அஃபிஃப் ஹொசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஃபிஃப் ஹொசைன் (afif hosssain பிறப்பு 22 செப்டம்பர் 1999) என்பவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார்.[1] பிப்ரவரி 2018 இல், இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடருக்கான வங்காளதேச பன்னாட்டு இருபது 20 (டி 20 ஐ) அணியில் இவர் இடம் பெற்றார். இவர் பிப்ரவரி 15, 2018 அன்று இலங்கைத் துடுப்பாட்ட அணிக்குஎதிரான பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் வங்காளதேசத்தின் மிகப்பெரிய விளையாட்டு நிறுவனமான வங்காளதேச கிரிரா ஷிக்கா புரோடிஷ்டானின் எனும் கல்வி நிறுவனத்தின் மாணவராக இருந்தார், இது ஷாகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் போன்ற பரவலாக அறியப்படும் வீரர்களை உருவாக்கியுள்ளது. 19 வயதிற்குட்பட்ட துடுப்பாட்டப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தைை வெளிப்படுத்தினார். இவர் விளையாடும் திறன் தமீம் இக்பாலைப் போலவே இருப்பதாக பயிற்சியாளர்கள் கருதினர்.[2]

உள்நாட்டுப் போட்டிகள்[தொகு]

2016ஆம் ஆண்டில் நடைபெற்ற வங்காளதேச பிரீமியர் லீக் துடுப்பாட்ட தொடரில் ராஜ்ஷாஹி கிங்ஸ் துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். டிசம்பர் 3 அன்று நடைபெற்ற இருபது-20 போட்டியில் 5 இலக்குகளை கைப்பற்றினார் . அப்போது இவருக்கு வயது பதினேழு ஆகும். இதன் மூலம் மிகக் குறைந்த வயதில் 5 இழக்குகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனை படைத்தார்.[3][4] லீக் கட்டத்தின் இறுதி கட்டங்களில் விளையாடிய அவர், கிறிஸ் கெய்லின் இலக்கு உட்பட 21 ஓட்டங்களுக்கு 5 இலக்குகளை வீழ்த்தினார்.[5][6]

2016 ஆம் ஆண்டில் இவர் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். பிப்ரவரி 17 அன்று நடைபெற்ற வங்காளதேச துடுப்பாட்ட தொடரில் இவர் கிழக்கு மாகாண அணி சார்பாக விளையாடினார்.அந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 105 ஓட்டங்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.[7]

5 ஜூன் 2017 அன்று, 2016–17 டாக்கா பிரீமியர் டிவிசன் துடுப்பாட்ட லீக்கில், அபஹானி லிமிடெட் அணிக்காக ஹாட்ரிக் இலக்கினை கைப்பற்றினார்.[8]

2018–19 வங்காளதேசஷ் பிரீமியர் லீக்கிற்கான வரைவு பட்டியலில் இடம் பெற்றதை தொடர்ந்து, அக்டோபர் 2018 இல், சில்ஹெட் சிக்ஸர்ஸ் அணியில் இடம் பெற்றார்.[9] ஆகஸ்ட் 2019 இல், வங்காளதேச துடுப்பாட்ட வீரர்கள் 35 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு இருந்த வீரர்களில் ஒருவராக இருந்தார்.[10]

19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட ஆசிய கோப்பை துடுப்பாட்ட தொடரில் 19 வயதிற்குட்பட்ட வங்காளதேச துடுப்பாட்ட அணியின் துணை தலைவராக இருந்தார்.[11] 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட துடுப்பாட்ட உலகக்கிண்ண கோப்பை தொடரிலும் இவர் வங்காளதேச அணி சார்பாக விளையாடினார்.[12] இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் 276 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வங்கதேச மட்டையாளர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.அந்த தொடரில் சிறப்பாக விளையாடி யதற்காக வங்காளதேச துடுப்பாட்ட வாரியம் வளர்ந்து வரும் வீரர் எனும் விருதினை இவருக்கு கொடுத்தது.[13][14]

.

2018 டிசம்பரில், 2018 ஏ.சி.சி வளர்ந்து வரும் ஆசிய அணிகள் கோப்பைக்கான வங்காளதேச அணியில் இடம் பெற்றார்.[15]

குறிப்புகள்[தொகு]

  1. "Afif Hossain". ESPN Cricinfo. 11 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Who is Afif Hossain?". ESPN Cricinfo. 3 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Bangladesh Premier League, 40th Match: Chittagong Vikings v Rajshahi Kings at Dhaka, Dec 3, 2016". ESPN Cricinfo. 3 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Preview: Bangladesh U19 v Namibia U19". International Cricket Council. 12 January 2018 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Debutant Afif's 5 for 21 stuns Chittagong". ESPN Cricinfo. 3 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Stats: Youngest players to take a 5-wicket haul in T20 cricket". Crictracker. 3 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Bangladesh Cricket League, East Zone (Bangladesh) v North Zone (Bangladesh) at Fatullah, Feb 11-14, 2017". ESPN Cricinfo. 11 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Afif's hat-trick sets up mouthwatering finish to DPL". ESPN Cricinfo. 5 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19". Bangladesh Cricket Board. 28 மார்ச் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 October 2018 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Mohammad Naim, Yeasin Arafat, Saif Hassan - A look into Bangladesh's future". ESPN Cricinfo. 17 August 2019 அன்று பார்க்கப்பட்டது.
  11. "Bangladesh squad named for U-19 Asia Cup". Dhaka Tribune. 13 November 2016 அன்று பார்க்கப்பட்டது.
  12. "Saif Hassan likely to lead Bangladesh U-19 at World Cup". ESPN Cricinfo. 6 December 2017 அன்று பார்க்கப்பட்டது.
  13. "ICC Under-19 World Cup, 2017/18 - Bangladesh Under-19s: Batting and bowling averages". ESPN Cricinfo. 3 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
  14. "U19CWC Report Card: Bangladesh". International Cricket Council. 4 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
  15. "Media Release : ACC Emerging Teams Asia Cup 2018: Bangladesh emerging squad announced". Bangladesh Cricket Board. 3 டிசம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஃபிஃப்_ஹொசைன்&oldid=3579195" இருந்து மீள்விக்கப்பட்டது