பண்டார் சன்வே

ஆள்கூறுகள்: 3°4′3″N 101°36′12″E / 3.06750°N 101.60333°E / 3.06750; 101.60333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டார் சன்வே
மாநகரம்
Bandar Sunway
Sunway City
பண்டார் சன்வே
பண்டார் சன்வே
பண்டார் சன்வே is located in மலேசியா
பண்டார் சன்வே
பண்டார் சன்வே
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 3°4′3″N 101°36′12″E / 3.06750°N 101.60333°E / 3.06750; 101.60333
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்பெட்டாலிங் மாவட்டம்
நகராண்மைகோலாலம்பூர் மாநகர் மன்றம்
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
மலேசிய அஞ்சல் குறியீடு47500
இணையதளம்mpsj.gov.my

பண்டார் சன்வே அல்லது சன்வே மாநகரம் (ஆங்கிலம்: Bandar Sunway அல்லது Sunway City; மலாய்: Bandar Sunway; சீனம்: 双威镇); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள மாநகரம். மலேசியாவில் மிகப் பெரிய நகரங்களில் பண்டார் சன்வே மாநகரமும் ஒன்றாகும்.[1]

பண்டார் சன்வே மாநகரம் 800 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. தனித்த ஒரு மாநகரமாக இயங்கி வருகிறது. இருப்பினும் சுபாங் ஜெயா - கோலாலம்பூர் ஆகிய இரு பெரும் மாநகரங்களுக்கு இடையில் பிணைக்கப்பட்டு உள்ளது.

1997-ஆம் ஆண்டில், சன்வே குரூப் (Sunway Group) எனும் நிறுவனம் சன்வே மாநகரத்தை உருவாக்கியது. சன்வே எனும் சொல் சுங்கைவே (Sungai Way) எனும் பெயரில் இருந்து திரிந்து வந்த சொல்லாகும்.

பொது[தொகு]

சன்வே பிரமிட் நுழைவாயில்
சன்வே லகூன் கேளிக்கைப் பூங்கா

மலேசியாவின் முதல் பெரும் வணிகப் பூங்கா மற்றும் பெரும் பொழுதுபோக்கு மையமாக சன்வே பிரமிட் (Sunway Pyramid), ஜூலை 1997-இல், சன்வே மாநகரத்தில் திறக்கப்பட்டது. அந்த வணிக வளாகத்தின் நுழைவாயிலில் எகிப்திய (Ancient Egypt) பிரமிடு சிங்கம்; காவல் காப்பது போல ஒரு வடிவச் சிலை அமைக்கப்பட்டது.

அந்தச் சிலைதான், இன்றைய வரையில் அந்த வணிக மையத்தின் அடையாளச் சின்னமாகத் திகழ்கின்றது. சன்வே மாநகரத்தின் மையத்தில் சன்வே லகூன் (Sunway Lagoon) எனும் கேளிக்கை பூங்கா உள்ளது.

உயர்க்கல்வி மையங்கள்[தொகு]

இந்தப் பூங்கா மலேசியாவின் மிகப்பெரிய நீர்ப் பூங்காவைக் கொண்டு உள்ளது. தவிர பல்வேறு வகையான கேளிக்கைப் பூங்காக்களும் உள்ளன. பன்னாட்டு உணவகங்கள், பன்னாட்டு வங்கிகள் மற்றும் பிற வணிக கட்டிடங்களும் உள்ளன.

சன்வே மாநகரம் உயர்க்கல்வி மையமாகவும் அறியப்படுகிறது. அப்பகுதியில் இரண்டு பெரிய பல்கலைக்கழகங்கள் உள்ளன. தவிர தனியார் கல்லூரிகளும் உள்ளன.

  • மோனாஷ் பல்கலைக்கழகம் மலேசியா (Monash University Malaysia)
  • சன்வே பல்கலைக்கழகம் (Sunway University)
  • சன்வே கல்லூரி (Sunway College)
  • லீ கார்டன் பிளிவ் மலேசியா (Le Cordon Bleu Malaysia)
  • தி ஒன் அகடமி (The One Academy)

தனியார் மருத்துவமனைகள்[தொகு]

இங்கு இரு பெரிய தனியார் மருத்துவமனைகள் உள்ளன. மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற மருத்துவமனைகளாக அறியப் படுகின்றன. அவை:

  • சன்வே மருத்துவ மையம் (Sunway Medical Centre)
  • சைம் டார்பி மருத்துவ மையம் (Sime Darby Medical Centre).

முன்பு இந்த மருத்துவமனை சுபாங் ஜெயா மருத்துவ மையம் (Subang Jaya Medical Centre) என்று அழைக்கப்பட்டது.

அமைவு[தொகு]

சன்வே PJS 11 28 சாலை
சன்வே ரிசோர்ட் தங்கும் விடுதி

பண்டார் சன்வே (Bandar Sunway), சுபாங் ஜெயா மாநகர்ப் பகுதியில் ஒரு பகுதியாகும். சுபாங் ஜெயா மாநகர்ப் பகுதியில் SS12 முதல் SS19 வரை; PJS7 / PJS9 / PJS11 வரையிலான குடியிருப்புப் பகுதிகள் உள்ளன.

1970-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர், சுபாங் ஜெயா ஒரு கிராமப் பகுதியாக இருந்தது. கிள்ளான் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது. அதன் பின்னர் சுபாங் ஜெயா, பெட்டாலிங் மாவட்டத்தின் கீழ் வந்தது.[2]

சுபாங் ஜெயா வரலாறு[தொகு]

சுபாங் ஜெயாவின் வீட்டு மேம்பாட்டுத் திட்டம், சைம் யூ.இ.பி. புரபர்டிஸ் நிறுவனத்தினால் (Sime UEP Properties Berhad) 1976 பிப்ரவரி 21-இல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் உலகளாவிய சைம் டார்பி (Sime Darby) நிறுவனத்துக்குச் சொந்தமானது.[3]

சுபாங் ஜெயா மேம்பாட்டுத் திட்டம்[தொகு]

சுபாங் ஜெயா மனை மேம்பாட்டுத் திட்டம், 1988-இல் முடிவடைந்தது. இது ஒரு பெரிய வீட்டு மேம்பாட்டுத் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் பல்லாயிரம் வீடுகள் கட்டப் பட்டன. முன்பு பெட்டாலிங் ஜெயா நகராட்சிக்கு உட்பட்ட சுபாங் ஜெயா நகர்ப்பகுதி, சீபீல்டு ரப்பர் தோட்டமாக (Seafield Estate) இருந்தது.[4]

சுபாங் ஜெயா வீட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதும், அதே சைம் டார்பி நிறுவனம் புதிதாக யூஎஸ்ஜே (USJ) எனும் வீடமைப்புத் திட்டத்தைத் தொடக்கியது.

சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம்[தொகு]

சைம் டார்பி நிறுவனத்தின் புதிய யு.எஸ்.ஜே. (USJ) திட்டமும் சுபாங் ஜெயா நகர்ப்புறத்தில் தான் இருந்தது. பின்னர் 1999-ஆம் ஆண்டில், சுபாங் ஜெயாவின் தெற்கு முனையில் புத்ரா அயிட்ஸ் (Putra Heights) எனும் மற்றொரு பெரும் வீடமைப்புத் திட்டமும் உருவானது. சுபாங் ஜெயா குறுகிய காலத்தில் அபாரமாக வளர்ச்சி பெற்றது.[5]

அந்த வகையில் 1997-ஆம் ஆண்டில், சுபாங் ஜெயா மாநகரம்; நகராட்சி எனும் தகுதியைப் பெற்றது. அதன் பின்னர், முன்பு இருந்த பெட்டாலிங் மாவட்ட நகராண்மைக் கழகம் (Petaling District Council) எனும் பழைய பெயர்; சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் (Subang Jaya Municipal Council) என மாற்றம் செய்யப்பட்டது.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Amazing Sunway City". Archived from the original on 29 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  2. "Malaysia, Malaya, Selangor 1950, Land Use, South Sheet, 1950, 1:126 720". பார்க்கப்பட்ட நாள் 22 October 2020.
  3. "THE fifth largest city/town in the country by population and a major township in Selangor, the Municipality of Subang Jaya (MPSJ) which comprises the original Subang Jaya as well as its extension, UEP Subang Jaya (commonly referred to as USJ), parts of bandar Sunway and Putra Heights, has grown and evolved from a rubber plantation known as Seafield Estate into a vibrant and popular self-contained township in the state". பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
  4. "Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources - Southeast Asia Visions: SEAFIELD ESTATE. The proprietors of this property are the Sea-field Rubber Company, Ltd., of Singapore. Originally the estate was owned privately, but it was floated as a public company on February 8th, 1907. The estate has a total area of 2,848 acres 25 roods. Of these 238 acres were planted with Para rubber in 1904". seasiavisions.library.cornell.edu. பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
  5. Rafee, Hannah; August 29, E. Jacqui Chan / The Edge Malaysia (29 August 2019). "Subang Jaya comprises SS12 to SS19, Taman Wangsa Baiduri, Taman Mutiara Subang and Taman Bukit Pelangi. In the late 1980s, Sime UEP Properties Bhd also developed an extension of the Subang Jaya township, UEP Subang Jaya, or better known as USJ. USJ is made up of 27 sections (USJ 1 to USJ 27) besides USJ 3A to 3D, Subang Heights and USJ Heights". The Edge Markets. பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டார்_சன்வே&oldid=3628721" இலிருந்து மீள்விக்கப்பட்டது