நஜிபுல்லா சத்ரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நஜிபுல்லா சத்ரன் (Najibullah Zadran பஷ்தூ: نجیب الله ځدراڼ  ; பிறப்பு 18 பிப்ரவரி 1993) ஒரு ஆப்கான் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார் . சத்ரான் ஒரு இடது கை மட்டையாளர் மற்றும் இவர் வலது கை புரத்திருப்ப பந்துவீச்சாளரும் ஆவார். ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியில் அதிரடி துடுப்பாட்டக்காரராக இவர் பரவலாக அறியப்படுகிறார். பங்களாதேஷ் பிரீமியர் லீக் 2017 இன் ஆறாவது பதிப்பிற்காக சிட்டகாங் வைக்கிங் அணிக்காக சத்ரன் ஒப்பந்தம் ஆனார்.

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

உள்ளுர் போட்டிகள்[தொகு]

முதல் தரத் துடுப்பாட்டம்[தொகு]

2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி கண்டங்களுக்கு இடையிலான கோப்பைத் தொடரில் இவர் விளையாடினார். சூலை 19, டப்ளின் துடுப்பாட்ட அரங்கில் அயர்லாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 7 பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் சுசாக் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 24 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்து சோரன்சன் பந்து வீச்சில் இவர் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[1] 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற அலோக்சய் அகமது சா அப்தலி நான்கு நாள் கோப்பைத் தொடரில் இவர் விளையாடினார். ஏப்ரல் 29, அமதுல்லா துடுப்பாட்ட அரங்கில் பண்ட் இ அமிர் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். அந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 11 பந்துகளில் ஐந்து ஓட்டங்கள் எடுத்து அப்துல் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 89 பந்துகளில் 67 ஓட்டங்கள் எடுத்து கலித் பந்து வீச்சில் இவர் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பூச்ட் அணி 6 இலக்குகளில் வெற்றி பெற்றது.[2]

இருபது20[தொகு]

3 ஜூன் 2018 அன்று, குளோபல் டி 20 கனடா போட்டியின் தொடக்க பதிப்பிற்கான வீரர்களின் வரைவுப் பட்டியலில் இவர் மாண்ட்ரீல் புலிகள் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.[3][4] செப்டம்பர் 2018 இல், ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியின் முதல் பதிப்பில் இவர் காந்தஹார் அணியில் இடம் பெற்றார்.[5] அடுத்த மாதம், 2018–19 பங்களாதேஷ் பிரீமியர் லீக்கிற்கான வரைவு அணியில் இவர் இடம்பெற்றதனைத் தொடர்ந்து, சிட்டகாங் வைக்கிங் அணியில் இவர் இடம் பெற்றார்.[6]

ஜூன் 2019 இல், 2019 குளோபல் டி 20 கனடா போட்டியில் வின்னிபெக் ஹாக்ஸ் உரிமையாளர் அணிக்காக இவர் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.[7]

சர்வதேச வாழ்க்கை[தொகு]

2011 ஆம் ஆண்டு அயர்லாந்தில் நடந்த 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆப்கானிஸ்தானின் 19 வயதுக்குட்பட்டவர்களை சத்ரான் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[8] ராவல்பிண்டி ராம்ஸுக்கு எதிரான ஃபேசல் வங்கி இருபது20 கோப்பையில் ஆப்கானிஸ்தான் சீட்டா துடுப்பாட்ட அணி சர்பாக ஜத்ரான் இருபது20 போட்டியில் அறிமுகமானார். பைசலாபாத் வோல்வ்ஸ் மற்றும் முல்தான் டைகர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடினார்.[9] அந்தத் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி 58 ஓட்டங்களை எடுத்தார். இதில் அதிக பட்சமாக ஒரு போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை எடுத்தார்.[10] அந்த ஓட்டத்தினை இவர் ராவல்பிண்டி ராம்ஸ் அணிக்கு எதிராக் அஎடுத்தார். அந்தப் போட்டியில் பந்டுவிச்சில் சோஹைல் தன்வீரை தனது முதல் இலக்காக கைப்பற்றினார்.[11]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நஜிபுல்லா_சத்ரன்&oldid=2868060" இருந்து மீள்விக்கப்பட்டது