பிருகஜபால உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Brihajjabala
A Shaiva sadhu marked with Bhasma lines
தேவநாகரிबृहजजाबाल
சமக்கிருத ஒலிப்பெயர்ப்புBṛhajjābāla
உபநிடத வகைShaiva[1]
தொடர்பான வேதம்அதர்வண வேதம்
அத்தியாயங்கள்8

பிருகஜபால உபநிடதம் ( Brihajjabala Upanishad ) ( சமக்கிருதம்: बृहज्जाबाल उपिनषद ) என்பது சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட சிறிய உபநிடதங்களில் ஒன்றாகும். இந்து நூலான அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ள இது, [2] 14 சைவ உபநிடதங்களில் ஒன்றாகும். [3]

இது திருநீறு அல்லது புனித சாம்பலை உற்பத்தி செய்யும் செயல்முறையை விவரிக்கிறது. உடலின் பல்வேறு பாகங்களில் அதை நீறணிதல் பற்றி விவரிக்கிறது. உருத்ராட்சத்தை பிரார்த்தனை மணிகள் என்றும் உரை குறிப்பிடுகிறது.

இந்து சமயம், இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அறிஞரான கிளாஸ் குளோஸ்டர்மேயர் இந்த உபநிடதத்தை பஸ்மஜபால உபநிடதம், உருத்ராக்சஜாபல உபநிஷத், காலாக்னி ருத்ர உபநிஷத் மற்றும் அக்சமாலிகா உபநிஷத்ஆகியவற்றுடன் சைவ நூல்களாக வகைப்படுத்துகிறார். [4]

வரலாறு[தொகு]

இந்த உரையை உருவாக்கிய தேதி மற்றும் ஆசிரியர் பற்றி தெரியவில்லை. இது இடைக்காலத்தின் பிற்பகுதியில், 12ஆம் நூற்றாண்டிற்குப் பிந்தைய கால உபநிடதமாக இருக்கலாம். மேலும் இது சுல்தான் தாரா சிகோவால் வெளியிடப்பட்ட 50 முக்கியமான இந்து உபநிடதங்களின் 17ஆம் நூற்றாண்டின் தொகுப்பின் ஒரு பகுதியாகவோ அல்லது வட இந்தியாவில் பிரபலமான 52 உபநிடதங்களின் 18ஆம் நூற்றாண்டுத் தொகுப்பின் ஒரு பகுதியாகவோ, அல்லது கோல்ப்ரூக்கால் வெளியிடப்பட்ட வட இந்தியாவில் பிரபலமான 52 உபநிடதங்களின் 18 ஆம் நூற்றாண்டின் தொகுப்பின் ஒரு பகுதியாகவோ அல்லது நாராயணாவின் தென்னிந்தியாவில் பிரபலமான உபநிடதங்களின் பிப்லியோதேகா இண்டிகா தொகுப்பிலோ இடம்பெறவில்லை. [5]

நவீன யுகத்தில் உள்ள முக்திகா நியதியின் 108 உபநிடதங்களின் தெலுங்கு மொழித் தொகுப்பில், இராமனால் அனுமனுக்கு விவரிக்கப்பட்ட இது வரிசை எண் 26-ல் [6] பட்டியலிடப்பட்டுள்ளது.

உள்ளடக்கம்[தொகு]

பிராமணங்கள் எனப்படும் 8 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது ஜபாலி முனிவரின் வழித்தோன்றலான பூசுந்த முனிவருக்கும் (இவ்வாறு ஜபால அழைக்கப்படுகிறது) - உரையில் சனகாதி முனிவர்களாக அடையாளம் காணப்பட்டவர் மற்றும் பைரவருடன் அடையாளம் காணப்பட்ட சிவனின் அழிவு வடிவமான பைரவர்(காலாக்னி உருத்திரன்) ஆகியோருக்குமிடையேயான உரையாடலாக இது உள்ளது. [7] [8]

முதல் பிராமணத்தில், பூசுந்த முனிவர் காலாக்னி உருத்திரனிடம் திருநீறு பற்றி சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறார். பிப்பலாதா முனிவர் எழுதிய உரைக்கு கடவுள் அவரை வழிநடத்துகிறார். மேலும் வேதத்தின் அறிவை கூறுமாறு பூசுந்தா வலியுறுத்துகிறார். காலாக்னி உருத்திரன் ஐந்து வகையான புனித சாம்பல் பற்றி கூறுகிறார். ஒவ்வொரு சாம்பலும் சிவனின் ஒரு வடிவம், ஒரு மகாபூதம் , ஒரு சக்தி, ஒரு பசு மற்றும் அதன் சாணம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. சிவனின் வடிவம் அவரது முகத்தில் இருந்து ஒரு உறுப்பு உருவாக்க விவரிக்கப்பட்டுள்ளது. தனிமத்தில் இருந்து, ஒரு சக்தி எழுகிறது, இது ஒரு வித்தியாசமான நிற பசுவை உருவாக்குகிறது, அதன் சாணத்தில் இருந்து புனித சாம்பல் உருவாக்கப்படுகிறது. மேலும், புனித சாம்பலின் பெயரின் தோற்றமும் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்பலை உருவாக்க பசுவின் சாணம் எரிக்கப்படுகிறது.
ஒரு சைவ சாது நெற்றியில் திருநீற்றுடன் உருத்ராட்ச மாலைகளை அணிந்துள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. Tinoco 1997, ப. 87-88.
  2. Farquhar, John Nicol (1920), An outline of the religious literature of India, H. Milford, Oxford university press, p. 364, ISBN 81-208-2086-X
  3. Tinoco 1997.
  4. Klostermaier 1984, ப. 134, 371.
  5. Deussen 1997, ப. 558-564.
  6. Deussen 1997, ப. 556-557.
  7. P. R. Ramachander. "Brihad Jabala Upanishad". Vedanta Spiritual Library இம் மூலத்தில் இருந்து 26 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120926095036/http://www.celextel.org/upanishads/atharva_veda/brihadjabala.html. 
  8. R. A. Sastri. "BRIHAT JABALOPANISHAT" இம் மூலத்தில் இருந்து 23 மார்ச் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150323132347/http://www.shaivam.org/english/sen-brihat-jabalopanishad.htm. 

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருகஜபால_உபநிடதம்&oldid=3679277" இருந்து மீள்விக்கப்பட்டது