உள்ளடக்கத்துக்குச் செல்

பிரேசர் இசுட்டோடார்ட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் பிரேசர் இசுட்டோடார்ட்டு
Sir Fraser Stoddart
பிறப்புசேம்சு பிரேசர் இசுட்டோடார்ட்டு
24 மே 1942 (1942-05-24) (அகவை 82)
எடின்பர்கு, இசுக்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம்
வாழிடம்ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா
தேசியம்பிரித்தானியர்
துறைபெருமூலக்கூறு வேதியியல்
பணியிடங்கள்குயின்சு பல்கலைக்கழகம் (1967–70)
செஃபீல்டு பல்கலைக்கழகம் (1970–1990)
பர்மிங்காம் பல்கலைக்கழகம் (1990–1997)
கலிபோர்னியா பல்கலைக்கழகம், இலாசு ஏஞ்சலசு (1997–2008)
நார்த்துவெசிட்டர்ன் பல்கலைக்கழகம் (2008– )
கல்வி கற்ற இடங்கள்எடின்பர்கு பல்கலைக்கழகம் (B.S., 1964, Ph.D., 1966)
ஆய்வு நெறியாளர்எடுமண்டு இலாங்கிலி கிர்சிட்டு
முனைவர் பட்ட 
மாணவர்கள்
தாவீது இலை
அறியப்படுவதுபுறவயமாக மாட்டுண்ட மூலக்கூற்றுக் கட்டமைப்புகள்
விருதுகள்[1]
துணைவர்
Norma Agnes Scholan
(தி. 1968; her death 2004)
[2][3][4]
பிள்ளைகள்2[2]
இணையதளம்
stoddart.northwestern.edu
இசுட்டோடார்ட்டு அறிவித்த பெருவளையத்துடனான (cyclobis(paraquat-p-phenylene) macrocycle) உரோட்டோக்சேன் (rotaxane) கட்டமைப்பு. (Eur. J. Org. Chem. 1998, 2565–2571.)
இசுட்டோடார்ட்டு அறிவித்த பெருவளையத்துடனான (cyclobis(paraquat-p-phenylene) macrocycle) காட்டனேனின் (catenane) கட்டமைப்பு (Chem. Commun., 1991, 634–639.)
இசுட்டோடார்ட்டு அறிவித்த மூலக்கூற்றுப் போரோமிய வளையங்களின் கட்டமைப்பு (Science 2004, 304, 1308–1312.)

சர் சேம்சு பிரேசர் இசுட்டோடார்ட்டு (Sir James Fraser Stoddart, பிறப்பு: மே 24, 1942[2]) ஓர் இசுக்காட்டுலாந்திய வேதியியல் அறிஞர். இவர் தற்பொழுது (as of 22 மார்ச்சு 2014) அமெரிக்காவின் வடகிழக்குப் பல்கலைக்கழக்கழகத்தில் வேதியியல் துறையில் பேராசிரியராக இருக்கின்றார்[5] இவர் பெருமூலக்கூற்று வேதியியல் (supramolecular chemistry) துறையிலும் நானோதொழினுட்பத் துறையிலும் ஆய்வு செய்கின்றார். இசுட்டோடார்ட்டு அவர்கள் புறவயமாக மாட்டுண்ட மூலக்கூற்றுக் கட்டமைப்புகள் அமைப்பதிலும், அதுவும் பயன்திறன்மை முறையில் அமைப்பதிலும் புகழீட்டியுள்ளார். இவற்றுள் மூலக்கூற்றுப் போரோமிய வளையங்கள், காட்டனேன்கள் (catenanes), உரோட்டாசேன் (rotaxane) குறிப்பிடத்தக்கன. மூலக்கூறுகளைத் தானாகவுணர்ந்து தாமாக கட்டமைத்துக்கொள்ளும் தன்மைகளைப் பயன்படுத்தி இவை அமைகக்ப்பெறுகின்றன. இந்த இடவியல் அமைப்புகளைப் பயன்படுத்தி மூலக்கூறு தொடுப்பிகள் (molecular switches), மூலக்கூற்று நகர்வியக்கிகள் (motor-molecules) செய்யமுடியும் எனக் காட்டியுள்ளார்.[6] இவருடைய ஆய்வுக்குழு இவற்றைப் பயன்படுத்தி நானோ நுண்மின்கருவிகளையும், நானோ மின்னகர்விய ஒருங்கியங்களையும் (nanoelectromechanical systems, NEMS) செய்துகாட்டியுள்ளது.[7] இவருடைய ஆய்வுச்செயற்பாடுகள் பல பரிசுகளையும் பெருமைகளையும் ஈட்டுத்தந்துள்ளது. 2007 இல் இவருக்கு அறிவியலுக்கான அரசர் பைசல் அனைத்துலகப் பரிசு [King Faisal International Prize)[8][9] வழங்கப்பெற்றது. 2016 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கும் பெர்னார்டு பெரிங்கா, இழான் பியர் சோவாழ்சு ஆகியோருக்குமாகச் சேர்த்து வழங்கப்பெற்றது.[1][10][11][12]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. 1.0 1.1 Staff (5 October 2016). "The Nobel Prize in Chemistry 2016". Nobel Foundation. http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2016/press.html. பார்த்த நாள்: 5 October 2016. 
  2. 2.0 2.1 2.2 STODDART, Sir (James) Fraser. Who's Who. Vol. 1997 (online ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் ed.). A & C Black, an imprint of Bloomsbury Publishing plc. (subscription required)
  3. "Alumnus Presents New Prize for PhD Students". University of Edinburgh. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
  4. "Norma Stoddart (Obituary)". The Scotsman. 16 February 2004 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225232730/https://www.scotsman.com/news/obituaries/norma-stoddart-1-513988. பார்த்த நாள்: 27 May 2016. 
  5. "Nanotechnology Star Fraser Stoddart to Join Northwestern". NewsCenter. Northwestern University. 2007-08-16.
  6. A. Coskun, M. Banaszak, R. D. Astumian, J. F. Stoddart, B. A. Grzybowski, Chem. Soc. Rev., 2012, 41, 19–30
  7. A. Coskun, J. M. Spruell, G. Barin, W. R. Dichtel, A. H. Flood, Y. Y. Botros, J. F. Stoddart. Chem. Soc. Rev., 2012, 41 (14), 4827–59.
  8. "Stoddart Wins King Faisal International Prize". Chemical & Engineering News 85 (12): 71. March 19, 2007. http://cen.acs.org/articles/85/i12/Stoddart-Wins-King-Faisal-International.html?type=paidArticleContent. பார்த்த நாள்: 26 May 2016. 
  9. "Fraser Stoddart is awarded the 2007 King Faisal International Prize for Science". California NanoSystems Institute. January 17, 2007. Archived from the original on பிப்ரவரி 10, 2007. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 5, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. Chang, Kenneth; Chan, Sewell (5 October 2016). "3 Makers of ‘World’s Smallest Machines’ Awarded Nobel Prize in Chemistry". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2016/10/06/science/nobel-prize-chemistry.html. பார்த்த நாள்: 5 October 2016. 
  11. Davis, Nicola; Sample, Ian (2016-10-05). "live". the Guardian. பார்க்கப்பட்ட நாள் 2016-10-05.
  12. The Nobel Prize in Chemistry 2016