கசாரா, பாக்கிஸ்தான்

கசாரா ( Hazara) என்பது வடக்கு பாக்கிஸ்தானில் உள்ள ஒரு பகுதியாகும். கைபர் பக்துன்வா மாகாணத்தின் கசாரா பிரிவுக்குள் நிர்வாக ரீதியாக வருகிறது. இப்பகுதி முக்கியமாக இந்த்கோ மொழி பேசும் இந்த்கோவன் மக்களால் ஆதிக்கம் செலுத்துகிறது. பிராந்தியத்தின் பூர்வீக இனக்குழுக்களான இவர்கள் பெரும்பாலும் " கசாரேவால் " என்று அழைக்கப்படுகிறார்கள்.
சொற்பிறப்பியல்
[தொகு]பேரரசர் அலெக்சாந்தரின் படையெடுப்பின் போது இப்பகுதியின் மன்னராக இருந்த அபிசாரர்களின் நாடான அபிசாராவுடன் கசாரா என்ற பெயரின் தோற்றம் அடையாளம் காணப்பட்டுள்ளது. [1] பிரித்தானிய தொல்லியல் ஆய்வாளர் ஆரல் இசுடெயின் இது சமசுகிருதப் பெயரான உராசா அல்லது 'உராஷா' என்பதிலிருந்து பெறப்பட்டதாகக் கருதுகிறார். [1] இருப்பினும், 1399 இல் தைமூர் இதன் கட்டுப்பாட்டை வைத்திருந்த பிறகுதான் இப்பகுதி கசாரா என்று அறியப்பட்டது. மேலும் இதை அவரது உள்ளூர் தலைவர்களான கசாரா-இ-கர்லுக் என்பவர்களிடன் ஒதுக்கினார். [2]
வரலாறு
[தொகு]பேரரசர் அலெக்சாந்தர், வடக்கு பஞ்சாபின் சில பகுதிகளை கைப்பற்றிய பிறகு, கசாராவின் பெரும்பகுதியில் தனது ஆட்சியை நிறுவினார். அலெக்சாந்தரின் விநியோகத் தளமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரமான ஆர்னோஸ் அருகே அர்ரியன் மற்றும் தோலமியின் புவியியலில் குறிப்பிடப்பட்டுள்ள எம்போலினாவுடன் ஆம்ப் பகுதியும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. [3] அர்ரியனின் கூற்றுப்படி, அலெக்சாந்தரின் காலத்தில் இப்பகுதியின் ஆட்சியாளர் அர்சேக்ஸ் என்று அழைக்கப்பட்டார். [4]
சந்திரகுப்த மௌரியரின் எழுச்சிக்குப் பிறகு, இப்பகுதி மௌரியப் பேரரசின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அசோகர் இப்பகுதியை ஒரு இளவரசராக, சுமார் 272 கி.முவில் தனது ஏகாதிபத்திய சிம்மாசனத்தின் கீழ் கொண்டு வந்தார். அவர் இதை தனது அரசாங்கத்தின் முக்கிய இடங்களில் ஒன்றாக ஆக்கினார். மன்செரா பாறைக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட கட்டளைகள், அசோகரின் பதினான்கு ஆணைகளைப் பதிவுசெய்து, பேரரசரின் தர்மம் அல்லது நீதியான சட்டத்தின் அம்சங்களை முன்வைக்கின்றன. இவை துணைக் கண்டத்தில் உள்ள மறைகுறியாக்கப்பட்ட எழுத்துக்களின் ஆரம்பகால சான்றுகளில் சிலவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. கிமு மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, கரோஸ்தி எழுத்தில் வலமிருந்து இடமாக எழுதப்பட்டுள்ளன. [5]
மத்திய மற்றும் தெற்காசியா முழுவதும் பௌத்த மதத்தை ஊக்குவித்த இந்தோ-பார்த்தியர்கள், இந்தோ-சிதியர்கள் மற்றும் குசானர்கள் உட்பட பல ஆட்சியாளர்களால் இப்பகுதி சுருக்கமாகவும் பெயரளவிற்கும் கட்டுப்படுத்தப்பட்டது. இப்பகுதி பௌத்த ஆட்சியாளர் கனிஷ்கரின் கீழ் அதன் உச்சத்தை எட்டியது. குசானர்கள் காலத்தில், பௌத்த கலை மற்றும் கட்டிடக்கலை இப்பகுதியில் செழித்து வளர்ந்தன. [6]

சுற்றுலா
[தொகு]பாக்கித்தானில் சுற்றுலாத் துறையின் உயர் மட்டத்தில் கசாரா உள்ளது. [7] காரகோரம் நெடுஞ்சாலையில் புகழ்பெற்ற ககன் பள்ளத்தாக்கு, லுலுசர் ஏரி, பாலாகோட், நரான், ஷோக்ரான், அயூபியா தேசியப் பூங்கா மற்றும் பாபுசர் கணவாய் உள்ளிட்ட இடங்கள் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடங்களாக உள்ளன. [8] இப்பகுதி அதன் இயற்கை அழகு மற்றும் நிலப்பரப்புகளுக்கு பிரபலமானது. இதன் விளைவாக உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே கோடைகாலத்தில் பயணிகள் வந்து செல்லும் பிரபல இடமாக உள்ளது. [9]
இதனையும் பார்க்கவும்
[தொகு]சான்றுகள்
[தொகு]34°50′N 73°14′E / 34.833°N 73.233°E
வெளி இணைப்புகள்
[தொகு]- கைபர் பக்துன்வா மாகாணத்தின் இணையதளம் பரணிடப்பட்டது 2009-08-14 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 1.0 1.1 Heckel, Waldemar; Tsouras, Peter G. (2021-06-30). Who's Who in the Age of Alexander and his Successors: From Chaironeia to Ipsos (338-301 BC) (in ஆங்கிலம்). Greenhill Books. p. 2. ISBN 978-1-78438-651-1.
- ↑ Kohli, M. S. (2003). Miracles of Ardaas: Incredible Adventures and Survivals (in ஆங்கிலம்). Indus Publishing. pp. 26–27. ISBN 978-81-7387-152-8.
- ↑ Holdich, Thomas (2020-07-25). The Gates of India (in ஆங்கிலம்). BoD – Books on Demand. p. 59. ISBN 978-3-7523-3718-1.
- ↑ Brill, E. J. (1993). E.J. Brill's First Encyclopaedia of Islam: 1913-1936 (in ஆங்கிலம்). BRILL. pp. 297–298. ISBN 978-90-04-09789-6.
- ↑ Department of Archaeology and Museums (2004-01-30). "UNESCO world heritage Centre - Mansehra Rock Edicts". Whc.unesco.org. Retrieved 2011-03-30.
- ↑ Ancient Pakistan. Chairman, Department of Archaeology, University of Peshawar. 1971.
- ↑ "Hazara division continues to receive influx of tourists". The Express Tribune (in ஆங்கிலம்). 2022-05-09. Retrieved 2023-05-02.
- ↑ "Tourists throng scenic Hazara division". Daily Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-23. Retrieved 2023-05-02.
- ↑ "Tourists throng scenic Hazara division". Daily Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-23. Retrieved 2023-05-02.