சூர்யகுமார் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூர்யகுமார் யாதவ்
Suryakumar.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சூர்யகுமார் அசோக் யாதவ்
பிறப்பு14 செப்டம்பர் 1990 (1990-09-14) (அகவை 31)
மும்பை, மகராஷ்டிரா, இந்தியா
பட்டப்பெயர்Surya, SKY [1]
மட்டையாட்ட நடைவலது கை ஆட்டக்காரர்
பந்துவீச்சு நடைRight-arm medium
பங்குதுடுப்பாட்டக்காரர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2010 – presentமும்பை கிரிக்கெட் கிளப்
2011 – 2013; 2018 – presentமும்பை இந்தியன்ஸ் (squad no. 77)
2014 – 2017கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (squad no. 212)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் தரம் LA இருபது20
ஆட்டங்கள் 77 93 158
ஓட்டங்கள் 5,326 2,447 3,255
மட்டையாட்ட சராசரி 39.68 35.46 31.29
100கள்/50கள் 10/20 2/10 0/13
அதியுயர் ஓட்டம் 200 134* 94*
வீசிய பந்துகள் 1154 418 132
வீழ்த்தல்கள் 24 6 6
பந்துவீச்சு சராசரி 22.91 60.00 23.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 4/47 2/20 2/11
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
101/- 53/- 76/-
மூலம்: ESPNcricinfo, 22 அக்டோபர் 2020

சூர்யகுமார் அசோக் யாதவ் (Suryakumar Ashok Yadav) (பிறப்பு: செப்டம்பர் 14, 1990) [2] இந்திய துடுப்பாட்ட வீரர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐ.பி.எல் வீரர் ஆவார். இவர் ஒரு வலது கை மட்டையாட்டக் காரர் மற்றும் அவ்வப்போது வலது கை நடுத்தர வேகப் பந்து வீச்சாளர் ஆவார். இவர் முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஒரு நடுத்தர குடும்பத்தில், யாதவ் மகாராஷ்டிராவின் தெருக்களில் விளையாடும்போது தனது திறமைகளை வளர்த்துக்கொண்டார். துடுப்பாட்ட விளையாட்டின் மீதான இவரது ஆர்வத்தைக் கண்ட இவரது தந்தை, இவரை செம்பூரில் உள்ள பார்க் காலனியில் உள்ள துடுப்பாட்ட முகாமில் சேர்த்தார்.

12 வயதில், இவரது பயிற்சியாளர் எச்.எஸ். காமத் யாதவ் விளையாட்டின் மீது கொண்ட அர்ப்பணிப்பைக் கண்டார். இவரைச் சிறந்த வீரராக வெற்றிபெற ஊக்கப்படுத்தினார். பின்னர் இவர் எல்ஃப் வெங்சர்கர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு இவருக்கு திலீப் வெங்சர்கர் வழிகாட்டினார். பின்னர் யாதவ் மும்பையின் அனைத்து வயதுக் குழு போட்டிகளிலும் விளையாடினார். [3]

தொழில்[தொகு]

சூரியகுமார் யாதவ் 2010-11 ரஞ்சி ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராகத் தனது முதல் தர விளையாட்டில் அறிமுகமானார். மும்பைக்காக 73 ஓட்டங்களைக் குவித்த இவர் மும்பையின் முதல் பாதியாட்டத்தில் 50க்கு மேல் ஓட்டங்கள் பெற்ற வீரர் என்ற பெருமையினைப் பெற்றார். இதிலிருந்து தொடர்ந்து இந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்து வருகின்றார்.[4] அக்டோபர் 2018இல், 2018–19 தியோதர் கோப்பைக்கான இந்தியா சி அணியிலும்[5] அக்டோபர் 2019இல், 2019–20 தியோதர் கோப்பைக்கான இந்தியா சி அணியிலும் இடம் பெற்றார். [6] .


இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]

இவரது திறமையின் காரணமாக 2012 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸிடமிருந்து ஐபிஎல் ஒப்பந்தத்தைப் பெற்றார். மூத்த வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா மற்றும் கீரோன் பொல்லார்ட் ஆகியோர் அணியிலிருந்ததால் இவருக்கு இந்த சீசன் முழுவதும் களத்தில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இளம் வீரர்களின் திறமைகளை மையமாகக் கொண்டு அணியை மீண்டும் உருவாக்க முயன்றததால், இவரை 2014 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிறுவனத்தினர் வாங்கினார். ஈடன் கார்டனில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஐபிஎல் 2015இல் ஒரு போட்டியில் 20 பந்து 46ஐ ஓட்டங்களை ஐந்து சிக்ஸர்களுடன் அணிக்கு வெற்றி தேடித் தந்தபோது தலைப்புச் செய்தியானார்.

அணியின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற இவர் ஐபிஎல் 7வது பதிப்பில் அனைத்து போட்டிகளிலும் விளையாடினார்.

2018 ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியினரால் ரூபாய் 3.2 கோடிக்கு வாங்கப்பட்ட இவர் மிகவும் மதிப்புமிக்க வீரர் ஆவார்.[7]

பன்னாட்டு ஒரு நாள் போட்டி[தொகு]

பிப்ரவரி 2021இல், இங்கிலாந்திற்கு எதிரான தொடருக்கான இந்தியாவின் இருபது-20 பன்னாட்டு (இ20) அணியில் இவரது பெயர் இடம்பெற்றது.[8] இது இந்திய கிரிக்கெட் அணிக்கு இவரது முதல் பன்னாட்டு அழைப்பு ஆகும்.[9]இவர் மார்ச் 20, 2021 அன்று இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவுக்காக தனது இ20 போட்டியில் அறிமுகமானார்.1 பின்னர் மார்ச் 18 அன்று தொடரின் நான்காவது ஆட்டத்தில் விளையாட முதல் வாய்ப்பைப் பெற்றார், மேலும் பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டியில் இவர் எதிர்கொண்ட முதல் பந்தி 6 ஓட்டங்கள் எடுத்தார். இ20 பன்னாட்டுப் போட்டியில் அறிமுக பந்தில் 6 ஓட்டங்கள் எடுத்த முதல் இந்தியரானார். மேலும் அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையினையும் பெற்றார்.[10][11] அடுத்த நாள், இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்தியாவின் ஒருநாள் பன்னாட்டு (ஒருநாள்) அணியில் இவர் இடம் பெற்றார்.[12] மூன்றாவது இடத்தில் விளையாடும் இவரது விளையாட்டு செயல்திறன் இவரை "எக்ஸ் காரணி" வீரராக விவரிக்க வழிவகுத்தது.[13]

ஜூன் 2021இல், இலங்கைக்கு எதிரான தொடருக்காக இந்தியாவின் ஒருநாள் பன்னாட்டு மற்றும் இருபது-20 பன்னாட்டு (இ20) அணிகளில் இவர் சேர்க்கப்பட்டார்.[14] இலங்கைக்கு எதிராக இந்தியாவுக்காக 2021 ஜூலை 18 அன்று ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.[15] ஜூலை 21, 2021 அன்று, யாதவ் இலங்கைக்கு எதிராக தனது முதல் ஒருநாள் அரைசதம் அடித்தார்.[16] இந்தியா இத்தொடரினை 3-2 என்ற வெற்றி அடிப்படையில் கைப்பற்றிய போது சூரியக்குமார் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.[17]

மேற்கோள்கள்[தொகு]

 1. https://zeenews.india.com/sports/cricket/ipl/ipl-2015-gautam-gambhir-lauds-suryakumar-yadav-nicknames-him-sky_1576098.html
 2. Suryakumar Yadav, ESPN Cricinfo. Retrieved 2012-01-19.
 3. "Suryakumar Yadav Biography, Achievements, Career Info, Records & Stats - Sportskeeda".
 4. Ranji Trophy Elite, 2011/12 - Mumbai ESPN Cricinfo. Retrieved 2012-01-19.
 5. "Rahane, Ashwin and Karthik to play Deodhar Trophy".
 6. "Deodhar Trophy 2019: Hanuma Vihari, Parthiv, Shubman to lead; Yashasvi earns call-up".
 7. "List of sold and unsold players".
 8. "India's squad for Paytm T20I series announced". Board of Control for Cricket in India.
 9. "2nd T20I (N), Ahmedabad, Mar 14 2021, England tour of India". ESPN Cricinfo. பார்த்த நாள் 14 March 2021.
 10. "Full Scorecard of India vs England 4th T20I 2020/21 - Score Report | ESPNcricinfo.com" (en).
 11. "With six off first ball in international cricket, Suryakumar Yadav achieves unique feat" (en).
 12. "Prasidh Krishna, Suryakumar Yadav earn call-ups for England ODIs" (en).
 13. Desk, India com Sports (2021-03-20). "'He Will Continue to Bat at No 3' - Kohli BACKS SKY Ahead of 5th T20I" (en).
 14. "Shikhar Dhawan to captain India on limited-overs tour of Sri Lanka". ESPN Cricinfo.
 15. "1st ODI (D/N), Colombo (RPS), Jul 18 2021, India tour of Sri Lanka". ESPN Cricinfo.
 16. "India vs Sri Lanka 2nd ODI Highlights: India ride on Deepak Chahar, Suryakumar Yadav fifties to win series" (en) (2021-07-20).
 17. https://tamil.news18.com/news/sports/cricket-ind-vs-sl-sri-lanka-just-about-manage-consolation-win-against-experimental-and-sloppy-india-mut-513383.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்யகுமார்_யாதவ்&oldid=3245799" இருந்து மீள்விக்கப்பட்டது