கடாபி அரங்கம்
![]() 2015இல் மைதானத்தின் தோற்றம் | |
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | லாகூர், பஞ்சாப், பாகித்தான் |
ஆள்கூறுகள் | 31°30′48″N 74°20′0″E / 31.51333°N 74.33333°E |
இருக்கைகள் |
|
உரிமையாளர் | பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் |
குத்தகையாளர் | பாக்கித்தான் துடுப்பாட்ட அணி மத்திய பஞ்சாப் துடுப்பாட்ட அணி லாகூர் காலண்டர்சு |
முடிவுகளின் பெயர்கள் | |
பவிலியன் முனை போர்மன் கிரித்தவக் கல்லூரி முனை | |
பன்னாட்டுத் தகவல் | |
முதல் தேர்வு | 21–26 நவம்பர் 1959:![]() ![]() |
கடைசித் தேர்வு | 21–25 மார்ச் 2022:![]() ![]() |
முதல் ஒநாப | 13 சனவரி 1978:![]() ![]() |
கடைசி ஒநாப | 6 செப்டம்பர் 2023:![]() ![]() |
முதல் இ20ப | 22 மே 2015:![]() ![]() |
கடைசி இ20ப | 17 ஏப்ரல் 2023:![]() ![]() |
முதல் மஒநாப | 2 நவம்பர் 2019:![]() ![]() |
கடைசி மஒநாப | 9 நவம்பர் 2022:![]() ![]() |
முதல் மஇ20ப | 26 அக்டோபர் 2019:![]() ![]() |
கடைசி மஇ20ப | 16 நவம்பர் 2022:![]() ![]() |
17 ஏப்ரல் 2023 இல் உள்ள தரவு மூலம்: கிரிக்கின்ஃபோ |

கடாபி அரங்கம் ( Urdu: قذافی اسٹیڈیم ) முன்பு லாகூர் அரங்கம் என அழைக்கப்பட்ட இந்த அரங்கம்பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், லாகூரில் உள்ள ஒரு துடுப்பாட்ட மைதானமாகும். இது பாகித்தான் துடுப்பாட்ட வாரியத்திற்குச் சொந்தமானது. [1] 27,000 கொள்ளளவு கொண்ட இது பாகிஸ்தானின் நான்காவது பெரிய துடுப்பாட்ட மைதானமாகும் . இது பாகித்தான் சூப்பர் லீக்கில் லாகூர் கலாண்டர்ஸின் சொந்த மைதானமாகும். [2] [3] கடாபி அரங்கம் பாக்கித்தானில் முதன்முதலில் நவீன ஒளிவிளக்குகளுடன் அதன் சொந்த அவசரதேவை மின் பிறப்பாக்கிகளுடன் பொருத்தப்பட்டது. [4] பாகித்தான் துடுப்பாட்ட வாரியத்தின் தலைமையகம் கடாபி மைதானத்தில் அமைந்துள்ளது, இதனால் இது பாகிஸ்தான் தேசிய துடுப்பாட்ட அணியின் தாயகமாக விளங்குகிறது.
இது உருசியாவில் பிறந்த பாகித்தானிய கட்டிடக் கலைஞரும் கட்டடப் பொறியியலாளருமான நசுரெதின் முராத்-கான் என்பவரால் வடிவமைக்கப்பட்டு மியான் அப்துல் காலிக் நிறுவனத்தால் 1959 இல் கட்டப்பட்டது. 1996 துடுப்பாட்ட உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நடத்தியபோது இந்த மைதானம் புதுப்பிக்கப்பட்டது. [5]
பாகிஸ்தானின் உள்நாட்டு மற்றும் சர்வதேசப் போட்டிகளுக்கு மேலதிகமாக, கடாபி அரங்கம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் பல போட்டிகளையும் நடத்தியது. முதலாவது 2017 பதிப்பின் இறுதிப் போட்டியாகும். [6] [7] மார்ச் 2022 இல், பிசிபி நிதி காரணங்களுக்காக கடாபி அரங்கத்தின் பெயரை புதிய அனுசரணையாளரின் பெயருக்கு மாற்றுவதற்கான செயல்முறையைத் தொடங்கியது. [8]
போட்டித் தரவுகள்
[தொகு]தேர்வுத்துடுப்பாட்டம்
[தொகு]- அதிகபட்ச அணி ஓட்டங்கள் : 699/5, 1989 இல் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானால் [9]
- குறைந்தபட்ச அணி ஓட்டங்கள்: 73, 2002 இல் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து. [10]
- அதிகபட்ச தனிநபர் ஓட்டங்கள் : 2002 இல் நியூசிலாந்துக்கு எதிராக இன்சமாம்-உல்-ஹக்கால் 329. [11]
ஒருநாள் பன்னாட்டுப் போட்டி
[தொகு]- அதிகபட்ச அணி மொத்தம் : 375/3, சிம்பாப்வேக்கு எதிராக பாகிஸ்தான், 26 மே 2015. [12]
- குறைந்தபட்ச அணி ஓட்டங்கள் : 75, இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான், 22 ஜனவரி 2009. [13]
- அதிகபட்ச தனிநபர் ஓட்டங்கள் : 139*, இந்தியாவுக்கு எதிராக இஜாஸ் அகமது, 2 அக்டோபர் 1997. [14]
பன்னாட்டு இருபது20
[தொகு]- அதிகபட்ச அணி ஓட்டங்கள் : 209/3, பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து, 2 அக்டோபர் 2022. [15]
- குறைந்தபட்ச அணி ஓட்டங்கள் : 101, இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான், 5 அக்டோபர் 2019. [16]
- அதிகபட்ச தனிநபர் ஓட்டங்கள் : 104*, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முகமது ரிஸ்வான், 11 பிப்ரவரி 2021. [17]
துடுப்பாட்ட உலகக் கோப்பை
[தொகு]இந்த மைதானத்தில் 1987 துடுப்பாட்ட உலகக் கோப்பை மற்றும் 1996 துடுப்பாட்ட உலகக் கோப்பையின் போது ஆறு ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 1996 இறுதிப் போட்டியும் அடங்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PCB team to visit Bugti Stadium next week". Pakistan Cricket Board. Retrieved 20 July 2019.
- ↑ "COUNTDOWN BEGIN: AROUND 27,000 FANS ARE READY TO THRONG 'GADDAFI STADIUM'". Archived from the original on 26 May 2015. Retrieved 11 November 2020.
- ↑ Yaqoob, Mohammad (2015-05-24). "Malik, Bilawal likely to be dropped for second T20". Dawn (in ஆங்கிலம்). Retrieved 2022-09-28.
- ↑ McGlashan, Andrew. "Gaddafi Stadium | Pakistan | Cricket Grounds | ESPNcricinfo.com". ESPNcricinfo. Retrieved 2022-09-28.
- ↑ "Gaddafi Stadium – Pakistan – Cricket Grounds – ESPN Cricinfo". ESPNcricinfo. Retrieved 11 November 2020.
- ↑ "PSL in pictures: cricket comes home to Lahore". Dawn (in ஆங்கிலம்). Pakistan. 2017-03-06. Retrieved 2021-06-24.
- ↑ "PSL 2017 final showdown: 'Will not bow our heads before anyone,' says Sethi at ceremony". Dawn (in ஆங்கிலம்). Pakistan. 2017-03-05. Retrieved 2021-06-24.
- ↑ Rasool, Danyal (15 March 2022). "Lahore's Gaddafi Stadium set to be rechristened with new sponsor's name". ESPNcricinfo. Retrieved 29 September 2022.
- ↑ "Gaddafi Stadium, Lahore Cricket Team Records & Stats | ESPNcricinfo.com". ESPNcricinfo. Retrieved 2022-09-28.
- ↑ "Team records | Test matches | Cricinfo Statsguru | ESPNcricinfo.com". ESPNcricinfo. Retrieved 2022-09-28.
- ↑ "Gaddafi Stadium, Lahore Cricket Team Records & Stats | ESPNcricinfo.com". ESPNcricinfo. Retrieved 2022-09-28.
- ↑ "Gaddafi Stadium, Lahore Cricket Team Records & Stats | ESPNcricinfo.com". ESPNcricinfo. Retrieved 2022-09-28.
- ↑ "Team records | One-Day Internationals | Cricinfo Statsguru | ESPNcricinfo.com". ESPNcricinfo. Retrieved 2022-09-28.
- ↑ "Gaddafi Stadium, Lahore Cricket Team Records & Stats | ESPNcricinfo.com". ESPNcricinfo. Retrieved 2022-09-28.
- ↑ "Gaddafi Stadium, Lahore Cricket Team Records & Stats | ESPNcricinfo.com". ESPNcricinfo. Retrieved 2022-09-28.
- ↑ "Team records | Twenty20 Internationals | Cricinfo Statsguru | ESPNcricinfo.com". ESPNcricinfo. Retrieved 2022-09-28.
- ↑ "Gaddafi Stadium, Lahore Cricket Team Records & Stats | ESPNcricinfo.com". ESPNcricinfo. Retrieved 2022-09-28.