அயூபியா தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அயூபியா தேசிய பூங்கா (ஆங்கிலம்:Ayubia National Park) பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் அபோட்டாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள 3,312 ஹெக்டேர் (33 கிமீ 2) பரப்பளவுள்ள் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.[1] இது 1984 ஆம் ஆண்டில் ஒரு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது.[2] பாகிஸ்தானின் இரண்டாவது அதிபரான முஹம்மது அயூப் கான் (1958-1969) என்பவரின் நினைவாக அயூபியா பெயரிடப்பட்டது. இப்பகுதி மிதவெப்ப ய்ய்சியிலைக் காடு மற்றும் மிதமான அகலமான மற்றும் கலப்பு வன சுற்றுச்சூழல் வாழ்விடங்களை கொண்டுள்ளது. இது சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 8,000 அடி (2,400 மீ) உயரத்தில் உள்ளது.[3]

அயூபியா தேசிய பூங்கா ஏழு முக்கிய கிராமங்கள் மற்றும் தாண்டியானி, நாத்தியகலி மற்றும் கான்ஸ்பூர் ஆகிய மூன்று சிறிய நகரங்களால் சூழப்பட்டுள்ளது.[4] கல்யாட்டில் உள்ள கைரா காலி, சாங்லா கலி, கான்ஸ்பூர் மற்றும் கோரா டாக்கா ஆகிய நான்கு சிறு விடுமுறை விடுதிகளின் கலவையிலிருந்து இந்த பூங்கா ஒரு விடுதி வளாகமாக உருவாக்கப்பட்டுள்ளது.[5] தற்போது, இதை கைபர் பக்துன்வா அரசாங்கத்தின் வனவிலங்கு மற்றும் பூங்காக்கள் தினைக்களத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் கிழக்கு மூலையில் 1984 ஆம் ஆண்டில் அயூபியா தேசிய பூங்கா நிறுவப்பட்டது. 1998 ஆம் ஆண்டில் இது அதன் அசல் அளவு 1,684 எக்டேர்கள் (4,161 ஏக்கர்கள்) [6] 16.84 கிலோ மீட்டர் முதல் 3,312 எக்டேர்கள் (8,184 ஏக்கர்கள்) வரை விரிவாக்கப்பட்டது . அப்போதிருந்து இதை கைபர் பக்துன்வா வனவிலங்குத் தினைக்களம் நிர்வகித்து வருகிறது. அதை நிறுவுவதன் நோக்கம் மிதமான காடுகளைப் பாதுகாப்பதாகும். முதலில், இந்த பூங்கா 857 ஏக்கர்கள் (3.47 km2) இருந்தது, ஆனால் 1998 ஆம் ஆண்டில் இது 1,685 ஏக்கர்கள் (6.82 km2) என விரிவாக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அயூபியா மற்றும் சுற்றியுள்ள கிராமங்களின் மொத்த மக்கள் தொகை 2,311 வீடுகளில் 18,097 பேர் வாழ்கின்றனர்.

காலநிலை[தொகு]

நடைபாதை, அயூபியா தேசியப் பூங்கா

பூங்காவின் காலநிலை கோடைகாலத்திலும் குளிர்ச்சியாக இருக்கும், ஆனால் குளிர்காலத்தில் குளிர் அதிகமாக இருக்கும். மே மற்றும் சூன் மாதங்களில் இது மிகவும் வெப்பமாக இருக்கும். சூலை பிற்பகுதியிலும் ஆகஸ்ட் மாத தொடக்கத்திலும் பருவமழை பெய்யும் போது குளிர் ஏற்படுகிறது. குளிர்காலத்தில் மேற்கு காற்று மழை பெய்யும் வரை படிப்படியாக தீவிரத்தன்மை அதிகரிக்கும், இது இறுதியில் பனியாக மாறும். குளிர்காலத்தின் பிற்பகுதியில் இந்த பூங்கா பனி மூடிக் காணப்படும்.

வனவிலங்கு[தொகு]

இந்த பூங்காவில் 104 வகையான தாவரங்கள் உள்ளன. முக்கிய மலர் இனங்கள் தேவதாரு, நீல பைன் மரம், இயூ, சில்வர் பிர் மரங்கள், குதிரை செச்னெட் மற்றும் கருவாலி மரம் போன்ற பலவகையான் தாவர இனங்கள் உள்ளன. 19 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 21 தாவரங்கள் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றவை. இவற்றில் பல மஞ்சள் காமாலை, வயிற்றுப் புண், பாம்பு கடித்தல், உட்புற நோய்த்தொற்றுகள், நீரிழிவு நோய், தடிப்புத் தோல் அழற்சி மற்றும் பலவற்றின் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. சில தாவரங்கள் புற்றுநோய்க்கு எதிரான விளைவையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சில உயிரியல் பூச்சிக்கொல்லிகள் மற்றும் தீங்குயிர்க் கொல்லிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன, பெரும்பாலும் அவற்றின் பூச்சி விரட்டும் தன்மை காரணமாக. இயற்கைக்கான உலகளாவிய நிதியம் இங்கு " பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கான வழிமுறையாக தாவர வளங்களின் நிலையான பயன்பாட்டை நிரூபிக்க" ஒரு இன-தாவரவியல் முயற்சியைத் தொடங்கியுள்ளது.

இந்த பூங்காவில் 203 வகையான பறவைகள் உள்ளன. தங்க கழுகு, கழுகு, யூரேசிய குருவி மற்றும் மலை புறா உள்ளிட்ட பல வகையான பறவைகளை இங்கே காணலாம். இந்தப் பகுதி இது சில அரிதான இமயமலை மயில் போன்ற ஒரு பறவையினங்களான காலிச், கோக்லாச், வான் கோழிகள் போன்ற அரிதான சில இனங்களும் இங்கு காணப்படுகின்றன. அயூபியா தேசிய பூங்காவில் இந்திய சிறுத்தை, மலை நரி மற்றும் பறக்கும் அணில் போன்ற 31 வகையான பாலூட்டிகளும் காணப்படுகிறது. ஊர்வன மற்றும் நீர்வாழ் இனங்களில், காஷ்மீர் பாறை பல்லி, அரணை மற்றும் இமயமலை குழி விரியன் ஆகியவற்றை இங்கு காணலாம்.

மேலாண்மை[தொகு]

இந்த பூங்காவை கைபர் பக்துன்க்வா வனவிலங்கு துறை 1975 கைபர் பக்துன்க்வா வனவிலங்கு சட்டத்தின் கீழ் நிர்வகித்து வருகிறது. பூங்காவின் தலைமையகம் அபோட்டாபாத்திலிருந்து லிருந்து 50 கி.மீ தூரத்திலும், முர்ரியிலிருந்து 25 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ள துங்கா காலியில் உள்ளது.

சுற்றுலா[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் 100,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அயூபியா தேசிய பூங்காவிற்கு வருகிறார்கள். இது சுற்றுலா இடங்களுக்கு நன்கு அறியப்பட்டதாகும். இந்த தேசிய பூங்காவில் அயூபியாவிலிருந்து நாத்தியகலி வரை இயங்கும் "நடைபாதை" ஒன்று 4 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்தப் பூங்காவைச் சுற்றி 7 கிராமங்களும் 4 முக்கிய நகரங்களும் இருப்பதால், இந்த பகுதி ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். என்வே, பூங்காவைச் சுற்றி ஏராளமான தங்கும் விடுதிகளும் உணவகங்களும் உள்ளன. சவாரி தடங்கள், நடைபயண இடங்கள், சுற்றுலா இடங்கள் மற்றும் விடுதிகள் தவிர, அயூபியாவில் ஒரு "லிப்ட்" வசதி உள்ளது, இது சுற்றுலாப் பயணிகளை அருகிலுள்ள முகேசுபுரி என்ற மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறது. இது பாக்கிஸ்தானில் இந்த வகையான முதல் பொழுதுபோக்கு வசதியாக இருந்தது, இது உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு முக்கிய ஈர்ப்பாகும். பாகிஸ்தான் சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் புகழ்பெற்ற விடுதி ஒன்று இங்கே அமைந்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. Khan, Ibrahim (July 14, 2010). "Improving Sub-Watershed Management and Environmental Awareness in the Ayubia National Park". wwf.panda.org. WWF - Pakistan. Archived from the original on 1 September 2010. Retrieved September 15, 2010.
  2. "Country Report on Plant Genetic Resources for Food and Agriculture - Pakistan" (PDF). parc.gov.pk. Pakistan Agricultural Research Council. Archived from the original (PDF) on January 18, 2012. Retrieved September 8, 2010.
  3. "Ayubia National Park". tourism.gov.pk. Tourism, Government of Pakistan. Archived from the original on October 15, 2011. Retrieved September 15, 2010.
  4. "Ayubia National Park". wildlifeofpakistan.com. 2002. Archived from the original on 31 August 2010. Retrieved September 14, 2010.
  5. "Ayubia National Park". nathiagali.com. Nathiagali. Archived from the original on August 4, 2009. Retrieved September 15, 2010.
  6. "Review of 'Protected Areas System' in Pakistan: Present status and problems concerning future development (Page 9)" (PDF). dergiler.ankara.edu.tr. 2010. Retrieved September 8, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயூபியா_தேசியப்_பூங்கா&oldid=2868145" இலிருந்து மீள்விக்கப்பட்டது