உள்ளடக்கத்துக்குச் செல்

பகீம் அஷ்ரப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகீம் அஷ்ரப் (Faheem Ashraf (உருது: فہیم اشرف‎; பிறப்பு: சனவரி 16, 1994) பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர். இடதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித வேகப் பந்துவீச்சாளரும் ஆவார். இவர் பாக்கித்தான் தேசிய அணி, பசிலாபாத், ஹபிப் பேங்க் லிமிடெட், இச்லாமாபாத் யுனைடட், பஞ்சாப் அணி, சூயி வடக்கு கேஸ் பைப்லைன்ஸ் லிமிடட் ஆகிய அணிகளுக்காகவும் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.[1][2] 2018-19 ஆண்டுகளுக்கான பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் 33 வீரர்களை மத்திய ஒப்பந்த விருதுக்குத் தேர்வு செய்தது. அதில் இவரும் ஒருவர் ஆவார்.[3][4].

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

2013-14 ஆம் ஆண்டுகளில் விளையாடிய முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார்.[5] 2016-17 ஆம் ஆண்டிற்கான டிபார்ட்மெண்டல் ஒருநாள் துடுப்பாட்டக் கோப்பைக்கான போட்டியில் 19 இலக்கினை வீழ்த்தி அதிக இலக்கினை வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.[6] 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாக்கித்தான் கோப்பைக்கான போட்டித் தொடரில் நான்கு போட்டியில் எட்டு இலக்குகளை வீழ்த்தி அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.[7]

சர்வதேச போட்டிகள்[தொகு]

2017 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் இவருக்கு இடம் கிடைத்தது. ஆனால் விளையாடும் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.[8] வாகையாளர் கோப்பை, 2017 தொடரில் வாய்ப்பு கிடைத்தது.[9]

சூன் 12, 2017 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். தனது முதல் போட்டியில் தினேஸ் சந்திமல் இலக்கினை முதல் இலக்காகக் கைப்பற்றினார்[10]. முன்னதாகப் பயிற்சிப் போட்டியில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 64 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 2 இலக்குகளால் வெற்றி பெற்றது..[11][12]

2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற சுதந்திரக் கோப்பைத் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். செப்டம்பர் 12, 2017 இல் ஆத்திரேலிய லெவன் அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[13]

அக்டோபர் 27, 2017 இல் சேக் சையத் துடுப்பாட்ட அரங்கத்தில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் ஹேட்ரிக் இலக்கினை வீழ்த்தினார்.இதன்மூலம் பன்னாட்டு இருபது 20 போட்டியில் ஹேட்ரிக் இலக்கினை வீழ்த்திய முதல் பாக்கித்தானிய வீரர் மற்றும் ஆறாவது சர்வதேச வீரர் எனும் சாதனை படைத்தார்.[14][15]

2018 ஆம் ஆண்டில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்திற்கு பாக்கித்தான் அணி சுற்றுப் பயணம்செய்து விளையாடியது. ஏப்ரல் மாதத்தில் தேர்வுத் துடுப்பாட்ட அணிக்கான பாக்கித்தான் அனியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மே11, 2018 இல் அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[16][17]

சூலை ,2018 ஆம் ஆண்டில் புலவாயோ , குயீன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அரங்கத்தில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் முதல் முறையாக ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.[18] ஆகஸ்டு மாதத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் இவருக்கு சிறந்த இளம் வீரருக்கான விருதினை வழங்கியது.[19]

சான்றுகள்[தொகு]

 1. "Meet the new faces in the Pakistan Test squad". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.
 2. "Faheem Ashraf". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 November 2015.
 3. "New central contracts guarantee earnings boost for Pakistan players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
 4. "PCB Central Contracts 2018–19". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
 5. Farooq, Umar. "Who is Faheem Ashraf?". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 May 2017.
 6. "Departmental One Day Cup, 2016/17: Most wickets". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 January 2017.
 7. "Pakistan Cup, 2017 Punjab: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 April 2018.
 8. "Kamran Akmal returns to Pakistan ODI and T20I squads". ESPN Cricinfo. 
 9. "Pakistan recall Azhar, Umar Akmal". ESPNcricinfo. 25 April 2017. http://www.espncricinfo.com/pakistan/content/story/1094602.html. பார்த்த நாள்: 25 April 2017. 
 10. "ICC Champions Trophy, 12th Match, Group B: Sri Lanka v Pakistan at Cardiff, Jun 12, 2017". ESPNcricinfo. 12 June 2017. http://www.espncricinfo.com/ci/engine/match/1022369.html. பார்த்த நாள்: 12 June 2017. 
 11. "ICC Champions Trophy warm-up: Fahim Ashraf’s knock of 64 guides Pakistan to two-wicket win over Bangladesh" (in en-US). The Indian Express. 27 May 2017. http://indianexpress.com/article/sports/cricket/pakistan-vs-bangladesh-pak-vs-ban-live-icc-champions-trophy-2017-score-warm-up-online-video-streaming-highlights-4676155/. 
 12. "Fahim's blistering knock steers Pakistan to win in CT warm-up vs BD – Cricket – Dunya News". dunyanews.tv. http://dunyanews.tv/en/Cricket/390315-Ashrafs-blistering-knock-steers-Pakistan-to-victo. 
 13. "1st Match (D/N), Independence Cup at Lahore, Sep 12 2017". ESPNcricinfo. 12 June 2017. http://www.espncricinfo.com/ci/engine/match/1117821.html. பார்த்த நாள்: 12 September 2017. 
 14. "Shadab stars as Pakistan beat Sri Lanka in nail-biting finish". GeoTV. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
 15. "Faheem Ashraf becomes first Pakistan bowler to take hat-trick in T20Is". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
 16. "Ireland win toss, opt to bowl in historic Test against Pakistan". Geo TV. பார்க்கப்பட்ட நாள் 12 May 2018.
 17. "Only Test, Pakistan tour of Ireland, England and Scotland at Dublin, May 11-15 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 May 2018.
 18. "Faheem Ashraf skittles Zimbabwe for 67 as Pakistan seal ODI series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 July 2018.
 19. "Fakhar Zaman steals PCB awards ceremony". www.brecorder.com. பார்க்கப்பட்ட நாள் 9 August 2018.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகீம்_அஷ்ரப்&oldid=2714407" இலிருந்து மீள்விக்கப்பட்டது