காசாபிளாங்கா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காசாபிலங்கா (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காசாபிளாங்கா
Casablanca
இயக்கம்மைக்கேல் கர்டிஸ்
தயாரிப்புஹால் வால்லிஸ்
திரைக்கதைஜூலியஸ் எப்ஸ்டீன்
பில்லிப் எப்ஸ்டீன்
ஹாவர்ட் கோச்
இசைமாக்ஸ் ஸ்டீனர்
நடிப்புஹம்ப்ரி போகார்ட்
இங்க்ரிட் பர்க்மேன்
பால் ஹென்ரேயிட்
ஒளிப்பதிவுஆர்தர் எட்சன்
படத்தொகுப்புஓவன் மார்க்ஸ்
கலையகம்வார்னர் சகோதரர்கள்
விநியோகம்வார்னர் சகோதரர்கள்
வெளியீடுநவம்பர் 26, 1942 (1942-11-26)(வெளியீடு)
சனவரி 23, 1943 (பொது வெளியீடு)
ஓட்டம்102 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$964,000
மொத்த வருவாய்$3.7 மில்லியன்
(அமேரிக்கா)

காசாபிளாங்கா (Casablanca) 1942 இல் வெளியான அமெரிக்கத் காதல்-நாடகத் திரைப்படமாகும். ஹால் வால்லிஸ் என்பவரால் தயாரிக்கப்பட்டு மைக்கேல் கர்டிஸ் என்பவரால் இயக்கப்பட்டது. ஹம்ப்ரி போகார்ட், இங்க்ரிட் பர்க்மேன், பால் ஹென்ரேயிட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.

1962 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம் இப்படத்தின் சாயலில் ஒட்டி எடுக்கப்பட்டதாகும்.[1]

கதை[தொகு]

மொரொக்கோவின் தலைநகரான காசாபிளாங்காவில் கேளிக்கை விடுதியை நடத்திவரும் அமெரிக்கனான ரிக்கும் பாரிசில் அவனைச் சந்திக்கும் இல்ஸாவும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். ஆனால், இரண்டாம் உலகப் போரும், பிரான்ஸில் நாசிக்களின் ஆக்கிரமிப்பும் ஏற்பட்ட பிறகு அவர்கள் பிரிய வேண்டியுள்ளது. இல்ஸா ஏற்கெனவே விக்டரைத் திருமணம் செய்துகொண்டவள். ஆனால், நாஜிகளால் விக்டர் கொல்லப்பட்டிருப்பான் என்று கருதி ரிக்கின் துணையை நாடியிருந்ததுடன் அவனை உண்மையாகக் காதலிக்கவும் செய்கிறாள். ஆனால், விக்டர் உயிருடன் இருப்பது தெரிய வந்ததுமே அவனுடன் காஸாப்ளாங்காவுக்குத் தப்பி வருகிறாள். தனது கேளிக்கை விடுதியில் அவர்கள் இருவரையும் ஒருசேரக் கண்டதும் ரிக் அதிர்ச்சியடைகிறான். இல்ஸா அவனிடம் உண்மையைச் சொல்கிறாள். ஆயினும் இருவருக்குமிடையே ஏற்பட்டிருந்த காதல் உணர்வு தணியாமல் உள்ளது. உகார்தோ அவனிடம் கொடுத்திருந்த இரண்டு அனுமதிச் சீட்டுகள் அவனிடம் உள்ளன. அவை திருடப்பட்டவை என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால், அவை மிகவும் மதிப்பு வாய்ந்தவை என்பதால், அவற்றைத் தனது கேளிக்கை விடுதி பியானோவுக்குள் ஒளித்து வைத்திருக்கிறான் ரிக். அவை இரண்டையும் பயன்படுத்தித் தன்னுடன் இல்ஸாவை லிஸ்பனுக்கு அழைத்துச் செல்ல அவன் திட்டமிடுகிறான். ஆனால், இத்தாலிய பாசிஸ்டுகளுக்கு எதிராகப் போரிட்ட எத்தியோப்பியர்களுக்குத் துப்பாக்கிகளைக் கடத்திக்கொண்டு சென்றவனும் ஸ்பெயினில் ஜெனெரல் ஃப்ராங்கோவின் பாசிஸத்துக்கு எதிராகப் போர் புரிந்தவனுமான அவன் இறுதியில் காதலைத் துறந்து அந்த இரண்டு அனுமதிச் சீட்டுகளையும் விக்டருக்கும் இல்ஸாவுக்கும் கொடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பித்துச் செல்வதற்கு உதவுகிறான்.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த ஒளிப்பதிவிர்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் பாட்டிர்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

  1. "முக்கோணக் காதல் கதைகளின் மன்னன்". இந்து தமிழ். 22 சூலை 2020. பார்க்கப்பட்ட நாள் 3 அக்டோபர் 2020.

வெளி இணைப்புகள்[தொகு]