபாளம் நேபாளம் 1

 நேபாளம்

குழுக்கள்[தொகு]

 ஆப்கானித்தான்[23]  வங்காளதேசம்[24]  இந்தியா[25]  நேபாளம்[26]  பாக்கித்தான்[27]  இலங்கை[28]
 • ரோகித் பௌதேல் ()
 • ஆசிப் சேக் (கு.கா)
 • திப்பேந்திரா சிங் ஐரீ
 • குசல் பூர்ட்டெல்
 • மவ்சம் தக்கால்
 • பிராத்திசு
 • குல்சான் ஜா
 • சுந்தீப் ஜோரா
 • கரன் கே.சி
 • சொம்பால் காமி
 • சந்தீப் லாமிச்சானே
 • கிசோர் மகாத்தோ
 • குசல் மல்லா
 • லலித் ரச்பான்சி
 • ஆரிப் சேக்
 • அர்ஜுன் சவுத் (கு.கா)
 • பீம் சர்க்கி

குழு நிலை[தொகு]

குழு அ[தொகு]

புள்ளிப் பட்டியல்[தொகு]

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி
1  பாக்கித்தான் (H) 2 1 0 0 1 3 4.760
2  இந்தியா 2 1 0 0 1 3 1.028
3  நேபாளம் 2 0 2 0 0 0 −3.572
மூலம்: ESPNcricinfo
(H) நடத்தும் நாடு

     சூப்பர் 4 இற்குத் தெரிவு

போட்டிகள்[தொகு]

30 ஆகத்து 2023
14:30 (பா.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
 நேபாளம்
104 (23.4 நிறைவுகள்)
பாபர் அசாம் 151 (131)
சோம்பால் காமி 2/85 (10 நிறைவுகள்)
சோம்பால் காமி 28 (46)
சதாப் கான் 4/27 (6.4 நிறைவுகள்)
பாக்கித்தான் 238 ஓட்டங்களால் வெற்றி
மூல்தான் துடுப்பாட்ட அரங்கு, முல்தான்
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நிசீ), மசூதுர் ரக்மான் (வங்)
ஆட்ட நாயகன்: பாபர் அசாம் (பாக்)
 • நாணயச் சுழற்சியில் வென்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • முதல் தடவையாக பாக்கித்தானும் நேபாளமும் பன்னாட்டு ஒரு-நாள் போட்டி ஒன்றில் மோதின.
 • இப்திகார் அகமது (பாக்) தனது பன்னாட்டு ஒருநாள் சதத்தைப் பெற்றார்.[29]
 • பாபர் அசாம், இப்திகார் அகமது ஆகியோர் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் பாக்கித்தானுக்காக ஐந்தாவது இலக்குக்கான அதிகபட்ச இணைப்பாட்டமாக 214 ஓட்டங்களைப் பெற்றனர்.

2 செப்டம்பர் 2023
15:00 (இ.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
266 (48.5 நிறைவுகள்)
 • நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • மழை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
 • அவ்வாட்ட முடிவை அடுத்து, பாக்கித்தான் சூப்பர் 4 இல் விளையாடத் தகுதி பெற்றது.

4 September 2023
15:00 (இ.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
நேபாளம் 
230 (48.2 நிறைவுகள்)
 இந்தியா
147/0 (20.1 நிறைவுகள்)
ஆசிப் சேக் 58 (97)
ரவீந்திர ஜடேஜா 3/40 (10 நிறைவுகள்)
இந்தியா 10 இலக்குகளால் வெற்றி (ட.லூ முறை)
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: பவுல் வில்சன் (ஆசி), ருசிர பள்ளியகுருகே (இல)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்)
 • நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • மழை காரணமாக இந்தியாவின் வெற்றி இலக்கு 23 நிறைவுகளுக்கு 145 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
 • முதல் தடவையாக இந்தியாவும் நேபாளமும் பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடின.
 • இவ்வாட்ட முடிவை அடுத்து, இந்தியா சூபர் 4 இல் விளையாடத் தகுதி பெற்றது, நேபாளம் விலக்கப்பட்டது.

குழு ஆ[தொகு]

புள்ளிப் பட்டியல்[தொகு]

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி
1  இலங்கை (H) 2 2 0 0 0 4 0.594
2  வங்காளதேசம் 2 1 1 0 0 2 0.373
3  ஆப்கானித்தான் 2 0 2 0 0 0 −0.910
மூலம்: ESPNcricinfo
(H) நடத்தும் நாடு

     சூப்பர் 4 இற்குத் தெரிவு

போட்டிகள்[தொகு]

31 ஆகத்து 2023
15:00 (இ.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
164 (42.4 நிறைவுகள்)
 இலங்கை
165/5 (39 நிறைவுகள்)
 • வங்காளதேசம் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
 • தன்சித் அசன் (வங்) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

3 செப்டம்பர் 2023
14:30 (பா.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
334/5 (50 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
245 (44.3 நிறைவுகள்)
வங்காளதேசம் 89 ஓட்டங்களால் வெற்றி
கடாபி அரங்கம், லாகூர்
நடுவர்கள்: ஆசிப் யாக்கூப் (பாக்), லாங்டன் ருசிரே (சிம்)
ஆட்ட நாயகன்: மெஹதி ஹசன் (வங்)
 • வங்காளதேசம் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
 • சமீம் ஒசைன் (வங்) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
 • ஆப்கானித்தான் பாக்கித்தானில் விளையாடிய முதலாவது பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி இதுவாகும்.
 • மெஹதி ஹசன் (வங்) தனது 1000-ஆவது ஓட்டத்தை பன்னாட்டு ஒருநாள் போட்டியில் எடுத்தார்.
 • வங்காளதேசம்-ஆப்கானித்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இரு அணிகளும் இணைந்து பெற்ற அதிகபட்ச ஓட்டமாக 579 ஓட்டங்கள் இந்தப்போட்டியில் பெறப்பட்டது.[30]
 • இவ்வாட்ட முடிவை அடுத்து, வங்காளதேசம் சூப்பர் 4 இல் விளையாடத் தகுதி பெற்றது.

5 செப்டம்பர் 2023
14:30 (பா.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
291/8 (50 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
289 (37.4 நிறைவுகள்)
முகம்மது நபி 65 (32)
கசுன் ராஜித 4/79 (10 நிரைவுகள்)
இலங்கை 2 ஓட்டங்களால் வெற்றி.
கடாபி அரங்கம், லாகூர்
நடுவர்கள்: ஆசிப் யாக்கூப் (பாக்), கிறிஸ் கஃப்பனி (நியூ)
ஆட்ட நாயகன்: குசல் மெண்டிசு (இல)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • முகம்மது நபி (ஆப்) தனது நாட்டிற்காக மிக விரைவான பன்னாட்டு ஒருநாள் 50களை (24 பந்துகள்) எடுத்தார்.[31]
 • இவ்வாட்ட முடிவை அடுத்து, இலங்கை சூப்பர் 4 இல் விளையாடத் தகுதி பெற்றது, ஆப்கானித்தான் வெளியேற்றப்பட்டது.

சூப்பர் 4[தொகு]

பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் 11 செப்டம்பர் 2023 அன்று இந்தியா-பாக்கித்தான் இடையேயான சூப்பர் நான்கு மோதலுக்கு ஒதுக்கப்பட்ட நாளாக அறிவித்தது.[32] ஒதுக்கப்பட்ட நாள் தூண்டப்பட்டால், போட்டி இடைநிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து செப்டம்பர் 11 அன்று தொடரும்.[33]

செப்டம்பர் 12 அன்று இலங்கையை 41 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்தியா பத்தாவது முறையாக ஆசியக்கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.[34] இரண்டு நாட்களுக்குப் பிறகு, மழையால் தாமதிக்கப்பட்ட போட்டியில் பாக்கித்தானை இரண்டு இலக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த இலங்கை, 11-ஆவது தடவையாக இறுதிப் போட்டியை அடைந்தது.[35]

புள்ளிப் பட்டியல்[தொகு]

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி
1  இந்தியா 3 2 1 0 4 1.759
2  இலங்கை 3 2 1 0 4 −0.134
3  வங்காளதேசம் 3 1 2 0 2 −0.469
4  பாக்கித்தான் 3 1 2 0 2 −1.283
மூலம்: ESPNcricinfo

     இறுதிப் போட்டிக்குத் தெரிவு.

போட்டிகள்[தொகு]

6 செப்டம்பர் 2023
14:30 (பா.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
193 (38.4 நிறைவுகள்)
 பாக்கித்தான்
194/3 (39.3 நிறைவுகள்)
முஷ்பிகுர் ரகீம் 64 (87)
அரிசு ரவூஃப் 4/19 (6 நிறைவுகள்)
இமாம்-உல்-ஹக் 78 (84)
சொரிபுல் இசுலாம் 1/24 (8 நிறைவுகள்)
பாக்கித்தான் 7 இலக்குகளால் வெற்றி
கடாபி அரங்கம், லாகூர்
நடுவர்கள்: அகமது சா பக்தீன் (ஆப்), லாங்டன் ருசிரே (சிம்)
ஆட்ட நாயகன்: அரிசு ரவூஃப் (பாக்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • அரிசு ரவூஃப் (பாக்) தனது 50-ஆவது பன்னாட்டு ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[36]

9 செப்டம்பர் 2023
15:00 (இநே) (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
257/9 (50 நிறைவுகள்)
 வங்காளதேசம்
236 (48.1 நிறைவுகள்)
சதீர சமரவிக்ரம 93 (72)
அசன் மகுமுத் 3/57 (9 நிறைவுகள்)
தவ்கீது இரிதோய் 82 (97)
தசுன் சானக்க 3/28 (9 நிறைவுகள்)
இலங்கை 21 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ஜெயராமன் மதனகோபால் (இந்), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: சதீர சமரவிக்ரம (இல)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதல் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

10–11 செப்டம்பர் 2023
15:00 (இ.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
356/2 (50 நிறைவுகள்)
 பாக்கித்தான்
128 (32 நிறைவுகள்)
விராட் கோலி 122* (94)
சதாப் கான் 1/71 (10 நிறைவுகள்)
இந்தியா 228 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), ருசிர பள்ளியகுருகே (இல)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • விராட் கோலி (இந்) தனது 13,000-ஆவது பன்னாட்டு ஒருநாள் ஓட்டத்தை எடுத்தார்.[37]
 • விராட் கோலி ஆட்டப் பகுதிகளைப் பொறுத்தவரை (267) மிகவிரைவான 13000 ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்தார்.[38]
 • பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் ஓட்டங்கள் வாரியாக இந்தியாவின் பாக்கித்தானுக்கு எதிரான மிகப்பெரிய வெற்றி ஆகும்.[39]

12 செப்டம்பர் 2023
15:00 (இ.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
213 (49.1 நிறைவுகள்)
 இலங்கை
172 (41.3 நிறைவுகள்)
ரோகித் சர்மா 53 (48)
துனித் வெல்லாளகே 5/40 (10 நிறைவுகள்)
துனித் வெல்லாளகே 42* (46)
குல்தீப் யாதவ் 4/43 (9.3 நிறைவுகள்)
இந்தியா 41 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: மசூதுர் ரக்மான் (வங்), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: துனித் வெல்லாளகே (இல)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தத்து.
 • ரோகித் சர்மா (இந்) தனது 10,000-ஆவது பன்னாட்டு ஒருநாள் ஓட்டத்தை எடுத்தார்.[40]
 • துனித் வெல்லாளகே (இல) தனது முதலாவது ஒருநாள் ஐவீழ்த்தலைப் பெற்றார்.[41]
 • இவ்வாட்ட முடிவை அடுத்து, இந்தியா இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது, வங்காளதேசம் வெளியேற்றப்பட்டது.

14 செப்டம்பர் 2023
15:00 (இ.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
252/7 (42 நிறைவுகள்)
 இலங்கை
252/8 (42 நிறைவுகள்)
இலங்கை 2 இலக்குகளால் வெற்றி (ட/லூ)
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: அகமது சா பக்தீன் (ஆப்), லாங்டன் ருசெரே (சிம்)
ஆட்ட நாயகன்: குசல் மெண்டிசு (இல)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • மழை காரணமாக ஆட்டம் ஒவ்வோர் அணிக்கும் 42 நிறைவுகளாகக் குறைக்கப்பட்டது.
 • இலங்கையின் வெற்றி இலக்கு 252 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
 • சமான் கான் (பாக்) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
 • இவ்வாட்ட முடிவை அடுத்து, இலங்கை இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது, பாக்கித்தான் வெளியேற்றப்பட்டது.

15 செப்டம்பர் 2023
15:00 (இநே) (ப/இ)
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
265/8 (50 நிறைவுகள்)
 இந்தியா
259 (49.5 நிறைவுகள்)
வங்காளதேசம் 6 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ஆசிப் யாக்கூப் (பாக்), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: சகீப் அல் அசன் (வங்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • தன்சீம் அசன் சக்கீபு (வங்), திலக் வர்மா (இந்) இருவரும் தமது முதல் பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினர்.
 • ரவீந்திர ஜடேஜா (இந்) தனது 200-ஆவது பன்னாட்டு ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[42]

இறுதிப் போட்டி[தொகு]

17 செப்டம்பர் 2023
15:00 (இ.நே) (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
50 (15.2 நிறைவுகள்)
 இந்தியா
51/0 (6.1 நிறைவுகள்)
இந்தியா 10 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் மற்றும் அகமது சா பக்தீன்
ஆட்ட நாயகன்: முகமது சிராஜ்
 • இலங்கை நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
 • ரோகித் சர்மா (இந்) தனது 250-ஆவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[43]
 • முகமது சிராஜ் (இந்) பந்துவீச்சில் (1,002) 50 பன்னாட்டு ஒருநாள் இலக்குகளை மிக வேகமாக எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் ஆனார்.[44] சிராஜ் தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் ஐவீழ்த்தலை எடுத்தார்.[45][46] அத்துடன் சிராஜ் ஒரு ஓவரில் நான்கு இலக்குகளை வீழ்த்தி, ஒருநாள் போட்டிகளில் அவ்வாறு செய்த முதல் இந்திய பந்துவீச்சாளரும் ஆவார்.[44]
 • இலங்கையின் 50 ஓட்டங்கள் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் அவர்களின் இரண்டாவது குறைந்த ஓட்டங்கள் ஆகும், மேலும் ஆசியக் கோப்பைப் போட்டிகளில் எந்த அணியும் பெறாத மிகக்குறைந்த ஓட்டங்கள் ஆகும்.[47] இது அவர்கள் எதிர்கொண்ட பந்துகளின் அடிப்படையில் (92), மற்றும் ஒட்டுமொத்தமாக பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் ஐந்தாவது முடிக்கப்பட்ட மிகக் குறுகிய இன்னிங்சு ஆகும்.[48]
 • மீதமுள்ள பந்துகளில் (263) ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் அதிகபட்ச வெற்றி இதுவாகும்.[49]

புள்ளிவிபரங்கள்[தொகு]

அதிக ஓட்டங்கள்[தொகு]

போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த முதல் ஐந்து பேர் இந்த அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.[50]

வீரர் ஓட்டங்கள் ஆட்டப்பகுதிகள் NO சராசரி ஓ.வி கூ.ஓ 100 50 4s 6s
சுப்மன் கில் 302 6 2 75.50 93.49 121 1 2 35 6
குசல் மெண்டிசு 270 6 0 45.00 85.71 92 0 3 27 5
சதீர சமரவிக்ரம 215 6 0 35.83 89.21 93 0 2 19 2
பாபர் அசாம் 207 4 0 51.75 97.64 151 1 0 20 4
முகம்மது ரிஸ்வான் 195 4 2 97.50 94.20 86* 0 2 19 3

அதிக இலக்குகள்[தொகு]

போட்டியில் ஏழு இலக்குகளை வீழ்த்தியவர்கள் இந்த அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.[51]

வீரர் இலக்குகள் ஆட்டப்பகுதிகள் ஓட்டங்கள் நிறைவுகள் BBI Econ. சராசரி 5இ
மதீச பத்திரன 11 6 270 40.5 4/32 6.61 24.54 0
முகமது சிராஜ் 10 4 122 26.2 6/21 4.63 12.20 1
துனித் வெல்லாளகே 6 179 2.0 5/40 4.26 17.90 1
சகீன் அஃப்ரிடி 5 235 41.00 4/35 5.73 23.50 0
குல்தீப் யாதவ் 9 4 103 28.3 5/25 3.61 11.44 1
ஆரிசு ரவூஃப் 4 120 25.00 4/19 4.80 13.33 0
தஸ்கின் அகமது 4 172 33.3 4/44 5.13 19.11 0

மேற்கோள்கள்[தொகு]

 1. KT, Team. "Super 11 sign on as title sponsor for Asia Cup". Khaleej Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-28.
 2. "Asia Cup 2023 dates: Matches start on August 31; Four in Pakistan, nine in Sri Lanka". SportStar (in ஆங்கிலம்). 15 June 2023. பார்க்கப்பட்ட நாள் 15 June 2023.
 3. "Asia Cup 2023: 50-over format tournament in September; India-Pakistan in same group". The Indian Express (in ஆங்கிலம்). 5 January 2023. Archived from the original on 6 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
 4. "Asia Cup to be held in September before ODI World Cup, confirms ACC chairman Jay Shah". WION. Archived from the original on 6 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
 5. "Brilliant Sri Lanka clinch Asia Cup 2022 title". International Cricket Council (in ஆங்கிலம்). Archived from the original on 6 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
 6. "Four Asia Cup matches in Pakistan; remaining nine in Sri Lanka". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-15.
 7. "Asia Cup 2023 - Where, when, who, what, and everything else". ESPNcricinfo (in ஆங்கிலம்). 2023-08-24. பார்க்கப்பட்ட நாள் 2023-08-24.
 8. Lavalette, Tristan. "India And Pakistan Renew Cricket’s Biggest Rivalry In Financial Windfall For Asia Cup" (in en). Forbes. https://www.forbes.com/sites/tristanlavalette/2023/08/30/india-and-pakistan-renew-crickets-biggest-rivalry-in-financial-windfall-for-asia-cup/. "Eventually, common sense prevailed as a compromise was struck with Pakistan to retain hosting duties but nine of the 13 matches will be played in Sri Lanka, including all of India's games and the final on September 17." 
 9. "India won't travel to Pakistan for 2023 Asia Cup". ESPNcricinfo. Archived from the original on 6 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
 10. "Pakistan vs India set for September 2 in Kandy in Asia Cup". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 July 2023.
 11. "'Asia Cup should be staged in Sri Lanka', says R Ashwin while responding to ..."
 12. "Asian Cricket Council announces new pathway structure and calendar for 2023 & 2024". Asian Cricket Council (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 6 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
 13. "Asia Cup 2023 | Asia Cup News | Asia Cup Schedule 2023 | Asia Cup Hybrid Model - cricfr". www.cricfr.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-25.
 14. "ACC announces Asia Cup schedule". The Daily Observer. Archived from the original on 6 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
 15. "Men's ODI Asia Cup 2023 schedule confirmed". Asian Cricket Council (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 July 2023.
 16. "Groups and format announced for Men's Asia Cup 2023". ThePapare (in அமெரிக்க ஆங்கிலம்). 5 January 2023. Archived from the original on 6 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
 17. "Asia Cup 2023 cricket groups announced: Will India, Pakistan face each other in September?". Khaleej Times (in ஆங்கிலம்). Archived from the original on 6 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
 18. "Asia Cup Cricket: Bangladesh grouped with Sri Lanka, Afghanistan". The Daily Observer. Archived from the original on 6 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
 19. "India, Pakistan placed in same group at 2023 Asia Cup". The Business Standard (in ஆங்கிலம்). 2023-01-05. Archived from the original on 6 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
 20. "PCB team to visit Bugti Stadium next week". Pakistan Cricket Board. 10 January 2014. பார்க்கப்பட்ட நாள் 20 July 2019.
 21. "Multan Cricket Stadium | Pakistan | Cricket Grounds | ESPNcricinfo.com". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2022.
 22. Sportstar, Team (2 May 2023). "Nepal beats UAE to qualify for Asia Cup 2023" (in en). sportstar.thehindu.com. https://sportstar.thehindu.com/cricket/nepal-qualifies-for-asia-cup-2023-schedule-india-pakistan-group/article66802657.ece. 
 23. "Asia Cup: Karim Janat, Sharafuddin Ashraf back in Afghanistan squad". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 August 2023.
 24. "Tanzid and Naim step up as Bangladesh look to the future with Asia Cup squad". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 August 2023.
 25. "Rahul, Shreyas and Tilak make it to India's Asia Cup squad". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 August 2023.
 26. "Nepal pick Dhakal and Jora in Asia Cup squad". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-15.
 27. "Faheem Ashraf in, Shan Masood out as Pakistan name 18 for Asia Cup and Afghanistan ODIs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 August 2023.
 28. "Key players out injured as Sri Lanka name Asia Cup squad". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 29 August 2023.
 29. "Iftikhar Ahmed joins Pakistan legend Zaheer Abbas in unique 'maiden century' list after unbeaten ton in PAK vs NEP match". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 31 August 2023.
 30. "Afghanistan vs Bangladesh Head To Head ODI match team highest match aggregates". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 September 2023.
 31. "Asia Cup: Mohammad Nabi slams Afghanistan's fastest ODI fifty". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 September 2023. பார்க்கப்பட்ட நாள் 6 September 2023.
 32. "Rain clouds hover over Pakistan, India clash as other teams criticise ‘reserve day’" (in en). DAWN. 9 September 2023. https://www.dawn.com/news/1774817/rain-clouds-hover-over-pakistan-india-clash-as-other-teams-criticise-reserve-day. 
 33. "India vs Pakistan the only Asia Cup Super Four game with a reserve day" (in en). ESPNcricinfo. 8 September 2023. https://www.espncricinfo.com/story/asia-cup-2023-india-vs-pakistan-the-only-super-fours-game-with-reserve-day-1397047. 
 34. Karhadkar, Amol (12 September 2023). "India qualifies for Asia Cup 2023 final, ends Sri Lanka’s 13-match winning streak" (in en). Sportstar. https://sportstar.thehindu.com/cricket/india-qualifies-asia-cup-2023-final-beats-sri-lanka-odi-win-streak-colombo-ind-vs-sl-match-result-spinners-highlights/article67300410.ece. 
 35. "Asia Cup 2023: Sri Lanka win last-over thriller against Pakistan, to meet Rohit Sharma's men in the final" (in en). indiatvnews.com. 15 September 2023. https://www.indiatvnews.com/sports/cricket/asia-cup-2023-sri-lanka-win-last-over-thriller-in-super-4-against-pakistan-to-meet-india-rohit-sharma-s-men-in-the-final-2023-09-15-892781. 
 36. "Haris Rauf ties with Waqar Younis to become third-fastest to 50 ODI wickets for Pakistan". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 6 September 2023.
 37. "Masterful Virat Kohli slams 77th international ton, becomes fastest to 13,000 ODI runs". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 11 September 2023.
 38. "Virat Kohli becomes fastest to reach 13,000 ODI runs, X erupts in joy". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 11 September 2023.
 39. "India Register Biggest Ever Win over Pakistan, Hammer Babar Azam's Men by 228 Runs in Asia Cup Super 4 Stage". News18. பார்க்கப்பட்ட நாள் 12 September 2023.
 40. "Rohit Sharma leaves legends Tendulkar, Ponting, Dhoni miles behind by smashing 10000 ODI runs in IND vs SL Asia Cup tie". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 12 September 2023.
 41. "Asia Cup: Dunith Wellalage rattles India as he takes maiden ODI fifer in Super 4 match". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 12 September 2023.
 42. "Asia Cup 2023: Ravindra Jadeja claims 200th ODI wicket as India tighten grip over Bangladesh". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 15 September 2023.
 43. "Asia Cup 2023 Final: Rohit Sharma becomes 9th Indian to play 250 ODI matches". India Today. பார்க்கப்பட்ட நாள் 17 September 2023.
 44. 44.0 44.1 Sportstar, Team (17 September 2023). "IND vs SL: Siraj becomes first Indian to bag four wickets in one over, equals fastest ODI five-wicket haul" (in en). Sportstar. https://sportstar.thehindu.com/cricket/india-vs-sri-lanka-asia-cup-2023-final-siraj-four-wickets-one-over-lasith-malinga-record/article67318112.ece. 
 45. "Asia Cup 2023 Final: Mohammed Siraj picks 4 wickets in an over, becomes 4th fastest Indian to pick 50 ODI wickets". India Today. பார்க்கப்பட்ட நாள் 17 September 2023.
 46. "India vs Sri Lanka: Mohammed Siraj Lights Up Asia Cup Final With Fastest 5-Wicket Haul In ODIs". NDTV Sports. பார்க்கப்பட்ட நாள் 17 September 2023.
 47. Sportstar, Team (17 September 2023). "IND vs SL: Sri Lanka 50 all out, records lowest Asia Cup total in final" (in en). Sportstar. https://sportstar.thehindu.com/cricket/sri-lanka-50-all-out-asia-cup-2023-ind-vs-sl-lowest-team-scores-records-siraj-six-wickets/article67318262.ece. 
 48. "ODI matches | Team records | Shortest completed innings (by balls)". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 September 2023.
 49. Sportstar, Team (17 September 2023). "Biggest ODI wins: India records best win chasing vs Sri Lanka in Asia Cup 2023 final" (in en). Sportstar. https://sportstar.thehindu.com/cricket/biggest-odi-wins-chasing-balls-remaining-india-vs-sri-lanka-asia-cup-2023-final-team-records/article67318407.ece. 
 50. "Asia Cup 2023 — Most Runs — Records". ESPNcricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 31 August 2023.
 51. "Asia Cup 2023 — Most Wickets — Records". ESPNcricinfo. ESPN. பார்க்கப்பட்ட நாள் 31 August 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியக்_கிண்ணம்_2023&oldid=3830193" இலிருந்து மீள்விக்கப்பட்டது