ஜேசன் ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேசன் ராய்
சிக்சர்ஸ் அணிக்காக ராய் விளையாடும் காட்சி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜேசன் ஜொனதான் ராய்
பிறப்பு21 சூலை 1990 (1990-07-21) (அகவை 33)
டர்பன், தென்னாப்பிரிக்கா
உயரம்1.82 m (6 அடி 0 அங்)
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை மிதம்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 691)24 ஜூலை 2019 எ. அயர்லாந்து
கடைசித் தேர்வு4 செப்டம்பர் 2019 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 238)8 மே 2015 எ. அயர்லாந்து
கடைசி ஒநாப14 ஜூலை 2019 எ. நியூசிலாந்து
இ20ப அறிமுகம் (தொப்பி 70)7 செப்டம்பர் 2014 எ. இந்தியா
கடைசி இ20ப27 அக்டோபர் 2018 எ. இலங்கை
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2008–தற்போதுசர்ரே
2012–2013சிட்டாகோங் கிங்ஸ்
2015சிட்னி தண்டர்
2016–2018சிட்னி சிக்சர்ஸ்
2017லாகூர் குவாலேன்டர்ஸ்
2017குஜராத் லயன்ஸ்
2018குவெட்டா கிளாடியேட்டர்ஸ்
2018டெல்லி டேர்டெவில்ஸ்
2018–தற்போதுநெல்சன் மண்டேலா பே கியான்ட்ஸ்
2019சில்ஹெட் சிக்சர்ஸ்
2020டெல்லி கேபிடல்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப இ20ப முத
ஆட்டங்கள் 5 84 32 86
ஓட்டங்கள் 187 3,381 743 4,832
மட்டையாட்ட சராசரி 18.7 42.79 23.21 36.88
100கள்/50கள் 0/1 9/18 0/4 9/23
அதியுயர் ஓட்டம் 72 180 78 143
வீசிய பந்துகள் 712
வீழ்த்தல்கள் 14
பந்துவீச்சு சராசரி 35.35
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 3/9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 31/– 5/– 74/–
மூலம்: ESPNCricinfo, 15 செப்டம்பர் 2019

ஜேசன் ஜொனாதன் ராய் (பிறப்பு: ஜூலை 21, 1990) என்பவர் ஆங்கிலத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இங்கிலாந்து அணிக்காக அனைத்து வடிவ பன்னாட்டுப் போட்டிகளிலும், சர்ரே அணிக்காக உள்நாட்டுப் போட்டிகளிலும் விளையாடுகிறார். இவர் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார்.[1] இங்கிலாந்து மட்டையாளர் ஒருவரின் மிக உயர்ந்த தனிநபர் ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். ராய் தற்போது (அக்டோபர் 2019) ஐசிசி வீரர்கள் தரவரிசைப்படி ஒருநாள் மட்டையாளர்கள் தரவரிசையில் பத்தாவது இடத்திலும், இ20ப மட்டையாளர்கள் தரவரிசையில் பதினேழாவது இடத்திலும் உள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் பிறந்த ஜேசன் ராய் தனது 10ஆம் அகவையின்போது தனது குடும்பத்துடன் இங்கிலாந்து நாட்டுக்குப் புலம்பெயர்ந்தார். வலது-கை மட்டையாளரான இவர், வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் தொடக்க வீரராகவும் முதல் வகுப்பு போட்டிகளில் நடுவரிசை வீரராகவும் விளையாடுகிறார். [2] 2014 செப்டம்பரில் இந்தியாவுக்கு எதிராக இருபது20 போட்டிகளிலும், மே 2015இல் அயர்லாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் 2019 ஜூலையில் அயர்லாந்துக்கு எதிராக தேர்வுப் போட்டிகளிலும் அறிமுகமானார். இவர் இ20ப வரலாற்றில் கள இடையூறு செய்ததற்காக ஆட்டமிழந்த முதல் வீரர் ஆவார்.

சாதனைப் பதிவுகள்[தொகு]

  • 2016 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக அலெக்ஸ் ஹேல்ஸ்-உடன் தொடக்கக் கூட்டணியில் இணைந்து 256 ஓட்டங்கள் எடுத்தார். இது ஒருநாள் போட்டிகளில் எந்த இழப்புமின்றி ஒரு அணியால் வெற்றிகரமாக எட்டப்பட்ட இலக்காக உள்ளது. மேலும் இது ஒருநாள் போட்டிகளில் எந்தவொரு இழப்பிற்கும் இங்கிலாந்து அணிக்குக் கிடைத்த மிக உயர்ந்த கூட்டாண்மையாகும்.
  • மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ராய் 180 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் இவரும் ஜோ ரூட்டும் கூட்டாக இணைந்து 220 பந்துகளில் 221 ஓட்டங்கள் எடுத்திருந்தனர். இதுவே இங்கிலாந்து அணியின் அதிகபட்ச 3வது-இழப்புக் கூட்டாண்மையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேசன்_ராய்&oldid=2891303" இருந்து மீள்விக்கப்பட்டது