சைவ உபநிடதங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைவ உபநிடதங்கள் (Shaiva Upanishads) என்பது சமசுகிருதத்தில் இயற்றப்பட்ட இந்து சமயத்தின் சிறிய உபநிடதங்களின் தொகுப்பாகும். குறிப்பாக சிவன் இறையியல் (சைவ சமயம்) பற்றியது. 108 உபநிடதங்கள் கொண்ட முக்திகா தொகுப்பில் 14 சைவ உபநிடதங்கள் உள்ளன.[1] அவை மற்ற சிறிய உபநிடதங்களுடன் பொதுவாக வேத பாரம்பரியத்தில் வேரூன்றிய பதின்மூன்று பண்டைய முதன்மை உபநிடதங்களிலிருந்து தனித்தனியாக வகைப்படுத்தப்படுகின்றன.[2]

சைவ உபநிடதங்கள், பொதுவான இயல்புடைய சாமான்ய உபநிடதங்கள், இந்து சமயத் துறவு மற்றும் துறவற நடைமுறையில் கவனம் செலுத்தும் சந்நியாச உபநிடதங்கள், யோகக் கலை தொடர்பான யோக உபநிடதங்கள், விஷ்ணுவின் அம்சங்களை முன்னிலைப்படுத்தும் வைணவ உபநிடதங்கள் சக்தியை சிறப்பித்துக் காட்டும் சாக்த உபநிடதங்கள் போன்ற சிறிய உபநிடதங்களின் மற்ற தொகுப்புகளில் இருந்தும் வேறுபடுகின்றன.[3][4]

சைவ உபநிடதங்கள் சிவனை மனோதத்துவ பிரம்மம் என்றும் ஆன்மா (சுயம்) என்றும் போற்றுகின்றன.[5] அதர்வசிரசு உபநிடதம் போன்ற சில நூல்கள் உருத்திரன் போன்ற மாற்று சொற்களை கூறுகிறது. மேலும் அனைத்து கடவுள்களும் எல்லோரும், எல்லாமே உருத்திரன் என்றும், உருத்திரன் என்பது எல்லாவற்றிலும் காணப்படும் கொள்கை, அவற்றின் உயர்ந்த குறிக்கோள், அனைத்து உண்மைகளின் உள்ளார்ந்த சாராம்சம். கண்ணுக்குத் தெரியாத அல்லது கண்ணுக்குத் தெரியாத எல்லா உண்மைகளின் உள்ளார்ந்த சாராம்சமாகும்.[5] என்றும் உபநிடதம் வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது. சில சைவ உபநிடதங்கள், சைவ சமயத்தில் உள்ள உடைகள், சடங்குகள் மற்றும் வழிபாட்டுப் பொருள்கள் பற்றிய அடையாளத்துடன் கூடிய பிரிவுகளை உள்ளடக்கியது.[6]

காலம்[தொகு]

சைவ உபநிடதங்கள் மற்றும் பிற சிறிய உபநிடதங்கள், பதின்மூன்று பெரிய முதன்மை உபநிடதங்களிலிருந்து ஒரு தனி துணைத் தொகுப்பாக இருப்பினும், சிறிய உபநிடதங்களுக்கான மதிப்பீடுகள் வேறுபடுகின்றன.[7] மகோனியின் கூற்றுப்படி, சிறிய உபநிடதங்கள் தோராயமாக பொ.ஊ.மு. 100 முதல் பொ.ஊ. 1100 வரையிலான் காலமாக இருக்கும்.[7] அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்ட பிரிவு உபநிடதங்கள் இரண்டாம் மில்லினியத்தில், சுமார் 16 ஆம் நூற்றாண்டு வரை இயற்றப்பட்டிருக்கலாம் என்று பேட்ரிக் ஆலிவெல் கூறுகிறார்.[8]

பதின்மூன்று முக்கிய உபநிடதங்களில் ஒன்றான சுவேதாசுவதர உபநிடதம் சிவன், உருத்திரன், அரன் மற்றும் பிற வேத தெய்வங்களையும், சாமக்கிய-யோகம் மற்றும் வேதாந்த தத்துவத்தையும் குறிப்பிடுகிறது.[9][10][11] சுவேதாசுவதர உபநிடதம் சைவமாகவோ அல்லது சிறிய உபநிடதமாகவோ கருதப்படவில்லை.[9][12][13]

நீலருத்ர உபநிடதம் என்பது சிவனை மையமாகக் கொண்ட ஒரு முக்கியமான உபநிடதமாகும். இது சிவனை ஆன்மாவின் அடையாளமாக வலியுறுத்தும் ஐந்து சிறிய உபநிடதங்களின் தொகுப்பாக இந்தியவியலாளர் டியூசன் குறிப்பிடுகிறார்.[14] இவை புராதன இந்து நூல்கள், நீலருத்ரா பழமையானது (சுவேதாசுவதர உபநிடதத்திற்கு நெருக்கமாக இயற்றப்பட்டது). ஆனால் ஐந்தில் மற்ற நான்கு உபநிடதங்களைப் போல முக்திகாவின் 108 உபநிடதங்களின் தொகுப்பில் நீலருத்ரா சேர்க்கப்படவில்லை.[14]

14 சைவ உபநிடதங்களின் பட்டியல்[தொகு]

முக்திகா தொகுப்பின் படி சைவ உபநிடதங்களின் பட்டியல்
தலைப்பு முக்திகா தொடர் # இணைக்கப்பட்ட வேதம் படைப்பின் காலம்
கைவல்ய உபநிடதம் 12 யசுர் வேதம் அதர்வண வேதமும் கூட பொ.ஊ.மு. 1 வது ஆயிரமாண்டு
அதர்வசிரசு உபநிடதம் 22 அதர்வண வேதம்] பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டு
அதர்வசிரசு உபநிடதம் 23 அதர்வண வேதம் பொ.ஊ.மு. 1 வது ஆயிரமாண்டு
பிருக்ச்சபால உபநிடதம் 26 அதர்வண வேதம் இடைக்காலத்தின் பிற்பகுதி, 12 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய காலம்
காலாக்னி ருத்ர உபநிடதம் 28 யசுர் வேதம் தெரியவில்லை
'தட்சிணாமூர்த்தி உபநிடதம் 49 யசுர் வேதம் தெரியவில்லை
சரப உபநிடதம் 50 அதர்வவேதம் தெரியவில்லை
அக்சமாலிகா உபநிடதம் 67 இருக்கு வேதம் இடைக்காலத்தின் பிற்பகுதி, பொ.ஊ. 12 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய
'உருத்ரஇருதய உபநிடதம் 85 யசுர் வேதம் தெரியவில்லை
பஸ்மஜபல உபநிடதம் 87 அதர்வண வேதம் இடைக்காலத்தின் பிற்பகுதி, 12 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய காலம்
உருத்ராக்சஜபல உபநிடதம் 88 அதர்வண வேதம் 10 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு
பஞ்சபிரம்ம உபநிடதம் 93 யசுர் வேதம் சுமார் பொ.ஊ. 7ஆம் நூற்றாண்டு
ஜபாலி உபநிடதம் 104 சாம வேதம்

இதனையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. Deussen 1997, ப. 556.
 2. Mahony 1998, ப. 271.
 3. William K. Mahony (1998). The Artful Universe: An Introduction to the Vedic Religious Imagination. State University of New York Press. பக். 271. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7914-3579-3. https://books.google.com/books?id=B1KR_kE5ZYoC. 
 4. Moriz Winternitz; V. Srinivasa Sarma (1996). A History of Indian Literature. Motilal Banarsidass. பக். 217–224 with footnotes. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-0264-3. https://books.google.com/books?id=JRfuJFRV_O8C. 
 5. 5.0 5.1 Deussen, Bedekar & Palsule (tr.) 1997, ப. 769.
 6. Klostermaier 1984, ப. 134, 371.
 7. 7.0 7.1 Mahony 1998, ப. 290.
 8. Olivelle 2008, ப. xxxiii.
 9. 9.0 9.1 Paul Deussen, Sixty Upanishads of the Veda, Volume 1, Motilal Banarsidass, ISBN 978-8120814684, pages 301–304, 317
 10. R Tsuchida (1985), Some Remarks on the Text of the Svetasvatara-Upanisad, Journal of Indian and Buddhist Studies (印度學佛教學研究), Vol. 34, No. 1, pages 460–468, Quote: "The Svetasvatara-Upanisad occupies a highly unique position among Vedic Upanisads as a testimony of the meditative and monistic Rudra-cult combined with Samkhya-Yoga doctrines."
 11. Max Muller, Shvetashvatara Upanishad, The Upanishads, Part II, Oxford University Press, pages 238-241
 12. Robert Hume (1921), Shvetashvatara Upanishad, The Thirteen Principal Upanishads, Oxford University Press, pages 400–402 with footnotes
 13. M Chakravarti (1995), The Concept of Rudra-Śiva Through the Ages, Motilal Banarsidas, ISBN 978-8120800533, pages 20–23 and Chapter 1
 14. 14.0 14.1 Deussen 1997, ப. 769 footnote 1, 783-787.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைவ_உபநிடதங்கள்&oldid=3606812" இருந்து மீள்விக்கப்பட்டது