காஞ்சிபுரம் இரண்யேசர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சிபுரம் இரண்யேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் இரண்யேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:இரண்யேசர்.

காஞ்சிபுரம் இரண்யேசர் கோயில் (இரண்யேசம்) என்று அறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். பதினாறு பட்டைகளுடன் கூடிய பெரும் சிவலிங்க மூர்த்தம் உடைய இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் காணப்படுகிறது.[1]

இறைவர், வழிபட்டோர்[தொகு]

தல வரலாறு[தொகு]

இவ்வுலகில் அனைத்து நன்மைகளும் பெறுவதற்குரிய மார்க்கம் சிவ பூசையே என்று, தன் குலகுருவான சுக்கிரரின் வாயிலாக அறிந்த இரணியன், தன்னுடைய மகன் பிரகலாதன், தன் தம்பி இரணியாட்சன் மற்றும் அவன் மகன் அந்தாசுரன் ஆகியோர்களோடு காஞ்சி நகரத்திற்கு வந்து அனைவரும் தத்தம் பெயரில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டமையால் இத்தலம் இரண்யேசம் எனும் வரலாறாக உள்ளது.[2]

தல விளக்கம்[தொகு]

இரணியேசம் என்பது, இரணியன் எனப் பெயரிய அவுணர் தலைவன் தனது, குலகுருவாகிய சுக்கிரனை வருவித்து வணங்கி, பிறர் எவரும் பெறாத திருவினையுடைய அரசு பெறற்குரிய உபாயம் யாதென வினவினன். சிவபூசனையே எவற்றையும் நல்கவல்லதெனவும், அரனைப் போற்றாத ஆக்கையும், பொறிகளும் பயப்பாடு உடையன அல்ல எனவும் குருவால் அறிவுறுக்கப்பெற்றனன் இரணியன். மேலும், தலங்கள் பலவற்றுள்ளும் காசியே சிறப்புடையது; அதனின் மிக்கது காஞ்சி எனவும் அறிந்தனன். பச்சிலையோ, பழம்போதோ யாதோ கொண்டு பேரன்போடும் செய்யப்பட வேண்டும் என்னும் கேள்விச் செல்வனாய் இரணியன், தன் தமையன் இரணியாக்கன், அவன் மகன் அந்தகன், தன் மகன் பிரகலாதன் வழிவந்த மைந்தர்கள், மனைவிமார் மற்றும் பலரொடும் காஞ்சியை அடைந்து அவரவரும் தம்தம் பெயரால் சிவலிங்கம் தாபித்துப் பூசிக்கத் தானும் "இரணியேசம்" எனத் தன் பெயரால் சிவலிங்கப் பதிட்டை செய்து அருச்சனை புரிந்தனன். மனிதராலும், விலங்காலும், ஏனைய சீவர்களாலும், நிலத்திலும், விண்ணிலும், கொடிய ஆயுதங்களாலும் உலர்ந்த ஈரிய இடங்களிலும் வீட்டிற்குப் புறத்திலும் அகத்திலும் இரவிலும் பகலிலும் ஆக இத்திறங்களில் இறவாமையும், மூவுலகை ஆளும் அரசும் வேண்டிய இரணியனுக்கு அவற்றை வழங்கினார் சிவபிரானார். உடன் போந்தவரும் தத்தம் மனத்திற்கினியன வேண்டிப் பெற்றனர். இரணியன் பூசித்த இரணியேசம் ஏனையோர் வழிபட்ட தலங்களோடும் உத்தமோத்தமமாய்ச் சிறக்கும். இத்தலம் சருவதீர்த்தத்தின் கிழக்குக் கரையிலுள்ளது.[3]

அமைவிடம்[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் சிவகாஞ்சி என்றழைக்கப்படும், பெரிய காஞ்சிபுரத்தின் தென்மேற்கு திசையிலுள்ள சர்வதீர்த்தன் குளத்தின் மேற்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து வேலூர் செல்லும் சாலையில் 1,½ கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]