ராம்நகர், உதம்பூர்
இராம்நகர் | |
---|---|
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் ராம்நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 32°49′N 75°19′E / 32.82°N 75.32°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | உதம்பூர் |
தோற்றுவித்தவர் | மன்னர் இராம் சிங் |
பெயர்ச்சூட்டு | மன்னர் இராம் சிங் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | ராம்நகர் நகராட்சி |
ஏற்றம் | 601 m (1,972 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,292 |
மொழிகள் | |
• வட்டார மொழி | தோக்ரி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 182119-24 |
தொலைபேசி குறியீடு | 01990 |
வாகனப் பதிவு | JK 14 |
இணையதளம் | udhampur.nic.in |
இராம்நகர் (Ramnagar), வட இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இங்கு இராம்நகர் கோட்டை உள்ளது. இந்நகரத்தில் தாவி ஆறு பாய்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 601 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது ஜம்மு நகரத்திற்கு வடகிழக்கே 94 கிலோ மீட்டர் தொலைவிலும்; உதம்பூர் நகரத்திற்கு தென்கிழக்கே 36 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 13 வார்டுகளும், வீடுகளும் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 6,292 ஆகும். அதில் ஆண்கள் 3,237 மற்றும் பெண்கள் 3,055 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 944 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.89% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 81.64% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 96.27%, இசுலாமியர் 3.31% மற்றும் பிறர் 0.43% ஆகவுள்ளனர்.[1]