அபிசாரர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபிசாரர்கள் (Abisares or Abhisara (अभिसार);[1] கிரேக்க மொழியில் டயடோரஸ் சிகுலஸ் என்பவரால் எபிசரர் என அழைக்கப்பட்டனர்.[2] அபிசாரர் காஷ்மீர் மக்களின் அரசர் ஆவார்.[3] அபிசாரர்கள் ஹைதஸ்பெஸ் ஆற்றுக்கு அப்பால் உள்ள மலைப்பகுதிகளை ஆட்சி புரிந்தவர் ஆவார்.

காஷ்மீரின் அபிசார மன்னர், அலெக்சாண்டருடன் கூட்டுச் சேர்ந்து, தானேஸ்வரத்தை தலைநகராக கொண்டு, பஞ்சாப் பகுதிகளை ஆண்ட இந்தியப் பேரரசர் புருசோத்தமனை கி மு 326-இல் வெற்றி கொண்டனர்.[4] கி மு 325-இல் மன்னர் அபிசாரரின் இறப்பிற்குப் பின், அலெக்சாண்டர் அவரது மகனை அபிசாரின் வாரிசாக ஏற்றுக் கொண்டார்.[5][6][7][8]

வரலாறு[தொகு]

அபிசாரர்கள் தற்கால பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பெஷாவர் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இராச்சியத்தை நிறுவினர். அருச்சுனன் அபிசாரர்களை வென்று அவரகளது இராச்சியத்தைக் கைப்பற்றினார்[9] இருப்பினும், டாக்டர் ஸ்டெயினின் கூற்றுப் படி, அபிசாரர்களின் இராச்சியம் விதஸ்தா எனும் ஜீலம் ஆற்றுக்கும், சந்திரபாகா எனும் செனாப் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்தது. மேலும் தற்கால காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தையும் கொண்டிருந்தது.[10][11]

அபிசார இராச்சியம் குறித்தான பண்டைய பரத கண்டத்தின் மகாபாரதம் மற்றும் காஷ்மீர பண்டிதரான கல்ஹானர் எழுதிய இராஜதரங்கிணி போன்ற நூல்கள் மூலம் அறிய முடிகிறது.

இதிகாச காலத்திலும், பௌத்தர்களின் காலத்திலும், அபிசார இராஜ்ஜியம் பண்டைய காம்போஜ மகாஜனபதமாக இருந்தது. அடிப்படையில் பண்டைய அபிசார இராஜ்ஜியம், தற்கால ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டம், ரஜௌரி மாவட்டம் மற்றும் பாகிஸ்தானின் சௌசேரா மாவட்டங்களைக் கொண்டிருந்தது.[12][13][14]

மேற்கோள்கள்[தொகு]

 1. Chisholm, Hugh (1910). "மூன்றாம் அலெக்சாண்டர் (பேரரசர் அலெக்சாந்தர்)". Encyclopædia Britannica Eleventh Edition 1.  
 2. Diodorus, Bibliotheca, xvii. 90
 3. "The Tribes and Castes of Bombay". google.com.
 4. Flavius Arrianus Hist., Phil., Alexandri anabasis Book 5, chapter 20, section 5, line 4 ανδρον ἔπεμψε, χρήματά τε κομίζοντα καὶ ἐλέφαντας τεσσαράκοντα δῶρον Ἀλεξάνδρῳ.
 5. Waldemar Heckel: Who’s who in the age of Alexander the Great. Prosopography of Alexander’s empire. Blackwell, Oxford 2006, ISBN 978-1-4051-1210-9 (excerpt online).
 6. Strabo Geogr., Geographica Book 15, chapter 1, section 28, line 11
 7. Διοδ. ΙΖ, 87
 8. Curt, VIII, 43, 13. XLVII, 1. IX, 1, 7, X, 3, 20
 9. (Mahabharata, Sabha-Parva,Ch.27;JASD.(1852)p. 234)
 10. Encyclopaedia of ancient Indian geography By Subodh Kapoor-page-3
 11. "Encyclopaedia of Ancient Indian Geography". google.co.in.
 12. Political History of Ancient India: From the Accession of Parikshit to the Extinction of the Gupta Dynasty, 1953, p 248, Hemchandra Raychaudhuri, University of Calcutta
 13. The Mahābhārata, Its Genesis and Growth: A Statistical Study, 1986, p 115, M. R. Yardi, Bhandarkar Oriental Research Institute - Mahābhārata; Military History of India, 1980, p 38, Hemendra Chandra Kar - History
 14. Journal of Indian History, 1969, p 123, University of Kerala Dept. of History, University of Allahabad Dept. of Modern Indian History, University of Travancore, University of Kerala - India.

பிற ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிசாரர்கள்&oldid=3707146" இலிருந்து மீள்விக்கப்பட்டது