குலாப் கௌர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலாப் கௌர்
குலாப் கௌர்
பிறப்புகுலாப் கௌர்
பக்சிவாலா கிராமம், சங்குரூர் மாவட்டம், பஞ்சாப், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிகதரியக்க விடுதலை வீராங்கனை

குலாப் கௌர் (Gulab Kaur) இவர் ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரராவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர், இந்தியாவின் பஞ்சாபின் சங்குரூர் மாவட்டத்தில் பக்சிவாலா கிராமத்தில் 1890 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருக்கு மான் சிங் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்கள், பிலிப்பைன்சின் மணிலாவில் குடியேறுவதற்கான நோக்கத்தில் அமெரிக்கா சென்றனர். [1] [2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

மணிலாவில், இவர் இந்தியத் துணைக் கண்டத்தை பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுவிக்கும் நோக்கத்துடன் இந்தியக் குடியேறியவர்களால் நிறுவப்பட்ட கதர் கட்சியில் சேர்ந்தார். [1]

கட்சி அச்சகத்தில் இவர் விழிப்புடன் இருந்தார். பத்திரிகையாளராக நடித்து, கதர் கட்சி உறுப்பினர்களுக்கு ஆயுதங்களை விநியோகித்தார். சுதந்திர இலக்கியங்களை விநியோகிப்பதன் மூலமும், கப்பல்களின் இந்திய பயணிகளுக்கு எழுச்சியூட்டும் உரைகளை வழங்குவதன் மூலமும் கதர் கட்சியில் சேர மற்றவர்களை இவர் ஊக்குவித்தார். [2]

சுமார் ஐம்பது கதரியக்கவாதிகளுடன் இவர், பிலிப்பீன்சின் கதரியக்க வாதிகளின் எஸ்.எஸ். கொரியா தொகுப்பில் சேர்ந்து இந்தியாவுக்குப் பயணம் செய்தனர். சிங்கப்பூரில் எஸ்.எஸ். கொரியாவிலிருந்து தோஷா மரு வரை மாறினர். இந்தியாவை அடைந்த பிறகு, இவர் வேறு சில புரட்சியாளர்களுடன் கபுர்த்தலா, கோசியார்பூர், ஜலந்தர் போன்ற கிராமங்களில் தீவிரமாக செயல்பட்டு, நாட்டின் சுதந்திரத்திற்காக ஆயுதப் புரட்சிக்காக மக்களை அணிதிரட்டினார். [3]

தேசத்துரோகச் செயல்களுக்காக லாகூரிலும், பின்னர் பிரித்தானிய இந்தியாவிலும், இப்போது பாக்கித்தானிலும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். [1] [2] எஸ் கேசர் சிங் என்பவர் 2014 இல் வெளியிட்ட பஞ்சாபியில் கதர் தி தே குலாப் கவுர் என்ற தலைப்பில் இவரைப் பற்றி ஒரு புத்தகம் கிடைக்கிறது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Gulab Kaur-A Great Punjabi Woman". Uddari Weblog. பார்க்கப்பட்ட நாள் 2015-06-28.
  2. 2.0 2.1 2.2 "Trailblazers". SikhChic. Archived from the original on 2015-07-01. பார்க்கப்பட்ட நாள் 2015-06-28.
  3. Gill, M. S. (2007) (in en). Trials that Changed History: From Socrates to Saddam Hussein. Sarup & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788176257978. https://books.google.com/books?id=z0SOfZwnXZIC&pg=PA90&lpg=PA90&dq=gulab+kaur&source=bl&ots=IiuMX4pvD6&sig=ofqCbrwTHL04eeU1Fd_yQQCNG5o&hl=en&sa=X&ved=0ahUKEwj4pobY0uLVAhXGpo8KHQmxCbs4ChDoAQhBMAU#v=onepage&q=gulab%20kaur&f=false. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-07-07. பார்க்கப்பட்ட நாள் 2020-09-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாப்_கௌர்&oldid=3550779" இலிருந்து மீள்விக்கப்பட்டது