ஆசியக் கிண்ணம் 1995
நிர்வாகி(கள்) | ஆசியத் துடுப்பாட்ட வாரியம் |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | ரொபின் சுற்று, Knockout |
நடத்துனர்(கள்) | அமீரகம் |
வாகையாளர் | இந்தியா (4வது-ஆம் தடவை) |
மொத்த பங்கேற்பாளர்கள் | 4 |
மொத்த போட்டிகள் | 7 |
தொடர் நாயகன் | நவ்ஜோத் சித்து |
அதிக ஓட்டங்கள் | சச்சின் டெண்டுல்கர் 205 |
அதிக வீழ்த்தல்கள் | அனில் கும்ப்ளே 7 |
1995 ஆசியக் கிண்ணம் (1995 Asia Cup) ஐந்தாவது ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியாகும். இது பெப்சி ஆசியக் கிண்ணம் எனவும் அழைக்கப்படுகிறது. இச்சுற்றுப் போட்டி 1995 ஆம் ஆண்டில் ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 13 வரை சார்ஜாவில் நடைபெற்றது. வங்காள தேசம், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்றன.
ரொபின் சுற்று முறையில் நடந்த இச்சுற்றில் ஒவ்வோர் அணியும் மற்றைய அணியுடன் ஒரு முறை ஆடியது. அவற்றில் முதலிரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. முதற் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய மூன்று அணிகளும் தலாஅ நான்கு புள்ளிகளைப் பெற்றன. ஆனாலும் இந்தியா, இலங்கை அணிகள் கூடிய ஓட்ட வீதம் பெற்றதால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில் இந்திய அனி, இலங்கையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று நான்காவது தடவையாக (அடுத்தடுத்து மூன்று தடவைகள்) ஆசியக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.