இந்த்கோ மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்த்கோ மொழி
ہندکو
நாடு(கள்)பாகிஸ்தான்
பிராந்தியம்கைபர் பக்துன்வா, பஞ்சாப்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
50 இலட்சம் (2017)  (date missing)[1]
அரபு & பாரசீக எழுத்துமுறை
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
பாகிஸ்தான்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3Either:
hnd — தெற்கு இந்த்கோ
hno — வடக்கு இந்த்கோ
2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த்கோ மொழியை தாய் மொழியாகக் கொண்ட பாகிஸ்தானிய மாவட்டங்கள்

இந்த்கோ மொழி (Hindko) (ہندکو, பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் 50 இலட்சம் மக்களால் பேசப்படுகிறது.[2] கைபர் பக்துன்வா மாகாணத்தின் அப்போட்டாபாத் மாவட்டம், கோஹாட் மாவட்டம், ஹரிபூர் மாவட்டம், மன்செரா மாவட்டம், பெசாவர் மாவட்டம், பஞ்சாப் மாகாணத்தின் இஸ்லாமாபாத், சிந்து மாகாணத்தின் மலிர் மாவட்டம், கராச்சி தெற்கு மாவட்டம் மற்றும் கெமாரி மாவட்டங்களில் இந்த்கோ மொழி கனிசமாக பேசப்படுகிறது. 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த்கோ மொழி 2.44% மக்களால் பேசப்படுகிறது.

இந்திய ஆரிய மொழிகளில் ஒன்றான இந்த்கோ மொழி, மேற்கு பஞ்சாபி மொழி பேச்சு வழக்கையும், அரபு & பாரசீக எழுத்துமுறையும் கொண்டுள்ளது.[3]

இந்த்கோ மொழி மேற்கு பஞ்சாபி மொழி மற்றும் சராய்கி மொழிகளுடன் பரஸ்பரம் ஒத்துப்போகிறது.[4] [5]

இந்த்கோ மொழி என்பதற்கு இந்தியர்கள் பேசும் மொழி என பஷ்தூ மொழி பேசுபவர்களால் பெயரிடப்பட்டது.[6] (Shackle 1980, ப. 482)

மேற்கோள்கள்[தொகு]

  1. தெற்கு இந்த்கோ reference at எத்னொலோக் (16th ed., 2009)
    வடக்கு இந்த்கோ reference at எத்னொலோக் (16th ed., 2009)
  2. For the heterogeneity of the dialects, see (Rensch 1992, ப. 53); (Masica 1991, ப. 18–19); (Shackle 1980, ப. 482). For the ethnic diversity, see (Rensch 1992, ப. 10–11)
  3. "CCI defers approval of census results until elections". 28 May 2018. https://www.dawn.com/news/1410447. 
  4. Rahman 1996, ப. 211.
  5. Shackle 1979, ப. 200–1.
  6. Shackle 1980, ப. 482; Rensch 1992, ப. 3–4.

உசாத்துணை[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்த்கோ_மொழி&oldid=3844498" இலிருந்து மீள்விக்கப்பட்டது