பிரசித் கிருஷ்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரசித் கிருஷ்ணா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்முரளிகிருஷ்ணா பிரசித் கிருஷ்ணா
பிறப்பு19 பெப்ரவரி 1996 (1996-02-19) (அகவை 25)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
உயரம்6 ft 2 in (1.88 m)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாப (தொப்பி 234)23 மார்ச் 2021 எ இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2015–தற்போது வரைகருநாடகம் துடுப்பாட்ட அணி
2018–தற்போது வரைகொல்கத்தா நைட் ரைடர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒபது முதது ப அது இ20
ஆட்டங்கள் 1 9 49 40
ஓட்டங்கள் 50 20 4
மட்டையாட்ட சராசரி 7.14 10.00 2.00
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 25 9* 2*
வீசிய பந்துகள் 49 1,480 2,218 836
வீழ்த்தல்கள் 4 34 85 33
பந்துவீச்சு சராசரி 13.50 20.26 22.62 35.84
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 4/54 5/49 6/33 4/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– 2/– 13/– 10/–
மூலம்: ESPN Cricinfo, 23 March 2021

பிரசித் கிருஷ்ணா (Prasidh Krishna பிறப்பு: பிப்ரவரி 19, 1996) ஓர் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்.இவர் கர்நாடகாவுக்காக உள்ளூர்த் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுகிறார். இவர் வலது கை விரைவு வீச்சாளர் ஆவார். [1] [2] ஐ.பி.எல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். [3] மார்ச் 2021 இல் இந்திய அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார். அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியில் 4 இலக்குளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

மூன்று முன்னணி கர்நாடக விரைவு வீச்சாளர்கள் இல்லாத நிலையில், வங்காளதேச அ-க்கு எதிரான சுற்றுப்பயண போட்டியில் கர்நாடகா அணிக்கு முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமான இவர் 49 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இலக்குகளை வீழ்த்தியதன் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். தனது முதல் பந்திலேயே ரோனி தாலுக்தாரை ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் அனமுல் ஹக், சௌமியா சர்க்கார் மற்றும் நசீர் உசைன் ஆகியோரின் இலக்குகளை வீழ்த்தி வங்காளதேச அணியினை 41 ஓட்டங்களில் 5 இலக்குகள் என்று கட்டுப்படுத்த உதவினார். இந்தப் போட்டியில் கர்நாடகா 4 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [4] [5]

இவர் பிப்ரவரி 25, 2017 அன்று 2016-17 விஜய் அசாரே கோப்பை தொடரில் கர்நாடகாவுக்காக தனது பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். [6] 21 ஜனவரி 2018 அன்று 2017–18 சையத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரில் கர்நாடகாவுக்காக தனது இருபது20போட்டியில் அறிமுகமானார். [7]

2018–19 விஜய் அசாரே கோப்பையில் கர்நாடகா அணிக்காக முன்னணி விக்கெட் வீழ்த்தியவராகத் திகழ்ந்தார். ஏழு போட்டிகளில் பதின்மூன்று இலக்குகளைக் கைப்பற்றினார். [8]

மார்ச் 2021 இல், இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்தியாவின் ஒருநாள் அணியில் அவர் இடம் பெற்றார். [9] 2021 மார்ச் 23 அன்று இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். [10] இவர் ஜேசன் ராய் என்பவரை முதல் இலக்காக வீழ்த்தினார். தனது முதல் போட்டியிலேயே 4 இலக்குகளைக் கைப்பற்றினார்.இந்தப் போட்டியில் இந்திய அணி 66 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

சான்றுகள்[தொகு]

  1. Players profile at Cricketarchive
  2. Players profile at ESPNcricinfo
  3. "Injured Kamlesh Nagarkoti ruled out of IPL season". ESPNcricinfo. http://www.espncricinfo.com/story/_/id/23163630/injured-kamlesh-nagarkoti-ruled-ipl-season. 
  4. "Dream debut for Prasidh Krishna". The Hindu. https://www.thehindu.com/sport/cricket/bangladesh-a-tour-of-india-ranji-trophy-champion-karnataka-versus-bangladesh-a/article7678333.ece. 
  5. "Tour Match, Bangladesh A tour of India at Mysore, Sep 22-24 2015". ESPNcricinfo. http://www.espncricinfo.com/series/11296/scorecard/918031/mysore-vs-bangladesh-a-tour-match-bangladesh-a-tour-of-india-2015-16. 
  6. "Vijay Hazare Trophy, Group D: Jharkhand v Karnataka at Kolkata, Feb 25, 2017".
  7. "Super League Group A, Syed Mushtaq Ali Trophy at Kolkata, Jan 21 2018".
  8. "Vijay Hazare Trophy, 2016/17 - Karnataka: Batting and bowling averages".
  9. "Prasidh Krishna called up for ODI series against England".
  10. "1st ODI (D/N), Pune, Mar 23 2021, England tour of India".

 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசித்_கிருஷ்ணா&oldid=3124172" இருந்து மீள்விக்கப்பட்டது